பள்ளி மாணவனுக்காக பேருந்தின் நேரத்தை மாற்றியமைத்த போக்குவரத்துத்துறை அதிகாரி: குவியும் பாராட்டுக்கள்..!

பள்ளி மாணவனுக்காக பேருந்தின் நேரத்தை மாற்றியமைத்த போக்குவரத்துத்துறை அதிகாரி: குவியும் பாராட்டுக்கள்..!

ஒடிசாவை சேர்ந்தவர் சாய் அன்வேஸ். இவர் புவனேஸ்வர் எம்பிஎஸ் பள்ளியில் படித்து வருகிறார். இந்த நிலையில், காலை 7.30 மணிக்கு ஆரம்பிக்கும் பள்ளிக்கு லிங்கிப்பூரிலிருந்து வரும் தனது வழக்கமான பேருந்து தாமதமாக வருவதால், தினமும் 7.40 மணிக்கு பள்ளிக்கு தாமதமாக செல்வதாகவும், இதனால் பல சிக்கல்களை சந்திப்பதாகவும் சாய் அன்வேஸ் டுவீட்டரில் தெரிவித்து, புவனேஸ்வர் போக்குவரத்து துறை நிர்வாக இயக்குநர், போத்ரா ஐபிஎஸ் அவர்களை டேக் செய்திருந்தார்.

இந்த டுவீட்டிற்கு அடுத்த சில மணிநேரங்களிலேயே பதிலளித்த புவனேஸ்வர் போக்குவரத்து துறை நிர்வாக இயக்குநர் அருண் போத்ரா, “உங்களது பேருந்து நேரம் இப்போது 7 மணியாக மாற்றப்பட்டு விட்டது. இனி நீங்கள் வகுப்புக்கு தாமதமாக செல்ல வேண்டியதில்லை” என ரிட்வீட் செய்துள்ளார்.

ஒரு மாணவரின் சிரமத்தை உணர்ந்து பேருந்தின் நேரத்தை மாற்றிய புவனேஸ்வர் போக்குவரத்து துறை நிர்வாக இயக்குநரின் செயல் மக்கள் பலரால் பாராட்டப்பட்டு வருகிறது.

Pollsகருத்துக் கணிப்பு

Overview

இங்கிலாந்து அணிக்கு எதிராக சென்னையில் நடைபெறவுள்ள 2 டெஸ்ட் போட்டிகளிலும் இந்திய அணியில் தமிழக வீரர் நடராஜனுக்கு வாய்ப்பு வழங்கப்படாதது?

  • சரியான முடிவு
  • அனுபவக் குறைவு
  • கிரிக்கெட் அரசியல்
  • 3-4 டெஸ்ட்டில் வாய்ப்பு

Related Videosதொடர்புடைய வீடியோ See Allஅனைத்தும் பார்க்க

Find Us Hereஇங்கே தேடவும்