திமுகவில் இணைந்த ரஜினி மக்கள் மன்ற செயலாளர்கள்...

திமுகவில் இணைந்த ரஜினி மக்கள் மன்ற செயலாளர்கள்...
ரஜினி மக்கள் மன்றத்தின் செயலாளர்கள் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் முன்னிலையில் இன்று திமுகவில் இணைந்தனர்.

கடந்த ஜூலை 12 தேதி நடிகர் ரஜினிகாந்த், தனது ரஜினி மக்கள் மன்ற மாவட்ட செயலாளர்களுடன் ஆலோசனை நடத்தி, அரசியலில் ஈடுபடும் எண்ணம் தமக்கு  இல்லை என்றும் ரஜினி மக்கள் மன்றம் கலைக்கப்படுவதாகவும் தெரிவித்தார்.

இதனையடுத்து ரஜினி மக்கள் மன்றத்தின் 3 மாவட்டச் செயலாளர்கள், மகளிர் அணி, வர்த்தகர் அணி, வழக்கறிஞர் அணி மற்றும் இளைஞர் அணி செயலாளர்கள் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் முன்னிலையில் இன்று திமுகவில் இணைந்தனர்.

Find Us Hereஇங்கே தேடவும்