யாஸ் புயல் எதிரொலி: அதிரடியாக 6 விமானங்கள் ரத்து

யாஸ் புயல் எதிரொலி: அதிரடியாக 6 விமானங்கள்  ரத்து

ஒடிசாவில் யாஸ் புயல் ஏற்படுத்திய பாதிப்பின்  காரணமாக,6 விமானங்களை ரத்து செய்வதாக மும்பை விமான நிலையம் தெரிவித்துள்ளது. 

மத்திய வங்கக்கடலில் உருவான யாஸ் புயலானது இன்று காலை 9 மணியிலிருந்து கரையைக் கடக்கத் தொடங்கி 11.30 மணியளவில் வடக்கு ஒடிசாவின் பலசூருக்கு அருகே கரையைக் கடந்தது.அவ்வாறு யாஸ் புயல் கரையைக் கடக்கும் போது 130-155 கி.மீ வேகத்தில் காற்று வீசியது.இதனால்,வீடுகள் மற்றும் கட்டிடங்களின் கூரைகள் காற்றில் பறந்தன.

 இந்நிலையில்,ஒடிசாவில் யாஸ் புயல் ஏற்படுத்திய பாதிப்பின் அச்சம் காரணமாக மும்பையில் உள்ள சத்ரபதி சிவாஜி மகாராஜ் சர்வதேச விமான நிலையம் (சி.எஸ்.எம்.ஐ.ஏ), மும்பையிலிருந்து,புவனேஸ்வர் மற்றும் கொல்கத்தாவுக்கு இடையே பயணிக்கும் ஆறு விமானங்களை ரத்து செய்துள்ளதாகத் தெரிவித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

Pollsகருத்துக் கணிப்பு

Overview

பொன்னியின் செல்வன்-1 படம் எப்படியிருக்கு?

  • ரொம்ப நல்லாருக்கு
    68.69%
  • எதிர்பார்த்த மாதிரி இல்ல
    17.53%
  • புத்தகம்-படம் வித்யாசம் இருக்கு
    13.77%

Related Videosதொடர்புடைய வீடியோ See Allஅனைத்தும் பார்க்க

Find Us Hereஇங்கே தேடவும்