விசாகப்பட்டினம் விரையும் தேசிய பேரிடர் மேலாண்மையின் சிறப்பு குழு

விசாகப்பட்டினம் விரையும் தேசிய பேரிடர் மேலாண்மையின் சிறப்பு குழு

ஆந்திரா மாநிலம் விசாகப்பட்டினம் அருகே ஏற்ப்பட்ட வாயு கசிவால், சுற்றுவட்டாரப் பகுதியில் வசித்த 1000 பேர் நேரடியாக பாதிக்கப்பட்டுள்ளனர். இந்நிலையில் இது தொடர்பாக உள்ளூர் அதிகாரிகளுக்கு உதவுவதற்காக தேசிய பேரிடர் மேலாண்மையின் சிறப்பு குழு ஆந்திரா செல்லவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

இது தொடர்பாக  தேசிய பேரிடர் மேலாண்மை ஆணைய உறுப்பினர் கமல் கிஷோர் பேசுகையில் ‘‘ஆலையில் இருந்து வாயு கசிவால், சுற்றுவட்டாரப் பகுதியில் வசித்த 1000 பேர் நேரடியாக பாதிக்கப்பட்டிருப்பதாக மதிப்பிடப்பட்டுள்ளது. இது ஒரு ரசாயன பேரழிவு. இந்த விஷயத்தில் உள்ளூர் அதிகாரிகளுக்கு உதவுவதற்காக தேசிய பேரிடர் மீட்பு படையின் வேதியியல், உயிரியல் மற்றும் அணு, கதிரியக்க துறைகளில் அனுபவமுள்ள ஒரு சிறப்பு குழு புனேவிலிருந்து விசாகப்பட்டினத்திற்கு அனுப்பி வைக்கப்படும். அவர்கள் நிலைமையை மதிப்பீடு செய்வதற்கும், தேவையான உதவிகளையும் வழங்குவார்கள்’’ என்றார்.

Pollsகருத்துக் கணிப்பு

Overview

தமிழ் திரைப்படங்களை நேரடியாக ஆன்லைனில் திரையிடுவதை பற்றி உங்களது கருத்து.?

  • சரியான முடிவு
    59.09%
  • தவறான முடிவு
    20.8%
  • படம் வெற்றி பெறுவதே முக்கியம்
    11.89%
  • படத்தின் லாபத்திற்கு உதவும்
    8.22%

Related Videosதொடர்புடைய வீடியோ See Allஅனைத்தும் பார்க்க

Find Us Hereஇங்கே தேடவும்