-பிரிட்டோராஜ்தமிழ்நாட்டைப் பொறுத்தவரையில் 1960-ம் வருஷத்துக்கு முன்னாடி வரைக்கும் சின்ன சின்ன நீர் நிலைகள் மக்கள் வாழ்வியலோடு இணைக்கப்பட்டிருந்தது. தினசரி வாழ்க்கையில இந்த நீர் நிலைகளைத் தேடிப் போறதும், அதனைப் பாதுகாக்குறதும் ஊர் சட்டமாகவே இருந்துச்சு. வீட்டுத் தேவை, சமையலுக்கு பயன்படுத்துற தண்ணீர் மட்டுமில்லாம மத்த எல்லா உபயோகத்துக்கும் தேவையான தண்ணீருக்கும் பக்கத்துல இருந்த சிறு குளம், ஊரணி, தாங்கல், ஆறு, ஓடைன்னு மழை தண்ணியைத் தேக்கி வைக்குற சின்ன சின்ன அமைப்புகள்தான் உதவியா இருந்தது. மக்கள் தொகை பெருக்கத்துக்கு முன்னாடி வரைக்கும் இப்படிப்பட்ட நீர் நிலைகளை ஊர் கட்டுப்பாடு மூலம் மிகச் சிறப்பா பராமரிச்சுட்டு வந்தாங்க. மனுசன் காலைக் கடனை முடிச்சுட்டு கழுவ போனாலும் இந்த இடத்துல கழுவலாம்...இந்த இடத்துல கழுவக் கூடாதுன்னு சொல்ற அளவுக்கு கடுமையான சட்டதிட்டங்கள் உள்ளூர் அமைப்புகளிடம் இருந்தது. பாத்திரம் கழுவுறது, துணி துவைக்கிறது, ஆடு, மாடுகளைக் குளிப்பாட்டுறது மாதிரியான பல்வேறு தினசரி செயல்பாடுகள் ஒரு குளத்தின் இந்தப் பகுதியில் மட்டும் தான் நடக்கணும்னு கட்டுப்பாட்டு இருந்துச்சு. மக்களும் அதைக் கடைபிடிச்சாங்க..பாதுகாக்கப்பட்ட நீர் நிலைகள்முந்தைய கட்டுரைகள்ல சொன்ன மாதிரி இப்படிப்பட்ட குளங்கள், ஓடைகள், கால்வாய்கள் நில அமைப்போட சரிவைப் பயன்படுத்தி மழைநீரைத் தேக்கி வைக்குது. அது மட்டுமில்லாம, இயற்கையா இயல்பான முறையில தண்ணியை மறுசுழற்சி செய்ற வழிமுறைகள் இருக்குற மாதிரி அமைப்பு இருந்துச்சு. இப்படிப்பட்ட சின்ன சின்ன நீர்நிலைகளுக்கு பங்கம் ஏற்படுத்துறவங்களுக்கு தண்டனை கொடுத்தாங்க. அந்தளவுக்கு நம்ம முன்னோர்கள் செயல்பாடு இருந்தது. அதுக்கு பல சான்றுகளும் இருக்கு. அந்தக் காலகட்டத்தில வேதிப்பொருட்களின் பயன்பாடு இல்லவே இல்ல. தண்ணியை மாசுபடுத்துற பொருள்கள்னு பார்த்தா, மாட்டு சாணம், வீட்டு உபயோகப் பொருட்களைக் கழுவப் பயன்படுற சாம்பல், சிகைக்காய் தூள்களோட எச்சங்கள் மட்டும் தான். .நோயில்லா காலம் மக்கள் தொகை பெருக்கத்துக்குப் பிறகு குளங்கள், ஓடைகள், கால்வாய்களோட மேட்டுப்பகுதியில மக்கள் குடியேறுனாங்க. அப்படி குடியேறுனவங்க கிணறு தோண்டுனாங்க. அப்பவும்கூட கிணத்து சுகாதாரம், நீர் பயன்பாடு பெருமளவுல பாதிக்கப்படாம இருந்தது. காரணம், கிணத்துக்கு தண்ணி கொடுக்குற நீர் சேகரிக்குற அமைப்புகள் சுத்தமா இருந்தது. மலைப்பகுதி மட்டுமல்ல தரைப்பகுதியில இருந்த பெரும்பாலான இடங்கள்லயும் தண்ணி சுத்தமான தான் இருந்துச்சு. அந்தக் காலத்தில நோய்களோட அளவும் ரொம்ப குறைவா இருந்தது. மனிதன் வாழ்நாள் நீளமா இருந்தது. தண்ணியால உருவாகுற நோய்கள் குறைவா இருந்துச்சு. நீர்நிலைகளோட அடிப்பகுதியில தேங்குற களிமண் அளவும், தரமும் சிறப்பா இருந்துச்சு..சூழலுக்கு எதிரான கழிவுகள் 1960க்கு பிறகு, தொழிற்சாலைகளோட பெருக்கம் அதிகமாச்சு. விவசாயம், தொழில்கள்ல வேதிப்பொருள்களோட பயன்பாடு, மத்த நாடுகள்ல இருந்து பெறப்பட்ட தொழில்நுட்பங்களை அடிப்படையா வச்சு செயல்படுத்தப்பட்டது. அதனோட விளைவு, கழிவுகள் அதிகளவு உருவாச்சு. அந்தக் கழிவுகளை எங்கே தேக்கி வைக்குறது? எப்படி மறுசுழற்சி செய்யுறது? அதை மனித குலத்துக்கு எதிரா இல்லாம எப்படி மாத்துறது? மாதிரியான பிரச்சனைகள் உருவாச்சு. இதை சமாளிக்க அடிப்படை புரிதல்கள், சட்டதிட்டங்கள் முழுமையா இல்லை. கழிவுகளை மறுசுழற்சி செய்றதுக்கான விதியைத் தங்களோட லாபத்துல இருந்து தொழிற்சாலைகளோ, விவசாயிகளோ ஏற்படுத்தல. கழிவு மேலாண்மைக்குன்னு முழுமையான சட்டமோ, வரைமுறையோ இல்ல. அதோட விளைவு, பள்ளமா இருக்குற இடங்கள்ல கழிவுகளைச் சேகரிக்கலாம். யாரும் போகாத மேட்டுப்பகுதியில கழிவுகளைக் கொட்டலாம்னு ஒரு புது வரைமுறை உருவாச்சு. அது செயல்பாடுக்கும் வந்துச்சு. சூழலுக்கு சூனியம் வைக்குற செயல் இப்படித்தான் ஆரம்பமாச்சு. மழை பெய்ஞ்சா மேட்டுல இருக்குற கழிவுகள் தண்ணியில ஊறுச்சு. அதுல இருந்து வெளியேறுற எச்சங்கள் அந்தக் கழிவுகள்ல இருக்குற வேதிப்பொருள்களோட தண்ணியில கலந்தது. சில இடங்கள்ல கலந்தும் கலக்காமலும் பள்ளமான இடத்துல வந்து சேகரமாச்சு. .கேள்விக்குறியான சுற்றுசூழல்நிலத்தின் பள்ளமான பகுதி இதுவரைக்கும் தண்ணி தேங்காத இடமாகவும், சில இடங்கள்ல குளங்கள், ஊரணிகள், ஆறு, ஓடைகள்ல போயி சேர்ற வகையிலயும் இருந்துச்சு. 'அதிக தண்ணியில கம்மியான கழிவு சேர்றது பெரிய பாதிப்பை ஏற்படுத்தாது. மழை பெய்ஞ்சா ரொம்ப தண்ணீர் வரும். அதுல இதோட தாக்கம் குறைஞ்சுடும்' இப்படி மனசை தேக்கிக்கிட்டோம். அதோட, லாபத்துல பங்கு கொடுக்க முடியாதவங்க இதுமாதிரியான கட்டுக்கதைகளை அழுத்தம் திருத்தமா சொல்ல ஆரம்பிச்சாங்க. ரொம்ப காலமா அதை சொல்லிட்டு வந்ததால வெகுஜனங்களும் அதைக் கண்டுக்கல. அதோட விளைவுதான் இன்னைக்கு சுற்றுசூழல் பெரிய கேள்விக்குறியா தொங்குது. .அதிக நோய்கள்... குறைந்த ஆயுள் அங்கொன்னும் இங்கொன்னுமா இருந்த நோய்களின் எண்ணிக்கை, கொஞ்சம் கொஞ்சமா கூடுச்சு. சுகாதாரத்துறைக்கு நோயாளிகளை மறைமுகமா தயார் செய்யுற ஒரு நிகழ்வா நான் மேலே சொன்ன செயல்பாடு மாறிடுச்சு. நோய்கள் எண்ணிக்கை பெருகியதோட, மருத்துவர்கள், மருத்துவமனைகள், குறைவான ஆயுள் நாட்கள், அதை ஒட்டிய வளர்ச்சின்னு சுகாதாரக்கேடு உருவாகிடுச்சு. இப்ப சமுதாயம் இந்த சூழல்ல தான் வாழ வேண்டியிருக்குது. நாம எப்படி மறுத்தாலும் அடிப்படை உண்மை இதுதான். தனிமனித ஒழுக்கத்தை பண்டைய காலங்கள்ல கடைபிடிச்சாங்க. இன்னைக்கு அந்தப் போக்கு முழுசா மாறிடுச்சு. காலையில எழுந்திரிச்சதுல இருந்து ராத்திரி தூங்கப்போற வரைக்கும் செய்யுற செயல்கள்ல பெரும்பாலும் சூழலுக்கு எதிரான தான் இருக்கு. தூங்கிக்கிட்டு இருக்குற நேரத்துலயும் பயன்படுத்தப்படுற பல்வேறு சுகங்கள் சார்ந்த செயல்கள், மேலைநாடுகளை ஒப்பிட்டு நாம செய்யுற செயல்களின் விளைவு, கழிவுகளா சாக்கடைகள்ல பெருக்கெடுத்து ஓடுது. அந்தச் சாக்கடை நீர், பக்கத்துல இருக்குற குளங்கள், கோவில் குளங்கள், ஊரணிகள், தாங்கல்கள், ஆறுகள், கால்வாய்கள்ல நேரடியாவோ, மறைமுகமாவோ சேர்றத நாம பார்த்துட்டுதான் இருக்கோம். அதுக்கு சிறப்பான உதாரணம், கூவம் ஆறு, நொய்யல் அணை, வெவ்வேறு கோயில் குளங்கள், ஒவ்வொரு ஊர்கள்லயும் இருக்குற ஊரணிகள், பல்வேறு ஆறுகள்..நிரந்தர சுகாதாரக்கேடு இதனால நீர் நிலைகளிடமிருந்து மனுசங்க ஒதுங்கி நிற்குற நிலைமையைப் பாக்குறோம். தமிழ்நாட்டுல கிராமங்களின் எண்ணிக்கை அதிகமாகிட்டு வருது. ஒவ்வொரு கிராமத்தின் கழிவுநீர் வடிகாலா ஊரோட பள்ளத்துல இருக்குற நீர் பாசன குளங்கள் பலி கொடுக்கப்படுது. அதுல சேகரமாகுற வேதிப்பொருள் தண்ணியில கலந்து பூமிக்குள்ள போயிடுது. அங்க போயி, பூமிக்கு அடியில பல்வேறு தட்டுகள்ல 150 வருஷத்துக்கும் மேல நீர்த்தாங்கிகள்ல சேகரமாகியிருக்க கிடைத்தண்ணியை மாசுபடுத்துது. அதுதான் நிரந்தரமா சுகாதாரக்கேட்டை விளைவிக்குற அடிப்படை விஷயங்களா மாறிடுது. பெரும்பாலான நோயைப் பரப்புற நுண்கிருமிகள் நீரோட நிறத்திலயோ, வாசனையிலயோ வித்தியாசத்தைக் காட்டாம இருந்தாலும், தண்ணியில கலந்துள்ள நோய்க்கிருமிகளின் அளவுகளை ஆய்வு செஞ்சா சிறப்பா இருக்கும். ஆனா, அதுக்கு பதிலா ஆர்.ஓ(R.O)ன்னு சொல்ற நீர் மாற்றி தொழில்நுட்பத்தைப் பயன்படுத்துறோம். அதுனால தண்ணியில இருக்க அழுக்குகள், வேதிப்பொருள்கள் பிரிக்கப்பட்டுடும்னு சொல்றாங்க. ஆனாலும் அப்படிப்பட்ட நீர் பகுப்புகள் தொடர்ச்சியா நடக்கலைன்னா மனிதகுலத்துக்கு நோயை நேரடியா பரப்ப வாய்ப்பாகிடும்..பதறி ஓடும் பறவைகள் இதுகுறித்த தொடர்ச்சியான ஆய்வுகளும், தனிமனித ஒழுக்கங்களுமே சமுதாயத்தை மாற்றி அமைக்கும். அதிக அளவுல நீர்ல சேர்ற கழிவுப்பொருட்கள் சுற்றுப்பகுதிகள்ல வாழுற மனுசங்களுக்குக் காற்று மூலமா கெட்ட வாடையைப் பரப்பும். அதோட பறவைகள், மீன், கால்நடைகளுக்கான தண்ணி கிடைக்காது. அதுங்க அந்த இடத்திலிருந்து வேற இடத்துக்குப் போற நிலைமை உருவாகியிருக்கு. வேற வழி இல்லாம மனுசங்களோட வாழ்ந்துட்டு இருக்க கால்நடைகள் இருக்கு. அதுங்களைக் குளிப்பாட்டுற தண்ணியும் தரம் குறைவா பாதிப்பை ஏற்படுத்துறதா தான் இருக்குது. .இயற்கை சுத்திகரிப்பான் கல்வாழைதமிழ்நாட்டுல பறவைகள் வந்து தங்குற சரணாலயங்களின் எண்ணிக்கை முந்தைய காலங்களை ஒப்பிட்டுப் பார்க்கும்போது ரொம்ப குறைஞ்சிருக்கு. இதுதான் நீர் மாசுபாட்டுக்கு சான்று. தண்ணியை இயற்கையாகச் சுத்திகரிக்குற கல்வாழை மாதிரியான தாவரங்களை அதிகம் வளர்க்கணும். குளங்கள் மாதிரியான நீர் நிலைகளுக்கு உள்ளே வர்ற கால்வாய்களோட ரெண்டு கரைகள்லயும் நட்டு வைக்கணும். கழிவுநீர் அதை ஊடுருவி வர்ற மாதிரி அமைக்கணும். அப்படி அமைச்சா கழிவுநீர்ல இருக்க கனமான உலோகங்களை கல்வாழை இழுத்து வெச்சுக்கும். அதோட சுகாதாரமான தண்ணீர், நீர் நிலைகளுக்குக் கிடைக்கும். இதனை தன்னார்வ நிறுவனங்கள், ஆர்வமுள்ள மக்கள், உள்ளாட்சி அமைப்புகள் எடுத்து செய்யணும். அசோலா மாதிரியான பெரணி வகைத் தாவரங்களை மழைக்காலம் ஆரம்பிக்கும்போது நீர் நிலைகள்ல வளர்க்கணும். மழைக்கால முடிவுல அதன் பெருக்கம் குறைஞ்சு போனாலும் இதுமாதிரியான தாவரங்கள் நீரில் உள்ள கழிவுப்பொருட்களை மாத்தி அமைக்கும்..கெட்ட வாடையை நிறுத்தலாம் திறனூட்டப்பட்ட நுண்ணுயிரி'ன்னு சொல்ற 'இ.எம்' கரைசலைத் தயாரிச்சு தண்ணியில கலந்து சிறிய நீர் நிலைகள்ல ஊற்றலாம். பஞ்சாயத்து அமைப்புகள், தன்னார்வ நிறுவனங்கள் இதனை செய்யலாம். இந்த திரவத்தால ஏற்படுற வேதிவினை காரணமா, பாக்டீரியாக்கள் பெருகும். அதனால அதிகமா படிஞ்சிருக்க கூட்டு வேதிப்பொருள்கள் உடையும். அதிலிருந்து வெளிவர்ற கெட்ட வாடை அடிக்குற மீத்தேன், நைட்ரேட் உட்பட்ட வேதிப்பொருள்கள் காத்துல கலந்து வெளியேறும். ஆக, இ.எம் ஊத்துறது மூலமா முதல் கட்டமா, மனுசங்களை பயமுறுத்துற கெட்ட வாடையை நிறுத்தலாம்..உண்மையான சமூகபணி இ.எம் கரைசலை கலந்து விடுறதால தண்ணியில கொஞ்சம் கொஞ்சமா மாற்றம் ஏற்படும். அதிக வேதிப்பொருள் காரணமா உயிரியல் பொருள் குறைஞ்சிருக்கும். அந்தத் தண்ணியில வேதிப்பொருள்கள் உடைபடுறதால அதன் அளவு குறையும். உயிரியல் பொருள்களின் அளவு அதிகமாகும். இதனால தண்ணியோட கறுப்பு நிறம் கொஞ்சம் கொஞ்சமா வெண்மை நிறமா மாறும். துர்நாற்றம் போகும். வெள்ளை நிற பறவைகள் நீர் நிலைகள்ல வந்து உட்காரும். கறுப்பு நிற பறவைகள் காணாம போயிடும். இயல்பாகவே அந்தத் தண்ணிக்கு பக்கத்துலகூட போகாத ஆடு, மாடுக தண்ணீர் குடிக்க போகும். கொசு உற்பத்தி குறையும். அதனால சுகாதாரமான வாழ்க்கை நமக்குக் கிடைக்க வாய்ப்பிருக்கு. ரொம்ப குறைஞ்ச செலவுல செயல்படுத்துற இந்தத் தொழில்நுட்பம் தமிழ்நாட்டுல பல பகுதிகள்ல செயல்படுத்தப்பட்டு நன்மை கிடைச்சிருக்கு. இந்த சூழ்நிலையில சின்ன சாக்கடை முதல் பெரிய நீர் நிலை வரையிலான பகுதிக்கு இதனை செய்யுறது மிகவும் சரியானது. இதெல்லாம் செய்யுறது ஒருபுறமிருந்தாலும், கழிவுகளாக வர்ற வேதிப்பொருள்களை மறுசுழற்சி செய்யுறது ரொம்ப முக்கியம். அதுதான் உண்மையான சமூகப்பணி. அதைவிட கூடுமானவரை நீர் நிலைகளை மாசுப்படுத்தாம இருக்குறதுதான் பொறுப்பான காரியம். .பெட்டிச் செய்தி இ.எம். கரைசல் செய்யும் வழிமுறை 'திறனூட்டப்பட்ட நுண்ணுயிரிகள்' எனப்படும் இ.எம். கரைசல் வெளி மார்க்கெட்டில் கிடைக்கும். 20 லிட்டர் டிரம்மில் 17 லிட்டர் தண்ணீர், 2 கிலோ நாட்டுச்சர்க்கரை, ஒரு லிட்டர் இ.எம் கலந்து இறுக்கமாக மூடி வைக்க வேண்டும். முதல் 3 நாட்கள் மூடி வைத்து, 4வது நாளிலிருந்து 4 நாட்களுக்கு ஒருமுறை மூடியைத் திறந்து மூடலாம். 7 நாட்களில் கரைசல் தயாராகும். 200 லிட்டர் தண்ணீருக்கு அரை லிட்டர் என்ற அளவில் இந்த திரவத்தைக் கலந்து முந்தைய இரவே வைத்துவிட்டு, அடுத்த நாள் நீர் நிலைகளில் பிரித்து ஊற்றலாம். (ஊறும்)