கர்நாடக மாநிலத்தில் உயர்ந்த கொரோனா பாதித்தோர் எண்ணிக்கை..

உலகம் முழுவதும் கொரோனா வேகமாக பரவி வந்தாலும் இந்தியாவில் தற்போது வரை அது கட்டுக்குள் தான் உள்ளது. அதற்கு காரணம் சீனாவில் கொரோனா பரவ தொடங்கியதில் இருந்தே அரசு எடுத்த தீவிர முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் தான். வெளிநாடுகளில் இருந்து இந்தியா திரும்பியவர்களில் சிலர் அரசின் கட்டுப்பாடுகளுக்கு முழுமையாக ஒத்துழைக்காததால் தற்போது அனைத்து மக்களுக்கும் அது தலைவலியாக மாறியுள்ளது. 

இந்தியாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள் இருந்தாலும் அது மற்றவர்களுக்கு பரவாமல் இருக்க மத்திய, மாநில அரசுகள் தகுந்த நடவடிக்கைகள் எடுத்து வந்தன. இந்தியாவிலேயே கொரோனா பாதித்தவர்கள் அதிகமாக உள்ள மாநிலங்கள் கேரளா மற்றும் மஹாராஷ்டிரா. இந்நிலையில் கர்நாடக மாநிலத்தில் ஏற்கனவே 15 பேருக்கு கொரோனா உறுதிசெய்யப்பட்டு சிகிச்சை பெற்று வந்த நிலையில், மேலும் 3 பேருக்கு கொரோனா அறிகுறி இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் அங்கு கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 18-ஆக உயர்வு.

Pollsகருத்துக் கணிப்பு

Overview

திமுகவை இஸ்லாமியர்கள் நம்ப வேண்டாம் என இல. கணேசன் கூறுவது ?

  • உண்மைதான்
  • தவறானது
  • வழக்கமான விமர்சனம் தான்
  • கருத்துக் கூற விரும்பவில்லை

Related Videosதொடர்புடைய வீடியோ See Allஅனைத்தும் பார்க்க

Find Us Hereஇங்கே தேடவும்