சார்கோலை வீட்டிலேயே எப்படி தயாரிக்கலாம்!

சார்கோலை வீட்டிலேயே எப்படி தயாரிக்கலாம்!
சார்கோலை வீட்டிலேயே எப்படி தயாரிக்கலாம்!

சார்கோலை வீட்டிலேயே எப்படி தயாரிக்கலாம்!

சார்கோலை வீட்டிலேயே எப்படி தயாரிக்கலாம்!

1.      சார்க்கோலை வீட்டில் தயாரிக்க விரும்புபவர்கள் தயாரிக்கும்முறையை பார்க்கலாம். கரி கிடைத்தால் அதை வாங்கி நன்றாக பொடித்து கொள்ளுங்கள். பொடிநன்றாக நைஸாக இருக்க வேண்டும். அல்லது மெல்லிய துணியில் சலித்து எடுத்துகொள்ளுங்கள்.

இதனுடன் கால்சியம் குளோரைடு(கடைகளில் கிடைக்கும்) எடுத்துகொள்ளுங்கள். ஒரு பங்கு கால்சியம் குளோரைடு அளவுக்குமூன்று பங்கு தண்ணீர் எடுத்து நன்றாக கலந்து விடுங்கள். பிறகு கரித்தூளில் இதை சிறிதுசிறிதாக சேர்த்து நன்றாக பேஸ்ட் போல் குழைத்து கொள்ளுங்கள். இறுக்கமாகவும் இருக்க வேண்டாம்.அதிக தளர்வாகவும் இருக்க வேண்டாம். நார்மலாக பேஸ்ட் போல் குழைத்து கொள்ளுங்கள்.

பிறகு அகலமான தட்டில் இதைசமமாக ஊற்றி நன்றாக காயவிடுங்கள். அவை உதிராக ஆனதும் மீண்டும் அதை தண்ணீரில் அலசி எடுத்துஓவனில் 30 நிமிடங்கள் வைத்து பேக் செய்யுங்கள். இப்போது ஆக்டிவேட்டர் சார்க்கோல் தயாராகிவிடும்.

2.      கரித்தூளை வாங்கி உடனடியாக பயன்படுத்தவும் செய்யலாம்.கரியை தூள் செய்து நன்றாக பொடித்து கொள்ளுங்கள். முட்டையை உடைத்து அதன் வெள்ளை கருவைமட்டும் தனியாக பிரித்து அதனுடன் சுத்தமான தேன் எடுத்து பீட்டரில் நன்றாக அடித்து கொள்ளுங்கள்.பிறகு கரித்தூளை தூவினாற் போல் அதில் கலந்து நன்றாக குழைத்து கொள்ளுங்கள்.

ஐந்து நிமிடங்கள் கழித்துமுகத்தில் இதை அப்ளை செய்யுங்கள். முகத்தை சுத்தமான தண்ணீரில் கழுவி உலர விட்டு போடுங்கள்.30 நிமிடங்கள் கழித்து முகத்தை கழுவி விடுங்கள். கரித்தூளுடன் களிமண், பேக்கிங் சோடா,ஒரு டீஸ்பூன் பாதாம் எண்ணெய் கலந்து நன்றாக குழைத்து முகத்தில் பூசி 15 நிமிடங்கள்கழித்து முகத்தை கழுவுங்கள்.

சருமத்துக்கு பொலிவு தருகிறது.சருமத்தின் மூன்று அடுக்குகள் வரை ஊடுருவி உள் இருக்கும் அழுக்கை உறிஞ்சுகிறது. சருமத்தில்இருக்கும் நச்சுகளை வெளியேற்றவும் உதவுகிறது.

முகத்தில் கரும்புள்ளி,வெண்புள்ளி, பருக்கள், வேனில் கட்டிகள் போன்றவை சருமத்தின் அடியில் தங்கியிருக்கும்பாக்டீரியா தொற்றால் உருவாகின்றன. இவை தான் முகத்தில் கரும்புள்ளிகளை உண்டாக்கும்.இந்த பாக்டீரியா தொற்றை வெளியேற்றி முகத்தை மாசு மருவில்லாமல் வைக்க சார்க்கோல் உதவுகிறது.சருமத்தின் நிறத்தையும் அதிகரிக்கிறது.

வாரத்துக்கு இரண்டு முறைக்குமேல் இதை பயன்படுத்த வேண்டாம். வறண்ட சருமம் இருப்பவர்கள் இதை அதிகம் பயன்படுத்த வேண்டாம்.

Related Stories

No stories found.
logo
Kumudam Publications Private Limited
www.kumudam.com