தொடர்ந்து வரும் வாட்ஸ்அப் சர்ச்சை... இந்திய அரசுக்கு எதிராக 'வாட்ஸ்அப் நிறுவனம்' வழக்கு; மத்திய அரசு விளக்கம்

தொடர்ந்து வரும் வாட்ஸ்அப் சர்ச்சை... இந்திய அரசுக்கு எதிராக 'வாட்ஸ்அப் நிறுவனம்' வழக்கு; மத்திய அரசு விளக்கம்

மத்திய அரசு கடந்த பிப்ரவரி மாதம் கூகுள், ஃபேஸ்புக், வாட்ஸ்அப், இன்ஸ்டாகிராம் போன்ற சமூக ஊடகங்களை கட்டுப்படுத்தும் விதமாக புதிதாக தகவல் தொழில்நுட்ப  விதிகளை கொண்டு வந்தது. இதற்கு சமூக ஊடகங்கள் ஒத்துழைத்து  நடக்க ஒப்புதல் அளிக்க மே 25-ம் தேதி வரை அவகாசம் தரப்பட்டது. இதற்கு கூகுள், ஃபேஸ்புக் சமூக வலைத்தளங்கள் சம்மதம் தெரிவித்த பிறகு தங்கள் சேவையைத் தொடர்கின்றன. ஆனால் வாட்ஸ்அப் நிறுவனம் மத்திய அரசின் சட்டவிதிகள், பயனர்களின் தனி உரிமையை பாதிக்கும் என்று கருதுவதால்  மத்திய அரசின் இந்த சட்ட விதிகளுக்கு எதிராக டெல்லி உயர்நீதிமன்றத்தில் வழக்கும் தொடர்ந்துள்ளது.

இந்த நிலையில் மத்திய அரசின் தகவல் தொழில்நுட்பத்துறை அமைச்சகம் நேற்று ஒரு விளக்க அறிக்கையை வெளியிட்டது. அந்த அறிக்கையில் , வழிகாட்டுதல்களுக்கு எதிராக வாட்ஸ்அப் கடைசி நேரத்தில் வழக்கு தொடுத்திருக்கிறது.இது விதிமுறைகளை நடைமுறைப்படுத்துவதைத் தடுப்பதற்கான முயற்சி என்றும்  தனி உரிமையை அரசு அடிப்படை உரிமை என்று அங்கீகரிக்கிறது. அதை தனது குடிமக்களுக்கு உறுதிப்படுத்துவதில் உறுதியாகவும் உள்ளது.

இந்திய அரசு அனைத்து குடிமக்களுக்கும் தனி உரிமையை உறுதி செய்வதில் உறுதியாக உள்ளது. ஆனால், அதே நேரத்தில் சட்டம், ஒழுங்கையும், தேசிய பாதுகாப்பையும் உறுதி செய்யும் பொறுப்பும் அரசுக்கு இருக்கிறது என்று அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

Pollsகருத்துக் கணிப்பு

Overview

பொன்னியின் செல்வன்-1 படம் எப்படியிருக்கு?

  • ரொம்ப நல்லாருக்கு
    68.77%
  • எதிர்பார்த்த மாதிரி இல்ல
    17.69%
  • புத்தகம்-படம் வித்யாசம் இருக்கு
    13.54%

Related Videosதொடர்புடைய வீடியோ See Allஅனைத்தும் பார்க்க

Find Us Hereஇங்கே தேடவும்