- ஏங்கெல்ஸ் ராஜா.அன்றைக்குக் கட்டாந்தரை...இன்றைக்கு அடர்வன காடு!50 ஏக்கர் அதிசயம்!வானகம் தொடங்குன புதுசுல ஒரு நண்பர் அங்க வந்தாரு. சில 100 நெல்லிக்கன்றுகளை கையில கொடுத்து, இதை வானகத்துக்காகக் கொடுக்குறேன்னு சொன்னாரு. அப்ப அவரைப் பத்தி எங்களுக்குத் தெரியல. அதைக் கொடுத்துட்டு அய்யாவை பார்க்கணும்னு சொன்னாரு. அய்யாகிட்ட போய் சொன்னோம். வரச் சொன்னாரு. அவரைப் பார்த்தவுடனே...''வாய்யா...வாய்யா...என்னய்யா ரொம்ப நாளா ஆளைக் காணோம்''னு சொல்லி விசாரிச்சாரு. அப்புறம் எங்களுக்கு அறிமுகப்படுத்தி வெச்சாரு. "இவரு பண்ணைக்கு நாம தான் பேர் வெச்சோம். குழந்தைக்கும் நாம தான் பேர் வெச்சோம். ஒரு விஷயத்தை நுட்பத்திலும் நுட்பமா நுணுக்கிப் பார்க்கக்கூடிய நபர்கள்ல முக்கியமான ஆளுய்யா ராஜேந்திரன். ஒரு பொருளை மதிப்புகூட்டி விற்பனை செஞ்சா தான் லாபம்... அந்தப் பொருளுக்கும் மதிப்புங்குறதை உணர்ந்து செய்யுறதுல கைதேர்ந்த ஆளு. இவரு எதையும் நேரடியா விக்குறதில்ல. அதை உச்ச பொருளா எப்படி மதிப்புக்கூட்டி விற்பனை செய்யணுமோ அப்படித்தான் விக்குறாரு. மதிப்புக்கூட்டுற மந்திரத்தை நாம ராஜேந்திரன்கிட்ட தான் கத்துக்கணும்"னு சொன்னாரு..பல்லடத்தைச் சேர்ந்த நெல்லி விவசாயியான ராஜேந்திரன், தன்னோட விளைபொருளை மதிப்புக்கூட்டி சந்தைப்படுத்துறதால 'நிவி' ராஜேந்திரன் ஆகிட்டாரு. அதைவிட, வானகம் பக்கத்துல அவர் உருவாக்கி இருக்குற அடர்வனம் எல்லோரும் பார்க்க வேண்டிய இடம். சூழலுக்குப் பலவித நன்மைகள் செய்யுற அந்தப் பண்ணையைப் பற்றியும், அய்யாவோட நட்பு பற்றியும் ராஜேந்திரன்கிட்ட கேட்டதும், அருவியா கொட்டி தீர்த்துட்டாரு..பாதம் பட்ட ராசி''நான் இயற்கை வேளாண் விஞ்ஞானி அய்யா நம்மாழ்வாரை, 1995-ம் வருஷம் திண்டுக்கல் தாடிக்கொம்பு ரோட்டுல ஆடிட்டர் பாலசுப்ரமணி அய்யாவோட 'மீட்டிங்'ல சந்திச்சேன். அதுல தான் அய்யாவோட நட்பு கிடைச்சது. அதுக்கப்பறம் பல்லடம் முத்துக்குமாரோட தாய் தமிழ் பள்ளிக்கு அய்யா வரும்போது அங்கேயும் போய் சந்திச்சேன். 'இயற்கை விவசாயமா 10 ஏக்கர்ல நெல்லி சாகுபடி பண்ணிருக்கோம். வந்து பார்த்து ஆலோசனை சொல்லுங்க'ன்னு சொல்லி கேட்டோம். அவரும் பண்ணைக்கு வந்து பார்த்து ஆலோசனை சொன்னார். அப்போ இருந்து அய்யா பல்லடம் வரும்போதெல்லாம் என்னைத் தொடர்பு கொண்டு பேசுவாரு.எங்க பார்த்தாலும் பேர் சொல்லி கூப்பிடுற அளவுக்கு நெருக்கமாகிட்டோம். மண்வளம் சரியில்லாத பகுதியில 10 ஏக்கர் சாகுபடியில இருந்து இயற்கை விவசாயத்துல வெற்றியடைந்ததுக்குக் காரணம் அய்யாவோட பாதம் எங்க நிலத்துல பட்டதுதான்..நெல்லியில் ஒரு சாதனைதமிழ்நாடு மட்டுமல்லாம இந்திய அளவுல நெல்லியில புதிய சாதனை பண்ணியிருக்கோம்னா அதுக்கு அய்யாவோட ஆலோசனை தான் காரணம். அவரு சொல்லிக்கொடுத்த மூடாக்கு, பூச்சி விரட்டி, இயற்கை இடுபொருள் தயாரிப்பு, பயன்பாடு எல்லாம் தான் காரணம். இன்னிக்கு இந்தியா முழுக்க நெல்லிக்கனியில ஒரு சாதனை பண்ணியிருக்கோம்னா அது அய்யாவோட ஆசி. என்னோட பையனுக்கு பேர் வெச்சது கூட அய்யா தான்..உயிர்வேலியில் 50,000 மரங்கள்இப்ப, 3 இடத்துல என்னோட பண்ணை இருக்குது. பல்லடத்துல 17 ஏக்கர். அங்கயிருந்து தான் ஆரம்பிச்சோம். அங்க பிரதான பயிர் நெல்லி. அதோட நாவல், சப்போட்டா, சீத்தா மாதிரியான பழ மரங்களை வெச்சிருக்கோம். இயற்கை வேளாண்மையில அவசியம் இருக்க வேண்டியது உயிர்வேலி. அந்தவகையில அந்தப் பண்ணையில உயிர்வேலியில 50,000 மரங்கள் வெச்சிருக்கோம். ஒட்டன்சத்திரத்துல மலையடிவாரத்துல 125 ஏக்கர். அங்க நெல்லி, தென்னை இருக்கு. கரை முழுக்க வெட்டிவேர் இருக்கு. முழுக்க சொட்டு நீர் பாசனம் தான்.7 வருஷத்துக்கு முன்னாடி வானகம் பக்கத்துல வையம்பட்டி 'டோல்கேட்' இருக்க நடுப்பட்டியில இடம் வாங்குனோம். அது 50 ஏக்கர். வானகத்துக்கு நேர் தென்புறம். அங்க மலைப்பகுதியில பெய்யுற மழை தண்ணி வீணா போயிட்டு இருந்துச்சு. நாம இடம் வாங்குனதும் அங்க 12 அடிக்கு அகழி மாதிரி வெட்டுனோம். மலையோரத்துலயே ஒரு கிலோ மீட்டர் தூரம் குழி எடுத்தோம்..ஒவ்வொரு வரப்பும் ஒரு தடுப்பணைஇப்ப அந்தப் பக்கம் பெய்யுற மழை தண்ணி நம்ம நிலத்துல இருக்க குழியில நிறையுது. வயல்லயும் அங்கங்க 'செக் டேம்' மாதிரி வரப்பு அமைச்சிருக்கோம். ஒவ்வொரு வரப்பையும் 'செக் டேம்' மாதிரி பண்ணியிருக்கோம். வயல்ல இருந்த கல்லையெல்லாம் தூக்கி வரப்புல போட்டு மேடாக்கிட்டோம். இப்ப அந்த வயல்ல விழுகுற மழைத் தண்ணி ஒரு சொட்டுகூட வெளியே போகாது. இதோட பலன் எனக்கு மட்டுமில்ல... பக்கத்துல இருக்க ஊர்களுக்கும் கிடைச்சிருக்கு, நான் அங்க நிலம் வாங்கி, வேலை ஆரம்பிக்கும்போது அது வறட்சியான பகுதி. ஆனா, இன்னிக்கு நிலத்தடி நீர் வளம் நல்லாயிருக்கு. அந்தளவுக்கு நீர் மேலாண்மை சிறப்பா பண்ணியிருக்கோம்..1,50,000 மரங்கள்... 10,000 பனைநிலத்தைச் சுற்றி உயிர்வேலி அமைச்சோம். நம்ம முன்னோர்கள் உயிர்வேலியில வெச்ச மரங்களைத் தான் வெச்சோம். அதோட உயிர்வேலி மூலமா ஒரு வருமானமும் கிடைக்குற மாதிரி திட்டமிட்டோம். அதுக்காக உயிர்வேலியில விலை உயர்ந்த மரங்களை நடவு பண்ணுனோம். எனக்குத் தெரிஞ்சு இந்தியாவுலயே நான் தான் வேலியில இந்த மரங்களை வெச்சிருப்பேன்னு நினைக்கிறேன். ஈட்டி, வேங்கை, மருது, சந்தனம், செம்மரம்னு வேலியிலயே ஒன்றரை லட்சம் மரம் வெச்சிருக்கோம். வேலியோட கடைசி பக்கத்துல 10,000 பனை வெச்சிருக்கோம். பண்ணை வேலை ஆரம்பிச்சு 7 வருஷம் ஆச்சு. மரங்கள் வெச்சு 5 வருஷம் ஆகுது.ஒரு காடுங்கிறது 120 ஏக்கர் இருக்கணும்னு சொல்வாங்க. 50,000 முதல் 55,000 மரங்கள் இருந்தாலே அது காடு தான்''னு அய்யா சொல்வாங்க. நாங்க 50 ஏக்கர்லயே ஒன்றரை லட்சம் மரங்கள் நட்டிருக்கோம். அதாவது 3 காடுகளை உருவாக்கியிருக்கோம். ஒரு காடு இருந்தா, அதைச்சுத்தி 5 கிலோ மீட்டருக்கு நல்லா மழை பெய்யும். 3 காடு இருந்தா கேட்கவே வேணாம். அதுதான் இப்ப இந்தப் பகுதியிலயும் நடந்துகிட்டு இருக்குது. இப்ப இந்தப் பகுதியில 'வாட்டர் சோர்ஸ்' அதிகமாகியிருக்கு..கரைகளில் மூலிகைகள்வயல் கரைகள்ல பிரண்டை, கற்றாழை மாதிரியான மூலிகைகளைச் சாகுபடி பண்றோம். காட்டுக்குள்ள பார்த்தீங்கன்னா 12 அடி இடைவெளியில ஒரு நெல்லி, ஒரு செம்மரம், ஒரு தென்னை வெச்சிருக்கோம். கரையில 3 அடி, 6 அடின்னு இடத்துக்கு ஏத்த மாதிரி செம்மரம் வெச்சிருக்கோம். செம்மரம் மட்டும் 35,000 மரங்கள் இருக்கு. அதோட ஈட்டி, வேங்கை, மகோகனி, மருது, சந்தனம்னு ஒரு அடர்வனம் மாதிரி இருக்கு. ஒரு காலத்துல கட்டாந்தரையா இருந்த இடம் இன்னிக்கு காடா மாறியிருக்கு..ஆண்டுக்கு 50,00,000 ரூபாய்நெல்லிக்கனி எடுத்து ஒரு விவசாயி வெற்றியாளர் ஆகணும்னா அதை நாம நேரடியா சந்தைப்படுத்தணும். அதுக்கு நான் ஒரு முன்னுதாரணம். இன்னைக்கு பணம் பணம்னு வேகமா ஓடிட்டு இருக்கோம். நமக்குத் தெரிஞ்சு முதல்ல அங்கொன்னும் இங்கொன்னுமா இருந்தா ஆஸ்பத்திரி இன்னிக்கு ஆயிரக்கணக்குல உருவாகிடுச்சு. இன்னும் அதிகமாகும். அப்படி பிரச்சனைகள் அதிகமாகும்போதுதான் இயற்கை விவசாயத்துல விளையுற பொருட்கள் பற்றித் தெரியும். இந்தப் பண்ணையில 5,௦௦௦ நெல்லி மரங்கள் இருக்கு. இதுல வருஷம் 50 லட்சம் ரூபாய் வருமானம் வருது. ஒரு மரம் 1,000 ரூபாய் வரைக்கும் கொடுக்குது..75 கோடி ரூபாய்அது இல்லாம செம்மரம் உள்பட பண்ணையில 1,50,000 மரங்கள் இருக்குது. எல்லாம் நெருக்கமா இருக்குறதால போட்டி போட்டு மேல போகும்போது நல்லா பெருத்து வளருது. அறுவடை செய்யும்போது ஒரு மரத்தோட மதிப்பு 5,000 ரூபாய்னு போட்டாலே இந்த 1,50,000 மரத்துக்கு 75 கோடி ரூபாய் ஆகுது. அது கிடைக்க 20 முதல் 30 வருஷம் ஆகும். பணம் முக்கியம்ங்குறதை விடச் சுற்றுச்சூழலை பாதுகாக்குறோம். அது பல்லுயிர் பெருகுறதுக்கு வாய்ப்பா இருக்கு.வானகத்துக்கும் என்னுடைய பண்ணைக்கும் இடையில ஒரு கிலோமீட்டர் தூரம்தான். ஒரு மலைதான் குறுக்க இருக்கு. அய்யாவுடைய ஆசியா என்னன்னு தெரியல இங்க பூமி வாங்கி இந்த அளவுக்குப் பண்ணியிருக்கேன். என்ன ஒரு வருத்தமான செய்தின்னா ஊர் மக்களுக்கு இந்தப் பண்ணையினுடைய மதிப்பு தெரிய மாட்டேங்குது. மழைத்தண்ணியை சேகரிச்சு வைக்குறதால 'வாட்டர் சோர்ஸ்' கிடைக்குது. அது அவங்களுக்கு தெரிய மாட்டேங்குது. கிராமத்துல விழிப்புணர்வே இல்லாம இருக்காங்க. ஒரு நல்ல விஷயத்துல விழிப்புணர்ச்சி இல்லை..நுண்ணுயிர்கள் அதிகமாகும்திருச்சி- திண்டுக்கல் நான்கு வழிச்சாலையிலிருந்து ஒரு கிலோ மீட்டர்லயே இருக்குது பண்ணை. இது ஒரு பெரிய சிறப்பு. முதல்ல ரொம்ப வறட்சியா இருந்த பூமி. இப்போ ரொம்ப நல்லா இருக்கு. 'வாட்டர் சோர்ஸ் சர்ப்ளஸ்' ஆகியிருக்கு. இதுக்கு மழைநீர் சேகரிப்பு ரொம்ப முக்கியம். நிலத்துல பெய்யுற மழைநீர் வெளியேறக் கூடாது. அப்படியிருந்தா மண்வளம் நல்லாயிருக்கும். நுண்ணுயிர்கள் அதிகமாகும். இதுதான் இந்தப் பண்ணையோட வெற்றி சூத்திரம். நாம பெருசா எதும் பண்ண வேண்டியதில்லை. மண்ணுல நுண்ணுயிர் திறன் அதிகமாகும்போது வருஷா வருஷம் காய்ப்புத்திறன் அதிகமாகுறதை கண்கூடா பார்க்க முடியுது. அதைவிட சிறப்பு இங்க நிறைய மூலிகைகள் இருக்கு. பிரண்டை, கற்றாழை இருக்கு. பிரண்டையில மாத்திரைகள் பண்ற அளவுக்கு வாய்ப்புகள் இருக்கு. இளைஞர்கள் இதுமாதிரி புதுசு புதுசா சிந்திச்சு முன்னேறணும். விவசாயத்துல நிறைய யுக்திகள் இருக்கு. ஆனா ஆட்கள் பற்றாக்குறை பெரிய பிரச்சனையா இருக்கு. இப்போ உழைக்குறதுக்கு யாருமே தயாரா இல்லை. நாங்க வடமதுரையில இருந்துதான் ஆட்களைக் கொண்டுவந்து வேலை பார்க்குறோம்.பண்ணை பராமரிப்புக்கு ஆட்கள் அதிகம் தேவையில்ல. ஆனா, அறுவடைக்கு ஆள் வேணும். நெல்லிக்காய் அதிகம் விளையுதுன்னா அதை எடுக்குறதுக்கு ஆட்கள் வேணுமே... அதுக்கு ஆள் இல்லாம ரொம்ப சிரமமா இருக்கு. இருக்குற ஆட்களை வச்சுத்தான் சிரமப்பட்டு எடுக்குறோம். இப்படிப்பட்ட சூழ்நிலையில விவசாயிகள் இனி மர சாகுபடியைத் தான் கையிலெடுக்கணும். மரத்தை வச்சு விட்டா போதும். வேலையாள் தேவையில்ல. வருங்கால சந்ததிகளுக்குப் பயன்படும்.100 குளம் வெட்டுறதுக்கு சமம் ஒரு மரம் வைக்குறதுன்னு மரத்தினுடைய மகத்துவத்தை சங்ககாலத்துலயே சொல்லிருக்காங்க. விவசாயிகள், விவசாய ஆர்வலர்கள் இதுல கவனம் செலுத்தணும். 'ஜூம் மீட்டிங்' மாதிரி போட்டு விழிப்புணர்வு ஏற்படுத்தணும். வானகம் அதைப் பல வருஷமா பண்ணிட்டு இருக்காங்க. அய்யா ஆசியில அது நடந்துட்டு இருக்கு. ரொம்ப சந்தோஷமா இருக்கு" என்றார்.தொடர்புக்கு : ராஜேந்திரன் : 96269 67555.பெட்டிச் செய்திமருத்துவ குணங்கள்நெல்லி அவ்வையார் அதியமானுக்கு கொடுத்த ஒரு அற்புத கனி. 'வைட்டமின் சி' இருக்குற கனி. இதில் மருத்துவ குணங்கள் எக்கச்சக்கமா இருக்கு. ஒரு கிலோ அன்னாச்சிபழம், 2 கிலோ கொய்யா பழம், 18 கிலோ திராட்சை, 52 கிலோ வாழைப்பழம், 102 கிலோ ஆப்பிள், 130 லிட்டர் பசும்பாலுக்கு நிகரான சத்து 100 கிராம் நெல்லியிலயே இருக்கு.முக்கியமா நோய் எதிர்ப்பு சக்தி அதிகம். சளி பிடிக்காது. காய்ச்சல் வராது. இதய பிரச்சனை வராது. 'கேன்சர்' மாதிரியான நோயும் வராது. இதைத் தொடர்ந்து பயன்படுத்துனா மருத்துவமனைக்கே போக வேண்டியதில்ல. எனக்கு 56 வயசாகுது. நான் மருந்து, ஊசி எடுத்துக்கிட்டதே இல்ல. "வீட்டுக்கொரு நெல்லி, ஒரு தக்காளி, கறிவேப்பிலை இருந்தாலே ஹாஸ்பிட்டல் போக வேண்டியது இல்ல"ன்னு அய்யா அடிக்கடி சொல்லுவாரு.