அடுத்து ஆட்சி யாருக்கு? பிலவ பஞ்சாங்கம் கணிப்பு

அடுத்து ஆட்சி யாருக்கு? பிலவ பஞ்சாங்கம் கணிப்பு

பஞ்சாங்கம் படித்து 'பிலவ' ஆண்டு பலன் கூறப்பட்டதில், அடுத்து எந்த ஆட்சி வர வாய்ப்புள்ளது என்பதை பட்டாச்சாரியார்கள் தெரிவித்துள்ளனர்.

யுகாதி பண்டிகையை முனிட்டி, சேலம், அம்மாபேட்டை சவுந்தரராஜ பெருமாள் கோயிலில், பட்டாச்சாரியார்கள் கண்ணன், வேதமூர்த்தி, நேற்று பஞ்சாங்கம் படித்து, 'பிலவ' ஆண்டு பலனை கூறினர்.

அதில், புத்தாண்டின் ராஜாவாக, பூமிகாரகனாகிய செவ்வாய் அமைந்துள்ளதால், நல்ல மழை பொழிந்து, பூமி சுபிட்சம் அடையும் என்றும், பயிர்கள் செழித்து வளர்ந்து நல்ல மகசூல் கிடைக்கும் என்றும் விவசாயிகள் ஏற்றம் பெறுவர் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் புத்தாண்டு கிரக நிலை கணிப்புப்படி, தற்போதைய ஆட்சியே நீடிக்க வாய்ப்புள்ளது என்று தெரிவித்தனர்.

அத்துடன் கடந்தாண்டை போன்று, நடப்பாண்டும் புதுப்புது, 'வைரஸ்' உருவாகும் என்றும் கால்நடைகளுக்கும் வியாதிகள் ஏற்படும் என்றும் கூறினர்.

மேலும் மருத்துவதுறையில் பல சாதனைகள் ஏற்பட்டு, வியாதிகளுக்கு தடுப்பு மருந்துகள்கிடைக்கும்.கல்வி துறையில், உலக நாடுகளில் இந்தியா முதலிடம் பிடிக்கும்.

அத்துடன் அண்டை நாடுகளின் போர் முயற்சி முறியடிக்கப்படும். இந்தாண்டில், 12 புயல்கள் உருவாகும்.இவற்றில் ஒன்பது, இந்தியாவை சுற்றி தாக்கும்; புயல் வெள்ளத்தால், சென்னை மிதக்கும்.இப்படி கணிக்கப்பட்டுள்ளதாக அவர்கள் கூறினர்.

Pollsகருத்துக் கணிப்பு

Overview

தமிழகத்தின் அடுத்த எதிர்க்கட்சித் தலைவர் யார்?

  • எடப்பாடி பழனிசாமி
    56.61%
  • ஓ. பன்னீர்செல்வம்
    43.39%

Related Videosதொடர்புடைய வீடியோ See Allஅனைத்தும் பார்க்க

Find Us Hereஇங்கே தேடவும்