சட்டப்பேரவையில் கூட்டுறவுச் சங்கங்களின் திருத்த சட்ட மசோதா தாக்கல்!

கூட்டுறவு சங்கங்களின் தலைவர் மற்றும் துணை தலைவர் செய்யும் தவறுகளுக்கு தண்டனை விதிக்க வழிவகை செய்யும் சட்டத்திருத்த மசோதாவை கூட்டுறவுத் துறை அமைச்சர் செல்லூர் ராஜூ சட்டப்பேரவையில் தாக்கல் செய்தார். 

சட்டப்பேரவையில் கூட்டுறவு சங்கங்கள் திருத்த சட்ட மசோதாவை தாக்கல் செய்து பேசிய அமைச்சர் செல்லூர் ராஜூ, கையாடல், மோசடி மற்றும் தவறான நடத்தைகளுக்கு கூட்டுறவு சங்கத் தலைவர், துணை தலைவர் மீது நடவடிக்கை எடுக்கும் வகையில் சட்டத்திருத்தம் செய்யவுள்ளதாக தெரிவித்தார்.  மேலும், கூட்டுறவு சங்கத் தலைவரோ அல்லது துணை தலைவரோ தவறு செய்தது நிரூபிக்கப்பட்டால் அவர்களை ஆறு மாத காலத்திற்கு தற்காலிக பதவிநீக்கம் செய்யலாம் என்றும் அதற்கான காரணத்தை எழுத்து வடிவில் பதிவு செய்யலாம் என்றும் கூறினார்.  மேலும் இந்த மசோதா மீது நாளை விவாதம் நடத்தப்பட்டு நிறைவேற்றப்படும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது

Pollsகருத்துக் கணிப்பு

Overview

திமுகவை இஸ்லாமியர்கள் நம்ப வேண்டாம் என இல. கணேசன் கூறுவது ?

 • உண்மைதான்
  58.37%
 • தவறானது
  18.81%
 • வழக்கமான விமர்சனம் தான்
  18.22%
 • கருத்துக் கூற விரும்பவில்லை
  4.59%

Related Videosதொடர்புடைய வீடியோ See Allஅனைத்தும் பார்க்க

Find Us Hereஇங்கே தேடவும்