மகா சிவராத்திரி உருவான கதை பற்றி தெரியுமா ?

மனிதர்களாக பிறந்த அனைவருக்கும் முக்தியை அளிப்பவராக சிவபெருமான் இருக்கிறார். அந்த சிவபெருமானை வழிப்படுவதற்குரிய ஒரு அற்புத நாளாக மாசி மாதத்தில் தேய்பிறை காலத்தில் வரும் மகா சிவராத்திரி தினம் இருக்கிறது. இந்த சிவராத்திரி தினம் குறித்த பல ஆன்மீக சுவாரஸ்யம் மிகுந்த புராண சம்பவங்கள் பல உள்ளன. அவற்றில் சிலவற்றை இங்கு தெரிந்து கொள்ளலாம்.

தேவர்களும் அசுரர்களும் இறவா வரம் தரும் தேவாமிர்தம் பெற பாற்கடலை கடைந்தனர். அப்போது அந்த பாற்கடலில் இருந்து வெளிப்பட்ட உலகின் அனைத்து உயிர்களையும் கொல்ல கூடிய ஆலகால விஷத்தை உலக உயிர்களை காக்கும் பொருட்டு சிவபெருமான் அருந்தினார். அப்படி சிவபெருமான் ஆலகால விஷத்தை அருந்தி உலகை காத்த தினம் இந்த மகா சிவராத்திரி தினமாகும்.

சிவன் இந்து சமயத்தில் கூறப்பட்டுள்ள மும்மூர்த்திகளுள் ஒருவர். சைவசமயத்தின் முழுமுதற் கடவுளாகவும், பிறப்பும், இறப்பும் இல்லாத பரம்பொருளாதலால் பரமசிவன் என அழைக்கின்றனர்.இவர் தனது ஒரு பகுதியிலிருந்து அன்னை பராசக்தியை உருவாக்கினாரெனவும், பின்னர் இருவரும் இணைந்து ஆனந்த தாண்டவமாடி அண்டசராசரங்களை உருவாக்கினார்களென்றும், தனது உடுக்கையிலிருந்து படைத்தல், காத்தல், அழித்தல், மறைத்தல், அருளல் எனும் ஐந்து பணிகளுக்கும் அடிப்படையான ஓம் என்ற பிரணவ மந்திரத்தை உருவாக்கினார் எனவும் கருதப்படுகிறது.

Pollsகருத்துக் கணிப்பு

Overview

திமுகவை இஸ்லாமியர்கள் நம்ப வேண்டாம் என இல. கணேசன் கூறுவது ?

  • உண்மைதான்
  • தவறானது
  • வழக்கமான விமர்சனம் தான்
  • கருத்துக் கூற விரும்பவில்லை

Related Videosதொடர்புடைய வீடியோ See Allஅனைத்தும் பார்க்க

Find Us Hereஇங்கே தேடவும்