போலி இ-பாஸ்.. ஜெராக்ஸ் கடைக்கு சீல்

போலி இ-பாஸ்.. ஜெராக்ஸ் கடைக்கு சீல்
கோவை மாவட்டம் சூலூர் அருகே கண்ணம்பாளையத்தைச் சேர்ந்த மணிவண்ணன் என்பவர், விருதுநகர் செல்வதற்காக சூலூர் வட்டாச்சியர் அலுவலகம் எதிரே உள்ள சூலூர் ஜெராக்ஸ் என்ற கடையில் விண்ணப்பித்து இ-பாஸ் வாங்கியுள்ளார். 
இந்நிலையில், விருதுநகர் மாவட்ட எல்லையில் வாகன சோதனையின் போது, அவரது இ-பாஸ் போலியானது என்பது தெரியவந்தது. இது தொடர்பாக விருதுநகர் வருவாய் அதிகாரிகள், கோவை மாவட்ட நிர்வாகத்துக்கு தகவல் தெரிவித்தனர்.
இதை அடுத்து, சூலூர் வட்டாட்சியர் அலுவலகம் முன்பு இயங்கிவந்த சூலூர் ஜெராக்ஸ் கடைக்கு வட்டாட்சியர் மீனா குமாரி சீல் வைத்தார். போலியாக இ-பாஸ் தயாரித்து வழங்கிய சூலூர் ஜெராக்ஸ் கடை உரிமையாளர் பாலு மீது புகார் அளிக்கப்பட்டுள்ளது. பாலுவை போலீசார் தேடி வருகின்றனர்.

Pollsகருத்துக் கணிப்பு

Overview

உங்கள் குழந்தைகளுக்கு மும்மொழி கொள்கை வேண்டுமா?

  • ஆம்
  • இல்லை
  • யோசிக்கலாம்
  • கருத்து கூற விரும்பவில்லை

Related Videosதொடர்புடைய வீடியோ See Allஅனைத்தும் பார்க்க

Find Us Hereஇங்கே தேடவும்