- எஸ்.ஷக்திவற்றலாக்கி விற்பனை செய்றதுக்காக மிளகாய் சாகுபடியில் இறங்கியிருக்கேன். காயை செடியிலேயே காயவிடலாமா? - திருமேனி, விருத்தாச்சலம..தப்புங்க, ரொம்ப தப்பு. நாம நடுற பயிர் நீண்ட காலம் ஆரோக்கியமாக இருந்து அறுவடையைத் தந்தால்தான் அது வெற்றிகரமான விவசாயம். விவசாயிகள் அறியாமல் செய்யும் சில விஷயங்கள் பயிரின் ஆயுளைக் குறைக்கவும், அதன் வளர்ச்சியைத் தடுக்கவும் செய்யுது. பச்சை மிளகாயை விடவும் காய வைக்கப்பட்ட மிளகாய்க்கு அதிக லாபம் கிடைக்குதுதான். அதுக்காக பல விவசாயிகள் செடியிலேயே காயைக் காய விடுறாங்க. அதுவும் ஆரம்ப நிலை பறிப்புகளைக் கூட இப்படி பண்றாங்க. இதனால நிச்சயமா மகசூல் குறையும். அது மட்டுமில்லாம செடியின் வளர்ச்சியும் பாதிப்படையும். அதனால் ஆரம்பக்கட்ட அறுவடையை காயாக எடுத்து, களத்தில போட்டு காய வெச்சு விற்பனை பண்ணுங்க. அதுதான் நல்லது..வரிக்கத்தரி சாகுபடி செய்யலாம்னு இருக்கேன். இந்தச் சாகுபடிக்கு ஏற்ற பட்டம் எது? - தாரணி ரேவதி, கரியாமங்கலம். காலம் முழுக்க மகசூல் தர்றதோட, காலம் முழுக்க 'டிமாண்டு'ம் உள்ள பயிர்தான் கத்தரி. அதிலும் வரிக்கத்தரிக்குன்னு பெரிய ரசிகர் கூட்டமே இருக்குதுங்க. வரிக்கத்தரி எல்லா வகை மண்ணிலுமே விளையும். இதுதான் பட்டம், அந்த மண்ணுதான் சரின்னு கிடையாது. எல்லா பட்டத்திலும் சாகுபடி செய்யலாம். கத்தரியைப் பொறுத்தவரைக்கும் நீங்களே தரமான செடியில இருந்து விதையை எடுத்து வெச்சுக்கோங்க. இது அடுத்த விதைப்புக்கு கைகொடுக்கும்..செடி முருங்கை பயிர் பண்ணியிருக்கோம். இதுல ஊடுபயிர் சாத்தியமா? - அய்யண்ணன், பல்லடம் அண்ணே என்ன கேள்விண்ணே கேட்டுட்டீங்க, தாராளமா ஊடுபயிர் விவசாயம் சாத்தியம்தானுங்க. புத்திசாலித்தனமான விவசாயம் எதுன்னு கேட்டா, ஒற்றை பயிரை நம்பி இருக்காம பல பயிர் சாகுபடி பண்றதுதான். ஒன்னு கை விட்டாலும் இன்னொன்று கைகொடுக்குமுங்க. இதுக்காக அதிக பரப்பளவு நிலம்தான் வேணும்னு எடுத்துக்கக் கூடாது. நம்மகிட்ட இருக்குற குறைந்தளவு நிலத்தைக் கூடப் பயன்படுத்தி பல பயிர் சாகுபடி பண்ணலாம். அதுக்கு சாமர்த்தியம்தான் அவசியம். பல பயிர் சாகுபடிக்கு அருமையா கைகொடுப்பதுதான் ஊடுபயிர் சாகுபடி. அதாவது 'மெயின்' பயிர்களுக்கு இடையிலும், நடுவிலும், அதன் நிழலிலும் வேறொரு பயிரைப் பயிரிட்டு வளர்க்கும் முறை. அந்த வகையில செடி முருங்கை போட்டிருக்கிற நீங்க ஊடுபயிரா கத்தரி, வெண்டைக்காய், தக்காளி, மிளகாய் போன்றவற்றை தாராளமாக ஊடுபயிரா வளர்க்கலாம். ஏதோ ஒன்னு உங்களை கைவிட்டாலும்கூட மற்றது வளமாகக் கைகொடுக்கும். ஊடுபயிர் முறையை ஒரு போதும் நீங்க கைவிட்டுடாதீங்க..நாட்டின பசுக்கள் வளர்க்கிறேன். மூச்சு கோளாறுக்கு ஏதாச்சும் கை மருந்து இருக்குதுங்ளா? - ரத்தினம், சிங்கப்பெருமாள்கோயில். வாசிக்கவே இனிமையா இருக்குது ரத்தினம் ஐயா. நாட்டின பசுக்கள் வளர்க்குறீங்க, அதுங்களுக்கான ஆரோக்கிய தொந்தரவுகளுக்கும் கூட ஆங்கில மருத்துவத்தை தேடாம, இயற்கை வழி தீர்வைத் தேடுற உங்களை நினைக்கிறப்ப மெய்யாகவே பெருமையா இருக்குது. பசு உள்ளிட்ட கால்நடைகளுக்கு சுவாசக்கோளாறுகள் வர்றது இயல்புதானுங்க. மூக்குல சளி ஒழுகுற மாதிரியான சிக்கல்கள் இருக்கும். இதுக்கு தீர்வு இதுதான்... ஒரு இரும்புக் கரண்டியில கரியை எடுத்து தீயாக்கி, வேப்பிலை, துளசி, கற்பூரம், மஞ்சள் தூள் போட்டு புகைபிடிச்சு விட்டோம்னா சளி மற்றும் சுவாசக்கோளாறுகள் குணமாகுமுங்க. நம்ம இயற்கை கால்நடை மருத்துவர் கோவிந்தராஜ் பரிந்துரைக்கும் சிகிச்சை முறைதான் இது..கோழிப்பேன்களை ஒழிக்க என்னென்ன இலைகளை வீட்டு வைத்தியத்தில் பயன்படுத்தலாம்? - அன்னபூரணி, ஸ்ரீவைகுண்டம். கோழி வளர்ப்பாளர்களுக்கு கோழிப்பேன் மிகப்பெரிய சவால்தான். நமக்கு உடலில் தோல் நோய் வந்தால் எப்படி அதை உரசி, சொரிந்து காயப்படுத்திக் கொண்டே இருக்கிறோமோ அதேபோல் கோழிகளும் தன்னைத் தானே பேன் தொல்லையால் கொத்திக் கொண்டு சங்கடப்படும். இதை ஒழிக்க... கோழிக்கொட்டாய்க்குள் சோற்றுக்கற்றாழை தொங்கவிடலாம். அதில் மட்டுப்படவில்லை என்றால் நொச்சி இலை, எருக்கன் இலை, துளசி, மருதாணி இலைகளை ஆங்காங்கே பரப்பி வைத்தால் கோழிப்பேன்கள் அதில் ஒட்டிக்கொள்ளும். பிறகு, அதை அப்புறப்படுத்திவிடலாம். இதுமட்டும் இல்லாமல் வேப்பிலை, எருக்கன் இலை, புகையிலை, நொச்சி இலை, அருகம்புல் இலைகளைக் காய வைத்து, பச்சை வேப்பிலையில் மூடி புகைமூட்டம் போட்டும் கோழிப்பேன்களை ஒழிக்கலாம்னு இயற்கை மருத்துவர்கள் சொல்றாங்க.