கடலில் மிதக்கும் உடல் கழிவுகள் மற்றும் 200 சவப்பெட்டிகள் ...மக்கள் அச்சம் !

கடலில் சவப்பெட்டிகள் மற்றும் சிதைந்த உடல் கழிவுகள் மிதந்துகொண்டிருப்பது மக்களிடையே பெரும் பீதியை ஏற்படுத்தியுள்ளது.காமோக்லி என்ற பிரபல சுற்றுலா தளம் இத்தாலியில் உள்ளது .இதில் கடந்த சில நாட்களுக்கு முன்பு அங்கு நிலச்சரிவு ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் அந்த பகுதியில் கடல் ஓரத்தில் மலைக்குன்றில் ஒரு கல்லறை தோட்டம் இருந்துள்ளது. இந்த கல்லறைத்தோட்டமானது மலைக்குன்றில் நிலச்சரிவு நிலச்சரிவு ஏற்பட்டது .இதன் காரணமாக அப்பகுதி கடலுக்குள் சரிந்து விழுந்துள்ளது. இதனால் கல்லறை தோட்டம் சரிந்து விழுந்ததில் சுமார் 200 சவப்பெட்டிகள் கடலில் மிதந்து கொண்டிருக்கின்றது.இதை கண்ட உள்ளூர் மற்றும் வெளிநாட்டு சுற்றுலா பயணிகள் கடும் பீதியில் உறைந்துள்ளனர்இது குறித்த புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி உள்ளது. இதையடுத்து தற்போது சவப் பெட்டிகளை அப்புறப்படுத்தும் பணி முன்னெடுக்கப்பட்டு வருகிறது.
Pollsகருத்துக் கணிப்பு

ஐபிஎல் திருவிழா: இன்றைய லீக் போட்டியில் வெற்றி பெற போவது யார்?
-
ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர்
-
ராஜஸ்தான் ராயல்ஸ்