3 மகள்களை கிணற்றில் வீசி கொலை செய்த தந்தை… தூக்கிட்டு தற்கொலை!

குஜராத்தில் 3 குழந்தைகளை கிணற்றில் வீசி கொலை செய்த தந்தை, தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

ஜூனாகத் மாவட்டத்தில் ராஜ்கோட்டைச் சேர்ந்த ரசிக் சோலன்கி என்பவர் 10 ஆண்டுகளுக்கு முன் திருமணம் நடைபெற்றது. அவருக்கு 3 மகள்கள் உள்ளனர். நிறைமாத கர்ப்பிணியாக இருந்த அவரது மனைவி, கடந்த 2 வாரங்களுக்கு முன், 4வதாக பெண் குழந்தையை பெற்றெடுத்துள்ளார். 

ரசிக் சோலன்கி ஒரு ஆண் குழந்தை பிறக்க வேண்டும் என்ற ஆசையில் இருந்துள்ளார். இந்நிலையில், 3 பெண் குழந்தைகளையும் தனது பைக்கில் அழைத்துச் சென்ற ரசிக் சோலன்கி, 100 அடி ஆழமான கிணற்றில் வீசி கொலை செய்துள்ளார். பிறகு அவரும் அங்குள்ள மரத்தில் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டார்.

இந்த சம்பவம் தொடர்பாக போலீசார் கூறும்போது, 3 மகள்கள் இருந்த நிலையில், அவரது மனைவி மற்றொரு பெண் குழந்தையைப் பெற்றெடுத்ததால் விரக்தியடைந்தார். மேலும், சோலங்கி கடுமையான நிதி நெருக்கடியை சந்தித்து வந்ததால், மற்றொரு மகளின் பிறப்பு இந்த கொடூரமான நடவடிக்கைக்கு தூண்டுதலாக இருந்தது என்று கூறியுள்ளனர்.

Pollsகருத்துக் கணிப்பு

Overview

திமுகவை இஸ்லாமியர்கள் நம்ப வேண்டாம் என இல. கணேசன் கூறுவது ?

  • உண்மைதான்
  • தவறானது
  • வழக்கமான விமர்சனம் தான்
  • கருத்துக் கூற விரும்பவில்லை

Related Videosதொடர்புடைய வீடியோ See Allஅனைத்தும் பார்க்க

Find Us Hereஇங்கே தேடவும்