- எம். இராமசாமி ''மலைப்பகுதிகளில் விளையும் காய்கறிகளில் முட்டைகோஸ், காலிஃபிளவர் முக்கிய இடத்தைப் பெறுகிறது. சுவை மற்றும் சத்துகள், குறைவான விலை போன்றவற்றால் மக்கள் அதிக அளவில் பயன்படுத்துகிறார்கள். குறைந்த நாட்களில் அதிக வருவாய் அளிப்பதில் இவையிரண்டும் சிறந்தது''என்கிறார்கள் கொடைக்கானல் விவசாயிகள்..தமிழ்நாடே அக்னி நட்சத்திரத்தினால் தகதகத்துக்கொண்டிருந்த கோடைகாலத்தில், மேற்குத்தொடர்ச்சி மலையில் அமைந்துள்ள மலைகளின் இளவரசியான குளுகுளு கொடைக்கானலுக்குச் சென்றோம். வில்பட்டி பகுதியில் இருந்த விவசாய நிலங்களில் வலம் வந்தோம். ஒரு முட்டைகோஸ் வயலில் இருந்தவரிடம் பேசினோம். தனது பெயர் எட்வர்ட் என அறிமுகப்படுத்திக்கொண்டவர், ஆசிரியப்பணியின் தேர்வு முடிவுக்காகக் காத்திருக்கும் சகோதரி மகளுடன் செடிகளின் பராமரிப்புப் பணி செய்து கொண்டே நம்மிடம் பேசினார். "இது 7 ஏக்கர் நிலம். குத்தகைக்கு எடுத்து விவசாயம் செய்றோம். அதுல கேரட், பீன்ஸ், முட்டைகோஸ், காலிஃபிளவர் சாகுபடி செய்றோம். இப்ப காலிஃபிளவர், முட்டைகோஸ் தலா ஒரு ஏக்கர்ல இருக்குது. ராத்திரி தூங்குற நேரம் மட்டும்தான் வீட்டுல இருப்பேன். காலையில 6 மணிக்கு எந்திரிச்சவுடனே பாத்திரத்துல சாப்பாடு போட்டுக்கிட்டு தோட்டத்துக்கு வந்துடுவேன். வெளிச்சம் குறையுற வரைக்கும் செடிகளுக்குத் தண்ணி பாய்ச்சுறது, உரம் வைக்குறது, மருந்தடிக்கிறதுன்னு ஏதாவது ஒரு வேலை பார்ப்பேன்'' என்றவர் தொடர்ந்து முட்டைகோஸ், காலிஃப்ளவர் சாகுபடி குறித்துப் பேசினார்..சீசன் என்று எதுவும் இல்லை "முட்டைகோஸ், காலிஃபிளவர் விளைய வைக்க 'சீசன்'னு எதுவுமே கிடையாது. எப்ப நல்ல விலை கிடைக்குமோ அதுக்கேத்தமாதிரி பயிரிடலாம். ஏற்கனவே விவசாயம் நடந்த நிலமா இருந்தா ஒரு தடவையும், தரிசா கெடந்த நிலமா இருந்தா ரெண்டு தடவையும் உழுகணும். அதுக்கு முன்னாடி பயிர் செய்யக்கூடிய பகுதி முழுக்க சாணியை விரவி விட்டு அதுக்குப் பிறகு தான் உழுகணும். நிலம் தயாராகும்போது, நடுறதுக்கு நாற்று தயாரா இருக்கணும். அதுனால இந்தச் சாகுபடியைத் தான் செய்யப் போறோம்னு முடிவு பண்ணிட்டா நிலம் தயார் செய்றதுக்கு முன்னாடி நாற்றாங்கால் போட்டுடணும். ஒரு ஏக்கருக்குத் தேவையான நாற்று உற்பத்தி செய்ய கால் கிலோ விதை தேவைப்படும். நாற்றாங்கால்ல விதைச்ச 15 நாள்ல செடி முளைக்க ஆரம்பிக்கும். அதுக்குப் பிறகு 15 நாள் கழிச்சு, நாற்றுக்களை எடுத்து நிலத்துல நடலாம். ஒன்றரை அடி இடைவெளியில அரை அடி ஆழத்துல நாற்றுகளை நடணும். நட்டவுடன் உயிர்நீர் விடணும். பிறகு தேவைக்கேத்த மாதிரி தண்ணி பாய்ச்சிட்டு வரணும். 10 நாள்ல செடிக முளைச்சு வெளியே வரும். அப்ப, உரம் கொடுக்கணும். அதுல இருந்து 10 நாள் கழிச்சு முதல் களை எடுத்து, கலப்பு உரம் தூவி, மருந்தடிச்சு மண் அணைக்கணும்..தேவைக்கு ஏற்ற பாசனம் 45-ம் நாள் முதல் பூக்கள் பெருக்கும். 15 நாளைக்கு ஒரு தடவை தொடர்ந்து மருந்தடிக்கணும். 60-ம் நாள் ரெண்டாவது களை எடுத்து, முதல்ல கொடுத்த கலப்பு உரம் வெச்சு, மருந்தடிக்கணும். வெயில் காலத்துல ரெண்டு நாளைக்கு ஒரு தண்ணி கொடுக்கணும். மழை காலத்துல தேவைக்கு ஏத்தமாதிரி கொடுத்தா போதும். 80-ம் நாள்ல அறுவடைக்குத் தயாராகிடும். செடி வளர்ச்சி, பூச்சித்தாக்குதலுக்கு ஏற்கனவே நாம மருந்து கொடுத்துட்டதால எந்தவிதமான பாதிப்பும் ஏற்படாது. 80 முதல் 90 நாள்ல அறுவடை செய்யலாம்'' என்றவர் வரவு,செலவு பற்றிப் பேசினார். செலவு 40,000 ரூபாய் "ஒரு ஏக்கர்ல 1,000 மூட்டை அறுவடை செய்யலாம். ஒரு மூட்டை 40 முதல் 50 கிலோ எடை இருக்கும். எடை கணக்குல பார்த்தா ஒரு ஏக்கர்ல காலிஃப்ளவர், முட்டைகோஸ் ரெண்டும் கிட்டத்தட்ட ஒரு அளவுல தான் மகசூல் கொடுக்கும். சுமார் 3,000 கிலோ முதல் 3,500 கிலோ வரைக்கும் மகசூல் கொடுக்கும். அதை விற்பனை செஞ்சா சராசரியா 1,00,000 ரூபாய் கிடைக்கும். அதுல செலவு 40,000 ரூபாய் போயிடும். அது போக 90 நாள்ல 60,000 ரூபாய் லாபமா கிடைக்கும்'' என்றவர் நிறைவாக, ''மக்கள் விரும்புற காய்கறிகளான காலிஃபிளவர், முட்டைகோஸ் சாகுபடி செஞ்சா ஓரளவு நல்ல வருமானம் கிடைக்கும். மலைப்பகுதியில் விளையுற காய்கறிகளுக்கு நாடெங்கும் நல்ல வரவேற்பு இருக்கு. அதுனால மலை விவசாயிகளுக்கு இந்தப் பயிர்கள் ரொம்பவும் உதவியா இருக்குது'' என்றார் எட்வர்ட்..தொடர்புக்கு: எட்வர்ட் : செல்போன் : 98426 47545 பெட்டிச் செய்தி முட்டைகோஸ், காலிஃப்ளவர் ஒரு ஏக்கரில் சாகுபடி செய்வதற்கான செலவு விபரம் (ரூபாயில்) உழவு (2 நாட்கள்) 3,000விதை (250 கிராம்) 2,000களை 5,000மருந்து மற்றும் உரம் 10,000அறுவடை மற்றும் சுத்தம் செய்ய 20,000 மொத்தம் 4௦,000.பெட்டிச் செய்தி காலிஃபிளவரில் உள்ள சத்துகள் வைட்டமின் பி1, வைட்டமின் பி2, வைட்டமின் பி6, வைட்டமின் கே, பையோடின், நார்ச்சத்து, பொட்டாசியம் மற்றும் தையமின் போன்ற சத்துக்கள் நிறைந்துள்ளன. உணவுப்பொருட்கள், பழரசத்துடன் பல்வேறு அழகு சாதனப்பொருட்களுக்கு மூலப்பொருளாகப் பயன்படும்..முட்டைகோஸிலுள்ள சத்துகள் இலைக்காய்கறிகளில் ஆரோக்கியம் தரும் முட்டைகோஸ் வெள்ளை, சிவப்பு, பச்சை மற்றும் ஊதா நிறங்களில் உள்ளது. இதில் பைட்டோ நியூட்ரியண்டுகள், நார்ச்சத்து மற்றும் வைட்டமின்களான 'ஏ', 'சி' மற்றும் 'கே' சத்துகள் உள்ளன. செரிமான பிரச்சனை மற்றும் மலச்சிக்கல் பிரச்சனைகளைச் சரிசெய்கிறது. புற்றுநோயை எதிர்த்துப் போராடும் பொருட்களை அதிகளவு கொண்டுள்ளதால் புற்றுநோயை ஏற்படுத்தும் செல்கள் வளர்வதை முற்றிலும் தடுக்கும். குளுட்டமைல் அல்சரை குணப்படுத்தும். பீட்டாகரோட்டீன் கண்புரையைத் தடுக்கிறது. கொழுப்பு கரைக்கும். இதயம் பாதுகாக்கும். பெண்களுக்கு 'மெனோபாஸ்' காலங்களில் உண்டாகும் கால்சியம், பாஸ்பரஸ் இழப்பை ஈடுசெய்யும். நரம்புகளுக்கு வலு கொடுக்கும். நரம்புத் தளர்ச்சியைப் போக்கும். தொற்று நோய்கள் ஏற்படாமல் தடுக்கும். உடலுக்கு நோய் எதிர்ப்புச்சக்தியை அதிகரிக்கும். இதிலுள்ள சுண்ணாம்புச்சத்து எலும்புகள், பற்களை வலுவாகும்.