முஸ்லீம் பெண்கள் புர்கா அணிய தடை – இலங்கை அரசு அதிரடி உத்தரவு!

முஸ்லீம் பெண்கள் புர்கா அணிய தடை – இலங்கை அரசு அதிரடி உத்தரவு!

இலங்கையில்  முஸ்லிம் பெண்கள் புர்கா அணிவதற்கு தடை விதித்து இலங்கை அமைச்சரவை அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது.

முஸ்லீம் பெண்கள் காலங்காலமாக தங்களின்  முகங்களை மறைத்து வைப்பதை வழக்கமாக வைத்துள்ளனர்.இஸ்லாமியப் பெண்கள் முகத்தை மூடும் வகையில் அணியும் புர்கா உள்ளிட்ட ஆடைகளுக்கு இலங்கையில் தடை விதிக்கப்படும் சூழல் ஆரம்ப காலத்தில் இருந்தே நிலவி வருகிறது.

இந்நிலையில்,கடந்த 2019 ஆம் ஆண்டு ஈஸ்டர் தினத்தன்று இலங்கையில் உள்ள தேவாலயங்கள் மற்றும் ஹோட்டல்களில் தொடர குண்டுவெடிப்பு சம்பவம் நடத்தப்பட்டது.இந்த குண்டு வெடிப்பில் பரிதாபமாக 260 பேர் கொல்லப்பட்டனர்.

இத்தகைய கொடூரமான தாக்குதலுக்கு ஐஎஸ்ஐஎஸ் அமைப்பினர் தான் காரணம் என்று பின்னர் தெரியவந்தது.இந்த காரணத்தை வைத்து, இலங்கையில் புர்கா அணிவது தற்காலிகமாக தடை செய்யப்படிருந்தது.இதனையடுத்து,புர்கா அணிவதை நிரந்தரமாக தடை செய்வது குறித்து இலங்கை பாதுகாப்பு அமைச்சர் ரியர் அட்மிரல் சரத் வீரசேகர  அமைச்சரவை பத்திரத்தில் கையெழுத்திட்டு, நாடாளுமன்றத்தின் ஒப்புதலுக்கு அனுப்பி வைத்தார்.

மேலும்,இந்த ஆடை நாட்டின் தேசியப் பாதுகாப்புக்கு நேரடியாகவே அச்சுறுத்தலாக அமைகிறது என்றும் கூறியுள்ளார்.இதனைத் தொடர்ந்து தற்போது,நாட்டின் பாதுகாப்பை கருத்தில் கொண்டு முஸ்லீம் பெண்கள் பொதுவெளியில் புர்கா அணிவதற்கு தடை விதித்து இலங்கை அமைச்சரவை அறிக்கை வெளியிட்டுள்ளது  என்பது குறிப்பிடத்தக்கது.

Pollsகருத்துக் கணிப்பு

Overview

IPL தொடரின் இன்றைய போட்டியில் வெற்றி பெற போவது யார்?

  • மும்பை இந்தியன்ஸ்
  • சென்னை சூப்பர் கிங்ஸ்

Related Videosதொடர்புடைய வீடியோ See Allஅனைத்தும் பார்க்க

Find Us Hereஇங்கே தேடவும்