ஊரடங்கால் நண்பர்களுக்கு ட்ரீட் கொடுக்க மறுத்த பெண்– வீட்டிற்கே கேக் அனுப்பி சர்ப்ரைஸ் கொடுத்த போலீசார்!

ஊரடங்கால் நண்பர்களுக்கு ட்ரீட் கொடுக்க மறுத்த பெண்– வீட்டிற்கே கேக் அனுப்பி சர்ப்ரைஸ் கொடுத்த போலீசார்!

கொரோனா ஊரடங்கு காரணமாக நண்பர்களுக்கு ட்ரீட் வைக்க மறுத்த பெண்மணிக்கு மும்பை காவல்துறையினர் வீட்டிறகு கேக் அனுப்பி வைத்து பாராட்டு தெரிவித்துள்ளனர்.

நாடு முழுவதும் கொரோனா வைரஸின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில், தினமும் லட்சக்கணக்கான மக்கள் பாதிக்கப்பட்டு கொண்டிருக்கின்றனர். இந்த நிலையில் உயிரிழப்புகளும் தொடர்ந்து அதிகரித்து வருகிறது.இதனை தவிர்ப்பதற்கு ஊரடங்கு மட்டுமே வழி என்ற அடிப்படையில் நாடு முழுவதும் ஊரடங்கு  பலகட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளது.

 இந்நிலையில்,  மும்பையில் உள்ள பெண் ஒருவரிடம் அவரது பிறந்தநாளுக்கு நண்பர்கள் ட்ரீட் கேட்டுள்ளனர். ஆனால் ஊரடங்கை காரணம் காட்டி வெளியில் செல்ல மறுத்த பெண் தனது சமூக வலைதளப் பக்கத்தில் ஊரடங்கு போடப்பட்டுள்ளதால் வீட்டிலேயே இருங்கள் பாதுகாப்பாக இருங்கள் என கூறியுள்ளார்.

இதனை பார்த்த மும்பை காவல்துறையினர் அந்த பெண்ணை பாராட்டும் விதமாக அப்பெண்ணின் வீட்டிற்கே கேக் ஒன்றை அனுப்பி வைத்துள்ளனர். 

மேலும் பொறுப்புள்ள குடிமகளாக நடந்து கொண்டதற்கு எங்கள் பாராட்டுக்கள் எனவும், உங்களது இன்றைய பாதுகாப்பான கொண்டாட்டம் நிச்சயமாக நாளைய மகிழ்ச்சியான உலகத்தை கொண்டுவர உதவும் எனவும் உங்களுக்கு மீண்டும் எங்களது பிறந்தநாள் வாழ்த்துக்கள் எனவும் மும்பை காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். இந்த சம்பவம் மக்களின் கவனத்தை பெரிதும் ஈர்த்துள்ளது.

Pollsகருத்துக் கணிப்பு

Overview

தமிழகத்தின் அடுத்த எதிர்க்கட்சித் தலைவர் யார்?

  • எடப்பாடி பழனிசாமி
  • ஓ. பன்னீர்செல்வம்

Related Videosதொடர்புடைய வீடியோ See Allஅனைத்தும் பார்க்க

Find Us Hereஇங்கே தேடவும்