நீரவ் மோடியை நாடு கடத்த இங்கிலாந்து அரசு ஒப்புதல்...!

நீரவ் மோடியை நாடு கடத்த இங்கிலாந்து அரசு ஒப்புதல்...!

நீரவ் மோடியை இந்தியாவிற்கு நாடு கடத்த இங்கிலாந்து ஒப்புதல் வழங்கியுள்ளது.இங்கிலாந்து உள்துறை அமைச்சர் ஒப்புதல் வழங்கியுள்ளதாக சிபிஐ தகவல் அளித்துள்ளது.

கடந்து 2019-ஆம் ஆண்டு ஜனவரி மாதம் வைர வியாபாரியான நீரவ் மோடி, பஞ்சாப் நேஷனல் வங்கியில் ரூ 13,000 கோடி கடன் வாங்கி விட்டு திருப்பிச் செலுத்தாமல் இங்கிலாந்திற்கு தப்பிச் சென்றுள்ளார். இதுதொடர்பாக சிபிஐயும், அமலாக்கத் துறையும், தனித்தனியாக வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். 

இதனிடையே இவர் இந்தியாவிலிருந்து தப்பிச் சென்ற நிலையில், மேற்கிந்திய தீவு நாடு ஒன்றில் வசித்து வருகிறார் என்று கூறப்பட்டது.இந்த நிலையையொட்டி,இந்திய அரசு நெருக்கடியைத் தொடர்ந்து, அங்கிருந்து வெளியேறி மீண்டும் இங்கிலாந்துக்கு வந்துள்ளா. தலைநகர் லண்டனில் மறைவாக இருந்த நீரவ் மோடியை, கடந்த 2019ஆம் ஆண்டு மார்ச் மாதம் ஸ்காட்லாந்து போலீசார் கைது செய்தனர். அதன் பின் அவரை மீண்டும் இந்தியாவிற்கு நாடு கடத்துவதற்கான முயற்சிகளில் அமலாக்கத் துறையும் சிபிஐயும் ஈடுபட்டது. இதற்காக அங்குள்ள வெஸ்ட்மின்ஸ்டர் மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர். அதன்படி இந்த வழக்கின் இறுதிகட்ட வாதங்கள் நிறைவடைந்தன.

பின் பிப்ரவரி 25-ஆம் தேதி இந்த வழக்கு தீர்ப்பு அளிக்கப்பட்டது. அந்த தீர்ப்பின் படி நீரவ் மோடி பஞ்சாப் நேஷனல் வங்கியில் கடன் மோசடி செய்வதற்கு சதித்திட்டம் தீட்டியதில் அவர் குற்றவாளியாகவும் நிரூபிக்க போதிய ஆதாரங்கள் கிடைத்துள்ளதாகவும் கூறப்பட்டது.

மேலும் அவர் மீது சுமத்திய குற்றச்சாட்டுக்கள் நிரூபிக்கப்பட்டுள்ளதாகவும், இதனையடுத்து இந்திய நீதிமன்றத்தில் அவர் மீதான வழக்குகளில் விசாரணைக்கு ஆஜராகி பதில் அளிக்கவேண்டும் என்றும் நீதிபதி தீர்ப்பளித்தார். இதனையடுத்து, வைர வியாபாரி நீரவ் மோடியை நாடு கடத்த இங்கிலாந்து அரசு ஒப்புதல் அளித்துள்ளது. இந்த ஒப்புதலை, இங்கிலாந்து உள்துறை அமைச்சர் வழங்கியுள்ளதாக சிபிஐ தகவல் அளித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

Pollsகருத்துக் கணிப்பு

Overview

தமிழகத்தின் அடுத்த எதிர்க்கட்சித் தலைவர் யார்?

  • எடப்பாடி பழனிசாமி
  • ஓ. பன்னீர்செல்வம்

Related Videosதொடர்புடைய வீடியோ See Allஅனைத்தும் பார்க்க

Find Us Hereஇங்கே தேடவும்