விசாரணையின் போது நீதிபதி முன்பு பிளேடால் கழுத்தை அறுத்துக்கொண்ட கைதி!

சிறைத்துறையில் போலீசார் தன்னை கொடுமைப்படுத்துவதாகக் கூறி நீதிபதி முன்பு கழுத்தை பிளேடால் கைதி ஒருவர் கழுத்தை அறுத்துக் கொண்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
சென்னை வியாசர்பாடியைச் சேர்ந்த பாண்டியன் என்பவர் கொலை வழக்கில் ஆயுள் தண்டனை கைதியாக சிறையில் உள்ளார். இந்த நிலையில் அவர் மீது இருக்கும் வேறு ஒரு வழக்கின் விசாரணைக்காக 4-ஆவது கூடுதல் அமர்வு நீதிமன்ற நீதிபதி முன்பு ஆஜர்படுத்தபட்டார்.
அப்போது, அவரிடம் நீதிபதி கேள்விகளை எழுப்பினர்.திடீரென அழுத பாண்டியன் சிறையில் தன்னை சிறைத்துறை அதிகாரிகள் கொடுமைப்படுத்துவதாக புகார் கூறினார்.அதுமட்டுமல்லாமல் பேசிக்கொண்டே இருக்கும் போது திடீரென தான் கையில் மறைத்துவைத்திருந்த பிளேடால் நீதிபதி முன்பு கழுத்தை அறுத்துக் கொண்டார்.
அதிர்ச்சி அடைந்த போலீஸ் உடனடியாக அவரை மீட்டனர். அப்போது தனக்கு நடக்கும் கொடுமை தொடர்பாகத் தான் கடிதம் எழுதி தருவதாகவும் அதன் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று நீதிபதியிடம் கூறினார் என்பது குறிப்பிடத்தக்கது.பின்னர் சிகிச்சைக்காக கைதி பாண்டியனை ஸ்டான்லி மருத்துவமனைக்கு போலீசார் அழைத்துச் சென்றனர். போலீசார் இந்த சம்பவம் குறித்து விசாரித்து வருகின்றனர்.
Pollsகருத்துக் கணிப்பு

ஐபிஎல் திருவிழா: இன்றைய லீக் போட்டியில் வெற்றி பெற போவது யார்?
-
ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர்
-
ராஜஸ்தான் ராயல்ஸ்