இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 42,766 பேருக்கு கொரோனா பாதிப்பு! இதோ முழு விவரம்

இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 42,766 பேருக்கு கொரோனா பாதிப்பு! இதோ முழு விவரம்

இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 42,766 பேர் கொரோனா தொற்றால் புதிதாக பாதிக்கப்பட்டுள்ளனர்.இறப்பு எண்ணிக்கை 1,206 ஆக பதிவாகியுள்ளது, இதுவரையிலும் மொத்த பாதிப்பு எண்ணிக்கை 3,07,95,716 ஆக உள்ளது.

நாடு முழுவதும் கொரோனா தொற்று பாதிப்பு அதிகரித்து வருவதால் மக்கள் அன்றாட வாழ்க்கைக்கே  சிரமப்பட்டு வருகின்றனர்.இந்தியாவில் தற்போது கொரோனா தொற்று சற்று குறைந்து வருகிறது.கடந்த 24 மணி நேரத்தில் 42,766 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.இது நேற்றைய பாதிப்பை விட ஆயிரம் குறைவு. கொரோனாவால் நாடு முழுவதும் இதுவரை 3,07,95,716 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

இதில் கடந்த 24 மணி நேரத்தில் இறப்பு எண்ணிக்கை 1,206 ஆக பதிவாகியுள்ளது. இதுவரை இந்தியாவில் 4,07,145 பேர் உயிரிழந்துள்ளனர்.தொற்றில் இருந்து ஒரே நாளில் 45,254 பேர் குணமடைந்துள்ளனர்.இதுவரை இந்தியாவில் மொத்தம் குணமடைந்தோர் எண்ணிக்கை 2,99,33,538 ஆக உயர்ந்துள்ளது.இந்தியாவில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட 4,55,033 பேர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Pollsகருத்துக் கணிப்பு

Overview

Related Videosதொடர்புடைய வீடியோ See Allஅனைத்தும் பார்க்க

Find Us Hereஇங்கே தேடவும்