பாபா ராம்தேவ் ரூ.1000 கோடி இழப்பீடு தர வேண்டும் - இந்திய மருத்துவ சங்கம் அதிரடியாக நோட்டீஸ்

பாபா ராம்தேவ் ரூ.1000 கோடி இழப்பீடு தர வேண்டும் - இந்திய மருத்துவ சங்கம் அதிரடியாக நோட்டீஸ்

ஆங்கில மருத்துவத்தை தவறாகப் பேசிய பதஞ்சலி நிறுவனர் பாபா ராம்தேவ் 15 நாட்களில் மன்னிப்பு கேட்க வேண்டும் என்றும்,ரூ.1000 கோடி இழப்பீடு தரவேண்டும் என்றும் கோரி இந்திய மருத்துவ சங்கம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது.

பதஞ்சலி நிறுவனத்தை நடத்திவரும் பாபா ராம்தேவ்,சமீபத்தில் நவீன மருத்துவ முறைகளை  முட்டாள்தனமான அறிவியல் என்றும், கொரோனா சிகிச்சை முறையில் ஆக்சிஜன் கிடைக்காமல் இறந்தவர்களைவிட,அலோபதி மருந்துகளால்தான் அதிகம் பேர் இறந்து விட்டதாக கூறினார்.பாபாராம்தேவ் கூறிய இந்த கருத்து பெரும் சர்ச்சைக்கு வித்திட்டது.

இதற்கு இந்திய மருத்துவக் கூட்டமைப்பு சங்கம் கடுமையான கண்டனங்களைத் தெரிவித்தது.மேலும்,நவீன மருத்தவ முறைகளை விமர்சித்ததற்காக மன்னிப்பு கேட்க வேண்டும் எனவும் பாபா ராம்தேவுக்கு நோட்டீஸ் அனுப்பியது.இதனையடுத்து,பாபா ராம்தேவ் வேறு வழியின்றி தனது கருத்தை வாபஸ் பெற்றார்.

Pollsகருத்துக் கணிப்பு

Overview

தமிழகத்தின் அடுத்த எதிர்க்கட்சித் தலைவர் யார்?

  • எடப்பாடி பழனிசாமி
    63.51%
  • ஓ. பன்னீர்செல்வம்
    36.49%

Related Videosதொடர்புடைய வீடியோ See Allஅனைத்தும் பார்க்க

Find Us Hereஇங்கே தேடவும்