உயிரை பணயம் வைத்து பாம்புக்கு உயிர் கொடுத்த நபர்!

உயிரை பணயம் வைத்து பாம்புக்கு உயிர் கொடுத்த நபர்!

ஒரு நபர் ஸ்ட்ராவை பயன்படுத்தி தன் வாயிலிருந்து பாம்பின் வாய்க்கு  காற்று ஊதி அந்த பாம்பை காப்பாற்றிய சம்பவம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

ஒடிசாவில் மல்கன்கிரி மாவட்டத்தில ஒரு நச்சுப் பாம்பு வீட்டுக்குள் நுழைந்ததால் அந்த ஊர் பகுதி மக்கள் பீதி அடைந்தனர்.இந்த சம்பவம் குறித்து சினேகாஷிஷ்  என்பவருக்கு தகவல் கொடுக்கப்பட்டது.தகவல் கிடைத்ததும்  மீட்பு குழுவுடன் அந்த பகுதியை வந்தடைந்தனர்.

சினேகாஷிஷ் வெளியே எடுத்து வந்து பாம்பை தரையில் வைத்தபோது நாகத்தின் உடலில் எந்த அசைவும் இல்லை. சில மணி  நேரத்துக்கு பிறகு, நாகத்தின் உடலில் ஒரு இயக்கம் இருந்தது, 

பாம்புக்கு ஆக்ஸிஜனை தேவைப்படுகிறது என்பதை உணர்ந்து கொண்டார் சினேகாஷிஷ் .அதன் பிறகு  அவர் கையைப் பயன்படுத்தி பாம்பின் வாயைப் பிடித்து, ஸ்ட்ராவின் ஒரு முனையை தனது வாயிலும், மறு முனையை பாம்பின் வாயிலும் வைத்தபின பாம்பின் வாயில் காற்றை கொடுக்க தொடங்கினார்.

 அந்த நபர்  தன்னுடைய உயிரை பணயம் வைத்து அந்த பாம்பை மீட்டுள்ளார்.உயிரினங்களின் உயிரை காப்பாற்றும் அந்த சிறுவனின் செயல் மக்களிடையே நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Find Us Hereஇங்கே தேடவும்