விதைகள்-19- வெ.ப்ரியா ராஜ்நாராயணன்விவசாயம் என்றாலே வாழ்வியல் முறை... அது வியாபாரம் இல்லை அப்படிங்குற நோக்கத்துல தான் நம்ம முன்னோர்கள் வாழ்ந்தாங்க. விவசாயம்னாலே இயற்கை முறை தான் அன்னைக்கு இருந்துச்சு. அப்படிப்பட்ட சூழல்ல தனக்கு தேவையானதை பயிர் பண்ணிக்கிட்டு தற்சார்பா வாழ்ந்தாங்க. அன்னிக்கு எல்லா விவசாயிகளுமே வீட்டுத்தோட்டம் வச்சிருந்தாங்க. புறக்கடை தோட்டத்துல வீட்டுக்குத் தேவையான காய்கறிகளை பயிர் பண்ணிக்கிட்டு இருந்தாங்க. அதுல எந்த ரகம் நல்ல மகசூல் கொடுக்கக்குதோ அந்த ரகத்தை அதிக அளவுல விதை பெருக்கம் செஞ்சு, பெரிய விவசாய நிலங்கள்லயும் போட்டாங்க. தங்களோட தேவை போக மிச்சத்தை வெளியில கொடுக்க ஆரம்பிச்சாங்க. சந்தைப்படுத்துனாங்க. உள்ளூர் சந்தையை ஊக்கப்படுத்தினாங்க. பண்டமாற்று முறை சிறப்பா இருந்தது..ஆய்வுக்கூடம்இதுல இருந்து நான் தெரிஞ்சுக்கிட்டது என்னன்னா, ஒவ்வொரு விவசாயிகிட்டயும் வீட்டுத்தோட்டம் அப்படிங்குற ஆய்வுக்கூடம் கட்டாயம் இருக்கணும். அப்படியிருந்தா நம்ம நிறைய விசயங்களை செய்ய முடியும். பெரிய விவசாயமா எடுத்துட்டு போகும்போது நிறைய சாதிக்க முடியும்ங்குறது என்னோட அனுபவத்துல தோணுச்சு. நான் கடந்த 15 வருஷமா, வீட்டுத் தோட்டம்ங்கிற ஆய்வுக்கூடத்தை வச்சிட்டுதான் இருக்குறேன். அதுல எனக்கு தேவையானதை உற்பத்தி பண்ணிக்குறேன். எனக்கு போக மிச்சமாகுற காய்கறிகளை மத்தவங்களுக்குக் கொடுக்க முடியுது. அதுமூலமா வருமானத்தையும் ஏற்படுத்திக்க முடியுது. அதுமட்டுமில்லாம மரபு ரகங்களைக் காப்பாத்தி கொண்டு போறதுக்கு இந்த வீட்டுத்தோட்டம் பெருந்துணையா இருக்குது..வீட்டுத்தோட்டத்தில் நிலக்கடலைவிதைப்பயணம் போகும்போது பல்வேறு இடங்கள்ல சேகரிச்ச 800க்கும் மேற்பட்ட மரபு ரக காய்கறி, கிழங்கு வகைகளைக் காப்பாத்தி, உற்பத்தி பண்ணி பரவலாக்கம் பண்ண வீட்டுத் தோட்டம் உதவியா இருக்குது. குழந்தைகளுக்கு சாப்பிட கடைகள்ல என்னென்னமோ வாங்கி கொடுக்குறதைவிட நிலக்கடலை கொடுக்கலாம்னு தோணுச்சு. உடனடியா வீட்டுத்தோட்டத்துல நிலக்கடலையும் விளைய வெச்சேன். நல்ல மகசூல் எடுக்க முடிஞ்சது. 10 செடி நட்டாலுமே போதும். அதை எடுக்கும்போது ரொம்ப ஆனந்தமா இருக்கும். அதுல இருக்குற நிலக்கடலை பெரிய ஆனந்தமா இருக்கும். அதை நானும் அனுபவிச்சேன்.கொஞ்சம் குழந்தைகளுக்கு அவிச்சுக் கொடுக்குறது. கொஞ்சத்தை காய வச்சு பொடி தயார் பண்ணி வச்சுக்குறது. கடலையா வறுத்து சாப்பிடுறது. இப்படி சிறிய அளவுல பயன்படுத்துனேன். ஒரு கட்டத்துல இதைக் கொஞ்சம் நல்லா பண்ணுனா என்னன்னு தோணுச்சு.திண்டுக்கல் பக்கம் விதைத்தீவை நான் உருவாக்கிட்டு இருக்கேன். அங்க ஒன்னேகால் ஏக்கர்ல நிலக்கடலை போட ஆரம்பிச்சேன். வீட்டுத்தோட்டம்ங்குற ஆய்வுக்கூடத்துல என்னெல்லாம் கத்துக்கிட்டேனோ அதைப் பெரிய விவசாய நிலத்துலயும் செஞ்சு பார்த்தேன். ரொம்ப சிறப்பா இருந்தது. மரபு ரக நிலக்கடலை எப்படி சாகுபடி பண்ணி மகசூல் எடுத்தேன்ங்குறதைத்தான் இந்தக் கட்டுரையில நாம பார்க்கப் போறோம்..விருதுநகர் நாட்டு நிலக்கடலைநம்ம தமிழ்நாட்டுக்குள்ளயே நிறைய நிலக்கடலைகள் போடுறாங்க. அதுல என்னுடைய பாட்டி ஊரான விருதுநகர்ல நாட்டு நிலக்கடலையை அங்க இருக்க கிராமங்கள்ல மானாவாரியா சாகுபடி செய்வாங்க. அந்த நிலக்கடலையை 2021-ம் வருஷம் தை பட்டத்துல வாங்கி போட்டேன். அன்றைக்கு இருந்த சூழல்ல அந்த விதையை பெருசா போட்டு எடுத்து பரவலாக்கம் பண்ற அளவுக்கு இடம் இல்லாம இருந்தது. விதைத்தீவுக்கான தோட்டம் அமைஞ்சதுக்கப்பறம் தான் இதனுடைய தேடல் அதிகமாச்சு. சிவகாசியைச் சேர்ந்த ஒரு விவசாயி மூலமா இந்த விருதுநகர் நாட்டு நிலக்கடலை விதை கிடைச்சது..முக்கால் அடி இடைவெளிமரபு ரக விதைகளைப் பயன்படுத்தி இயற்கை விவசாயம் பண்ணுனா கண்டிப்பா வெற்றியடைய முடியும். மானாவாரியா அங்க விளைஞ்ச மரபு நிலக்கடலையை இங்கே கொண்டுவந்து போட்டோம். கடலை சின்னதா தான் இருக்கும். பருப்பு ஓரளவுக்கு நல்லா இருக்கு. உடைக்க முடியாது. கடினமா இருக்கும். பருப்பு நல்ல திரட்சியா இருக்குது. கடலை பெருசா இருக்காது. சின்ன சின்ன கடலையா நிறைய இருக்கும். இந்த ரகத்தைப் பொறுத்த வரைக்கும், ஒரு விதைக்கும், இன்னொரு விதைக்கும் முக்கால் அடி இடைவெளி இருக்குற மாதிரி நட்டோம்னா சிறப்பா இருக்கும். காரணம் செடி அடர்த்தியா வரக்கூடியது..அதிக செலவு ஆகாதுதோட்டத்துல பழையகால முறைப்படி பாத்தி அமைச்சு, பாத்திகளுக்குள்ள களைக்கொத்துலதான் விதை போட்டோம். இன்னும் நிறைய கருவிகள் உபயோகப்படுத்தி செஞ்சிருந்தா இவ்வளவு செலவு வந்துருக்காது. பருப்பு செலவு, நிலக்கடலை போட்ட செலவு, முதல் களை, இரண்டாம் களை, மண் அணைப்போட, நிலக்கடலை எடுப்பு மட்டும்தான் செலவு. வேற செலவு பண்ணிருந்தா இன்னும் 10 சதவிகிதம் அதிக மகசூல் எடுத்துருக்கலாம். ஆனா, அதுக்காக நாம பண்ற செலவு அதிகம். அந்த செலவோடு, நாம எடுக்குற 10 சதவிகித மகசூல் பெருசா இருக்காது. அதுனால அவ்வளவு சிரத்தை எடுக்கத் தேவையில்ல.என்னுடைய சின்ன வயசுல நிலக்கடை சாகுபடி செய்ய உழுதுட்டு வெறும் தொழுவுரம் மட்டும் அடிப்பாங்க. வேற எதுமே செய்யுறதில்ல. அவ்வளவு சிறப்பான மகசூலை எடுத்துட்டுதான் இருந்தாங்க. இன்னைக்கு மாதிரி எந்த தெளிப்புமே இல்லாத காலக்கட்டம். அன்னைக்கு மகசூல் கிடைக்காம இருந்ததே கிடையாது.நான் வீட்டுத்தோட்டத்துல எப்படி எதுவும் செய்யாம, கம்மியான வேலைகளை செஞ்சேனோ அதேமாதிரி நிலத்துலயும் செஞ்சு பார்த்தேன். மகசூல் நல்லாவே வந்தது. இந்த ரகத்தைத் தெரிஞ்சவங்க கண்டிப்பா இதை விடமாட்டாங்க. அதனால அதிகமாவே விவசாயிகள் வாங்கிக்கிட்டாங்க. இந்தமுறை கொஞ்சம் வித்தியாசமான அனுபவங்களைக் கொடுத்தது..மயில்களை விரட்டும் கழிவு மீன்2022-ம் வருஷம் போடும்போது தை பட்டத்தைத் தேர்ந்தெடுத்தேன். பொங்கல் முடிஞ்ச மறுநாள் நிலக்கடலையை நட்டேன். மார்கழி கடைசியிலயே எங்க ஊர் பகுதிகள்ல நடுவாங்க. ஆனா, ஒரு வாரம் தள்ளித்தான் நட்டேன். மயில் பிரச்சனைகளும் அந்த சமயத்துல இருந்தது. அதுக்கான மாற்று ஏற்பாடுகளா அங்கங்க கழிவு மீன்களை சிதற விட்டுட்டோம். கழிவு மீன் வாடைக்கு மயில்கள் வராது. பக்கத்து காடுகள்ல வெடி போட்டாங்க. எனக்கு அதுக்கான சூழல் கிடையாது. பெருசா தெளிப்புகளோ, வேற எதுவுமோ குடுக்கல. அதுக்கான மகசூல்தான் கிடைச்சது. ஆனா நட்டமில்ல.அதேமாதிரி 2023-ம் வருஷம் கொஞ்சம் வித்தியாசமா, கொஞ்ச நாள் தள்ளி நடலாம்னு தை கடைசியில போட்டேன். இந்த தடவை வெயில் காலத்துலயும் அதிகப்படியான மழை. அதுனால தண்ணி பாய்ச்சுற வேலை இல்லாம போயிடுச்சு. செடி ரொம்ப அதிகமாவே வளர்ச்சி அடைஞ்சிடுச்சு. பொதுவா பூ பூத்த பிறகு மேல் வளர்ச்சியைக் கட்டுப்படுத்துனாலே கீழே மகசூல் நிறைய வரும். இதை நான் கிழங்குகளுக்கு செய்யுறதுண்டு. நிலக்கடலைக்கும் மேல் வளர்ச்சியைக் கட்டுப்படுத்துனா மகசூல் அதிகமா கிடைக்கும்..செடி 25,000 ரூபாய்முன்னல்லாம் ஆள் விட்டு, செடிகளை மிதிச்சுட்டு போவாங்க. இப்போ 'டிரம்' உருட்டுறது மாதிரி நிறைய இருக்கு. இங்கே என்னோட சூழல், ஆள் பற்றாக்குறை, பயணங்கள் அதிகமா பண்றதால எதுவும் என்னால செய்ய முடியல. 2 தண்ணி மட்டும்தான் விட்டோம். மழை அதிகமா பெய்ஞ்சு தண்ணி தேவைப்படாத சூழல் உருவாகிடுச்சு. செடி வளர்ச்சி அதிகமாகிடுச்சு. இப்படி வளர்ச்சி அதிகமா இருந்தா கீழே காய் பிடிக்காதுங்குறது நல்லா தெரிஞ்சது. மகசூல் அதிகமா இல்லன்னாலும் இழப்பு இருக்காது. செலவு பண்ணுன காசை எடுக்குணுமேன்னு மனக்கவலையோட இருக்குறதைவிட குறைந்த செலவுல வர்றது வரட்டும்னு நெனச்சு பண்ணுனேன். கடைசியா அறுவடை பண்ணும்போது எந்தக் குறைபாடும் இல்லை. செடி பெருசா இருந்தது. செடியே 25,000 ரூபாய் அளவுக்கு வந்தது. ஆடு, மாடுகளுக்கு உணவா இருந்தது. நிலக்கடலை ஒரு ஏக்கர் 30 சென்ட் நிலத்துல 1,300 கிலோ மகசூல் கிடைச்சது..பெட்டிச் செய்திநிலக்கடலை சாகுபடிஒரு அடிக்கு ஒரு கடலைச் செடி நடவு பண்ணுனோம். வாய்க்கால் கரைகள்ல உளுந்து, பாசிப்பயறு நட்டோம். ஒரு சில இடங்கள்ல கொத்தவரை மாதிரியான காய்கறிப் பயிர்கள், கிழங்குகள் நட்டோம். அதிகமா இல்லாம தற்சார்பு வாழ்க்கைக்குத் தேவையான அளவுக்குப் பயிர் பண்றதுக்கு வாய்க்கால் கரைகளைப் பயன்படுத்திக்கிட்டேன். வேலி போட்ருக்கோம். ஒரு பக்கம் மட்டும் வேலி இல்லாம இருக்கு. ஆடுகள் மேயுறதுக்கு வாய்ப்பு இருக்குறதால, ஓரக்கால்கள்ல 3 முதல் 4 அடிக்கு எள்ளு விதைச்சு விட்டோம். இதனால ஆடுகள் உள்ள வராம இருக்குறதோட என் வீட்டுக்குத் தேவையான எள்ளும் கிடைக்குது. ஆங்காங்கே கொட்டைமுத்து செடிகளையும் வச்சுருக்கோம். நிலக்கடலை பணப்பயிரா இருந்தாலும் அதோட துவரை, ஆமணக்கு, எள்ளு, சில கிழங்கு வகைகள், கொத்தவரை, கத்தரி, தக்காளி, மிளகாய் இவை எல்லாத்தையுமே ஒவ்வொரு வாய்க்கால் கரைகள்லயும் நடவு பண்ணிக்கிட்டோம். இதுலயே எனக்குத் தேவையானதைப் பூர்த்தி பண்ணிக்க முடிஞ்சது.வாய்க்கால் கரைகள்ல நட்டதால நிலக்கடலைக்கு பாயுற தண்ணியே போதுமானது. தனி கவனம் எதும் தேவையில்ல. நோய் தாக்குதல் இல்லாம இருந்தது. அதுக்கான பூச்சி விரட்டிகளோ, பயிர் வளர்ச்சி ஊக்கிகளோ கொடுக்கல. உழும்போது தொழுவுரம் போட்டு நல்லா உழுது, நிலத்தை ஆறப்போட்டுட்டோம். ஒரு தடவை மழை வந்து லேசா களை முளைச்சது. களைகளைப் பெருசா வளரவிட்டு உழுதா கட்டுப்படுத்த முடியாது. களைகள் சின்னதா வளர்ந்து பூ பருவம் வர்றதுக்கு முன்னாடியே உழுது விட்டுட்டோம்னா களைகள் நல்லா குறையும். அதைத்தான் செஞ்சோம். நல்லபடியா நிலக்கடலை சாகுபடியை முடிச்சு மகசூல் எடுத்தோம்..பெட்டிச் செய்திகுப்பைமேடு சொல்லும் சேதிஇயற்கை விவசாயத்தை நான் குப்பைமேட்டுலதான் கத்துக்கிட்டேன். குப்பைமேடுதான் நிறைய சொல்லிக் கொடுத்துருக்கு. அங்க, யாரோட பராமரிப்பும் இல்லாம ஒரு கத்தரிச்செடி, மிளகாய் செடி முளைக்குறத பார்த்துருப்போம். அதுமாதிரிதான் நானும் பார்த்தேன். அப்போ, அங்க என்ன இருக்கு? எந்த மனுசனுமே தண்ணி ஊத்தல. யாரும் உரம் போடல. மேல் தெளிப்புகள் எதும் கொடுக்கல. இருந்தாலுமே நோய் எதிர்ப்பு சக்தியோட ரொம்ப செழிப்பா, நல்ல காய்ப்போட அந்த செடி இருக்கும். அந்த விஷயம்தான் 2007-ல எனக்குப் புரிய வச்சது. அங்க என்ன இருக்கு? குப்பைதான் இருக்கு. மட்குக்குப்பை நிறைஞ்ச மண்ணுல எதுனாலும் சிறப்பா வரும். அதைத்தான் இயற்கை நமக்கு சொல்லிக் கொடுக்குது.பொதுவா, நம்ம செடிகள் வைக்குறோம்ங்குற பட்சத்துல பூச்சித்தாக்குதல் வருதுன்னு சொல்றோம். பூச்சிகள் சாப்பிட்டா, சாப்பிட்டுப் போகட்டும். அதிகபட்சமா 20 சதவிகிதம் சாப்பிட்டுப் போகும். அதை விட்டுடலாம். அந்த 20 சதவிகித்தையும் காப்பாத்தணும்னு நினைச்சு விஷங்களைத் தெளிக்குறதுக்காக நாம பண்ற செலவு, உழைப்பு, நேரம் எல்லாத்தையும் பார்த்தா, அந்த 20 சதவிகிதம் எடுக்குறது பெரிய வித்தியாசம் கிடையாது. அப்படித்தான் எனக்கு தோணும். இன்னொன்னு பூச்சிகள் நல்ல ஆரோக்கியமா இருக்குற செடிகளைச் சாப்பிடாது. ஆரோக்கியமற்ற செடிகளைத்தான் சாப்பிட்டுட்டு போகும். அப்போ பூச்சி தாக்காம இருக்கணும்னா செடி ஆரோக்கியமா இருக்கணும். செடி ஆரோக்கியமா இருக்கணும்னா மண்ணு ஆரோக்கியமா இருக்கணும். செடி நல்ல எதிர்ப்பு சக்தியோட இருக்கும். எனக்கு இயற்கை சொல்லித்தந்த பாடம் இதுதான்..பெட்டிச் செய்திவிதையின் கதைமரபுரக விதைத்தேடல் பயணத்துல பல மாநிலங்கள்ல இருக்க விதை சேகரிப்பாளர்களோட தொடர்பு கிடைச்சது. அதுல குஜராத் நண்பர் மூலமா மரபு ரக நிலக்கடலை பத்தி நிறைய தெரிஞ்சுக்கிட்டேன். கருப்பு நிற நிலக்கடலை, அடர் சிவப்பு நிற நிலக்கடலை, இரு நிற நிலக்கடலை. இப்போ இதுல 'ஹைப்ரிட்' நிலக்கடலை ரகங்களும் நிறைய இருக்குது. ஆனா நாங்க பரம்பரை பரம்பரையா இந்த ரகங்களை மட்டுமே ஒருத்தர் மாத்தி ஒருத்தர் விளைய வைக்கிறோம். ஒவ்வொரு ரகத்தையும் ஒருத்தர்னு விளைய வைப்போம். பிறகு எங்களுக்குள்ள மாத்திக்குவோம். அதுமூலமா இனத்தைக் காப்பாத்திட்டு வர்றோம்னு சொன்னதோட சில நிலக்கடலை ரகங்களோட விதைகளைக் கொடுத்தாரு. எனக்கு மிகச் சிறிய அளவுலதான் கிடைச்சது. அதை வீட்டுத்தோட்டத்துல போட்டு கொஞ்சமா விதை பெருக்கம் பண்ணி, அதையும் வரும் காலத்துல விவசாய நிலத்துல தனித்தனியா போட்டு எடுத்து விதை பெருக்கம் பண்ணணும். அதுல எது ரொம்ப அருமையா வருதோ அதை எல்லா பக்கமும் கொடுக்கலாம் அப்படின்னு இருக்கேன்.