ரெய்னா இடத்தில் இவர் தான் களமிறங்க வேண்டும்… வாட்சன் ஓபன் டாக்

ரெய்னா இடத்தில் இவர் தான் களமிறங்க வேண்டும்… வாட்சன் ஓபன் டாக்

ரெய்னா இடத்தில் விளையாட சரியான வீரர் இவர்தான் என்று வாட்சன் கருத்து தெரிவித்துள்ளார்.

ஐபிஎல் போட்டி தொடரின் 13வது சீசன் ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெற்று வருகிறது. இதில் பங்கேற்க சென்னை சூப்பர் கிங்ஸ் அணி உள்ளிட்ட அனைத்து அணி வீரர்களும் துபாய் சென்றனர். ஆனால் சுரேஷ் ரெய்னா தனது சொந்த காரணங்களால் இந்த ஆண்டிற்கான தொடரில் இருந்து விலகுவதாக அறிவித்தார். இதனால் ரசிகர்கள் பெரும் ஏமாற்றம் அடைந்துள்ளனர். 

இதனையடுத்து ரெய்னா இடத்தில் யார் சிஎஸ்கே அணிக்காக களமிறங்க போகிறார் என்ற கேள்வி எழுந்துள்ளது. இந்நிலையில் அந்த அணியின் ஓபனிங் பேட்ஸ்மேன் ஷேன் வாட்சன் அணியில் ரெய்னாவின் இடத்தை நிரப்புவது என்பது மிகக் கடினமான ஒன்று தான் என்றும் ஆனால் அவருக்கு பதில் முரளி விஜய் களமிறங்கினால் சரியாக இருக்கும் என்று தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் கூறுகையில், “ஐபிஎல் தொடரில் இதுவரை அதிக ரன்கள் அடித்தவர்களின் பட்டியலில் ரெய்னா இரண்டாம் இடத்தில் உள்ளார். மேலும் ஐக்கிய அரபு அமீரகம் போன்ற ஸ்பின் பவிலிங்க்கு சாதமான மைதானங்களில் அவரைப் போன்ற ஒரு பேட்ஸ்மென் நிச்சயம் ஒவ்வொரு அணிக்கு தேவை. அந்த வகையில் தற்போது ரெய்னாவின் இழப்பை ஈடுகட்டும் விதமாக சிஎஸ்கே அணியில் முரளி விஜய் களமிறங்கினால் சிறப்பாக இருக்கும். என்று கூறினார்.

மேலும் முரளி விஜய் சுழற்பந்து வீச்சுக்கும் சரி, வேகப்பந்து வீச்சிற்கும் சரி, சிறப்பாக ஆடக்கூடியவர். அதுமட்டுமின்றி அவருக்கு டி20 போட்டிகளில் விளையாடி நல்ல அனுபவம் கொண்டவர் என்பதால் நான் அவரையே ரெய்னாவின் இடத்திற்கு பரிந்துரைக்கிறேன் என்று கூறினார்.

Pollsகருத்துக் கணிப்பு

Overview

பொன்னியின் செல்வன்-1 படம் எப்படியிருக்கு?

  • ரொம்ப நல்லாருக்கு
    68.69%
  • எதிர்பார்த்த மாதிரி இல்ல
    17.53%
  • புத்தகம்-படம் வித்யாசம் இருக்கு
    13.77%

Related Videosதொடர்புடைய வீடியோ See Allஅனைத்தும் பார்க்க

Find Us Hereஇங்கே தேடவும்