அமெரிக்காவில் குறைந்த செலவில் வெண்டிலேட்டர் கண்டுபிடித்த இந்திய தம்பதியினர்


அமெரிக்காவில் குறைந்த செலவில்  வெண்டிலேட்டர்  கண்டுபிடித்த இந்திய தம்பதியினர்


அமெரிக்காவில்  உள்ள இந்தியா வம்சாவளி தம்பதியினர் குறைந்த செலவில் பயன்படுத்த கூடிய வெண்டிலேட்டரை உருவாக்கியுள்ளனர். 

பீகாரை பூர்விகமாகக் கொண்ட தேவேஷ் ரஞ்சன் . தற்போது அமெரிக்காவில் உள்ள  பொறியியல் கல்லூரியில்  பொறியியல் துறை பேராசிரியராக பணியாற்றி வருகிறார். அவரது மனைவி குமுதா ரஞ்சன் மருத்துவராகப் பணிபுரிந்து வருகிறார்.

கொரோனா வைரஸ் காரணமாகஅமெரிக்காவில் உள்ள மருத்துவமனைகளில்  வென்டிலேட்டருக்கு பெரும் தட்டுப்பாடு ஏற்பட்டதைத் தொடர்ந்து

குறைந்த செலவில்விரைவாக தயாரிக்க கூடிய  வென்டிலேட்டர் கருவியை உருவாக்கி உள்ளதாக  தெரிவித்துள்ளனர்.

இவர்கள்உருவாக்கிய வென்டிலேட்டரை தயாரிக்க ஆகும் செலவு 100 டாலர்கள் தான்

 இவர்கள் உருவாக்கியுள்ளதைப் போன்ற வென்டிலேட்டரின் விலை சராசரியாக அமெரிக்க சந்தையில் 10 ஆயிரம் டாலர்கள் என்று தெரிவித்துள்ளனர்

அமெரிக்காவில் வெண்டிலேட்டர் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ள நிலையில் இவர்களின் கண்டுபிடிப்பு பயனுள்ளதாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது


Pollsகருத்துக் கணிப்பு

Overview

உங்கள் குழந்தைகளுக்கு மும்மொழி கொள்கை வேண்டுமா?

  • ஆம்
  • இல்லை
  • யோசிக்கலாம்
  • கருத்து கூற விரும்பவில்லை

Related Videosதொடர்புடைய வீடியோ See Allஅனைத்தும் பார்க்க

Find Us Hereஇங்கே தேடவும்