கேரளாவில் கொரோனா அதிகரிப்பது தமிழகத்துக்கு சவாலாக உள்ளது

கேரளாவில் கொரோனா பரவல் அதிகரிப்பது தமிழகத்துக்கு பெரும் சவாலாக உள்ளது.. அமைச்சர் விஜயபாஸ்கர்
மழைக்காலம் மற்றும் பண்டிகைக் காலம் தொடங்குவதால் சவால் நிறைந்த காலகட்டமும் தொடங்குவதாக சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் கூறியுள்ளார்.
கொரோனா தொற்றை சிறப்பாக கையாண்டு பாராட்டு பெற்ற கேரளாவில், தற்போது பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை உயர்ந்து வருகிறது. கேரளாவில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 2 லட்சத்து 77 ஆயிரத்து 855ஆக அதிகரித்துள்ளது. 
இந்த நிலையில், தமிழக சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் கூறுகையில், "கொரோனா பரவல் அதிகரித்திருப்பதால் தமிழக எல்லையோர மாவட்டங்கள் தீவிரமாக கண்காணிக்கப்படுகின்றன. மழைக்காலம் மற்றும் பண்டிகைக் காலம் தொடங்குவதால் சவால் நிறைந்த காலகட்டமும் தொடங்குகிறது என்றார்.
கேரளாவில் கொரோனா பரவல் அதிகரிப்பது தமிழகத்துக்கு பெரும் சவாலாக உள்ளது. வெளி மாநிலங்களில் இருந்து வரும் நபர்கள்  கண்காணிப்பு மற்றும் பரிசோதனைக்குப் பிறகே அனுமதிக்கப்படுகிறார்கள்" என்று கூறினார்.

Pollsகருத்துக் கணிப்பு

Overview

உங்கள் குழந்தைகளுக்கு மும்மொழி கொள்கை வேண்டுமா?

  • ஆம்
  • இல்லை
  • யோசிக்கலாம்
  • கருத்து கூற விரும்பவில்லை

Related Videosதொடர்புடைய வீடியோ See Allஅனைத்தும் பார்க்க

Find Us Hereஇங்கே தேடவும்