- அன்புவேலாயுதம் விழுந்து, விழுந்து விவசாயம் செய்தாலும் மகசூல் வரவில்லை என்று வருந்தும் நேரத்தில், உளுந்து பயிரிட்டு அதிக மகசூல் எடுத்துள்ளார் பெண் விவசாயி வெண்ணிலா ராமமூர்த்தி. அந்த ரகசியத்தைத் தெரிந்து கொள்வதற்காக அவரைச் சந்திக்கச் சென்றோம். .திருவண்ணாமலை மாவட்டம், வந்தவாசி அருகில் இருக்கிறது பிருதூர். இங்கு உளுந்து மற்றும் வேர்க்கடலை சாகுபடியில் தொடர்ந்து அசத்தி வருகின்றனர் வெண்ணிலா ராமமூர்த்தி தம்பதி. நம்மை வரவேற்ற ராமமூர்த்தி இன்முகத்தோடு பேசத் தொடங்கினார். ''எங்களுக்கு 3 ஏக்கர் 77 சென்ட் நிலம் இருக்குது. அதுல 2 ஏக்கர்ல வம்பன்-8 உளுந்து, மீதி நிலத்துல ஜீ-7 வேர்க்கடலையையும் வருஷம் ரெண்டு போகம் பயிர் செய்யுறோம். ஒரு போகம் இறவை, அடுத்த போகம் மானாவாரி. ஒரு வருஷம் இயற்கை உரம் வெப்போம். அடுத்து இரண்டு வருஷம் எதுவும் வைக்கமாட்டோம். ஆழமா புழுதி ஓட்டுனா போதும். உளுந்து மட்டுமல்ல வேர்க்கடலை உற்பத்தியிலயும் தொடர்ந்து சாதனை செய்துட்டு வர்றோம்.உழவுக்கு ஒரு டிராக்டர், புழுதி எடுக்க ஒரு டிராக்டர்னு ரெண்டு டிராக்டர் சொந்தமாக வெச்சிருக்கோம். நானே டிராக்டர் ஓட்டிக்குவேன். நான் அதிகம் படிக்கலைங்க. ஒன்பதாங்கிளாஸ் தான் படிச்சேன். என் மனைவி வெண்ணிலா பத்தாங்கிளாஸ் படிச்சிருக்கு. அதுதான் எனக்குக் குமுதம் மண்வாசனை புத்தகத்தைப் படிச்சு மத்தவங்க எப்படி விவசாயம் செய்றாங்கன்னு சொல்லும். இப்போ அந்தப் புத்தகத்துல எங்களைப் பத்தி எழுதப்போறதா சொல்றீங்க. எனக்கு ரொம்ப பெருமையா இருக்கு..எனக்கு நிதீஸ்வரன், ஹேமேஷ்வரன்னு ரெண்டு பிள்ளைங்க. அவங்களை விவசாயத்துல பெரிய படிப்பு படிக்க வச்சி விவசாயம்தான் செய்ய வைப்பேன். எதிர்காலத்துல, நான் ஒரு விவசாயின்னு சொல்றவங்களுக்குத்தான் பெரிய மரியாதை கிடைக்கும். அதுவும் இயற்கை விவசாயம்னா ராஜ மரியாதை கிடைக்கும்'' என்ற ராமமூர்த்தியை இடைமறித்துப் பேசிய வெண்ணிலா உளுந்து சாகுபடி தொடர்பான பல்வேறு தகவல்களைப் பகிர்ந்து கொண்டார். .விதை தேர்வு''பயிர் அருமையாக வளர்ந்து மகசூல் கொடுக்குறதுக்கு விதைத்தேர்வு ரொம்ப முக்கியம். விளையும் பயிர் முளையிலேயே தெரியும்னு சொல்ற மாதிரி விளையப் போற விதையோட தரம் முளைக்குறதுக்கு முன்னாடியே தெரியும். அதனால தரமான விதையைத் தேர்ந்தெடுக்குறதுல கவனமா இருந்தேன். நல்லா விசாரிச்சு உயர் விளைச்சல் ரகமான VBN 8 ரக உளுந்து ரகத்தை விதைச்சேன். இதுக்கு வயசு 65 முதல் 70 நாள். மானாவாரி நிலத்துல ஒரு ஹெக்டருக்கு 850 கிலோ. இதன் சராசரி மகசூல் 900 கிலோ. பாசன வசதியுள்ள நிலங்கள்ல ஹெக்டருக்கு 988 கிலோ வரை மகசூல் கொடுக்கும். அதனால தான் இந்த ரகத்தைத் தேர்வு பண்ணி விதைச்சேன்'' என்றவர் உளுந்து சாகுபடி நுட்பங்களைச் சொல்லத் தொடங்கினார். அது இங்கே பாடமாக....வயல் தயாரிப்புஉளுந்து பயிர் சாகுபடிக்கு நிலம் தயார் செய்யும்போது ஒரு ஏக்கருக்கு 5 டன் தொழுவுரம் போட்டு உழவு செய்ய வேண்டும். விதைப்பதற்கு முன்பாக விதை நேர்த்தி செய்வது அவசியம். உளுந்து விதைகள் மண்ணில் உள்ள அசாதாரண சூழ்நிலையில் (மண் மூலம் பரவும் நோய்), நன்றாக வளர்வதற்கு உயிர் உரங்கள் மற்றும் உயிர் பூஞ்சாணக்கொல்லி மூலமாக விதை நேர்த்தி செய்ய வேண்டும்..விதை நேர்த்திஉளுந்து விதைகளை விதைப்பதற்கு முன்பு ஒரு கிலோ விதைக்கு 4 கிராம் டிரைகோடெர்மா விரிடி என்ற அளவில் கலந்துகொள்ள வேண்டும். உயிர் உரங்களுடன் விதை நேர்த்தி செய்து விதைக்கலாம். 'டிரைகோடெர்மா விரிடி', உயிர் பூஞ்சாணக்கொல்லி பயன்படுத்துவதால் விதைகள் முளைக்கும்பொழுது, விதைமூலம் பரவும் நோயிலிருந்தும், வேர் அழுகல் நோயிலிருந்தும் பாதுகாக்கப்படும்.மேலும் 'டிரைகோடெர்மா' விதை நேர்த்தி செய்த உளுந்து பயிரின் வேர் வளர்ச்சி மட்டுமல்ல, செடியின் வளர்ச்சியும் நன்றாக இருக்கும். 'டிரைகோடெர்மா விரிடி' உடன் விதை நேர்த்தி செய்தபிறகு, உயிர் உரங்களுடன் விதை நேர்த்தி செய்யலாம். இதனால் எந்தவித பக்க விளைவுகளும் ஏற்படாது. உளுந்து விதைகளை உயிர் உரங்களான ரைசோபியம் 600 கிராம்/ஹெக்டர் மற்றும் பாஸ்போ பாக்டீரியா 600 கிராம்/ஹெக்டர் என்ற அளவில் அரிசி கஞ்சியுடன் கலந்து விதை நேர்த்தி செய்து நிழலில் உலர்த்தி, பிறகு விதைக்கலாம். உளுந்து விதைகளை ரைசோபியம்(பயறு) உயிர் உரங்களுடன் விதை நேர்த்தி செய்வது மிக முக்கியம். அது பயிரின் வேரில் அதிக வேர்முடிச்சுகளை உருவாக்கும். அந்த வேர் முடிச்சுகள் வளிமண்டலத்தில் உள்ள நைட்ரஜனை (தழைச்சத்து) இழுத்து மண்ணில் நிலை நிறுத்தி பயிரின் வளர்ச்சிக்குப் பெரிதும் உதவும். பாஸ்போ பாக்டீரியாவுடன் விதை நேர்த்தி செய்யும்போது பயிருக்கு மண்ணில் கிடைக்காத, கரையாத நிலையில் உள்ள பாஸ்பரஸ் சத்தைப் பயிருக்குக் கரையும் நிலையில் மாற்றித் தரும். இதனால் பயிரின் வளர்ச்சி தூண்டப்பட்டு அதிக மகசூல் கிடைக்கும்..நீர் மேலாண்மைஉளுந்து பயிருக்கு விதைத்தவுடனே நீர் பாய்ச்ச வேண்டும். பிறகு 7 முதல் 10 நாட்கள் இடைவெளியில் பாசனம் செய்யலாம். பூக்கும் பருவத்தில், காய் பிடிக்கும் பருவத்தில் பாசனம் செய்வது அவசியம். அதே நேரத்தில் அந்தத் தருணங்களில் வயலில் நீர் தேங்காமல் பார்த்துக்கொள்ள வேண்டும்..உரமிடுதல்உளுந்து பயிருக்கு அடி உரமாக டி.ஏ.பி.50 கிலோ/ஏக்கர் என்ற அளவில் உழவின் போதும், காம்ப்ளக்ஸ் உரம் 25 கிலோ/ஏக்கர் மற்றும் சூப்பர் பாஸ்பேட் 5 கிலோ/ஏக்கர் என்ற அளவில் விதைத்த 15 நாட்கள் கழித்து நேரடியாக இட வேண்டும். மேலும் பயிருக்குத் தேவையான நுண்ணூட்டச் சத்தினை பூர்த்தி செய்வதற்காக நுண்ணூட்டச் சத்து பயறு-ஐ 2 கிலோ/ஏக்கர் என்ற அளவில் விதைத்த 15 நாட்கள் கழித்து நேரடியாக வயலில் இட வேண்டும். விதைத்த 25 மற்றும் 35-ம் நாள் 2% டி.ஏ.பி இலை வழியாகத் தெளிக்க வேண்டும். இதனால் பூக்கள் உதிர்வது தடுக்கப்படுவதுடன் அதிக அளவு மகசூல் நிச்சயம் கிடைக்கும்..களைஉளுந்து பயிரில் களைகளைக் கட்டுப்படுத்துவதற்காக உளுந்து பயிர் விதைத்தவுடன், விதைகள் முளைப்பதற்கு முன்பாகவே களைக்கொல்லியை 300 மில்லி/ஏக்கர் என்ற அளவில் கலந்து தெளிக்க வேண்டும். விதைகள் முளைக்கும்பொழுது வயலில் களைகள் இல்லாமல் இருந்தாலே நமக்கு அதிமான மகசூல் கிடைக்கும். களைகள் இல்லாத நிலத்தில் பயிருக்கு இடும் அடி உரம் மற்றும் மேல் உரம் ஆகியவை பயிருக்கு முழுமையாகக் கிடைத்து மகசூலைத் தரும்.ஒருவேளை களைக்கொல்லி தெளிக்காத பட்சத்தில் உளுந்து பயிர் விதைத்த 15 மற்றும் 30-ம் நாள் என இரண்டு களைகளை எடுக்க வேண்டும். அதாவது உளுந்து பயிரின் வயது 70 நாட்கள் என்று வைத்துக்கொண்டால், விதைத்த நாளிலிருந்து 30 முதல் 35 நாட்கள் வயலில் களைகள் இல்லாமல் பார்த்துக் கொண்டால் அதிக மகசூல் கிடைக்கும். பொதுவாக ஒரு பயிரின் வாழ்நாளில் மூன்றில் ஒரு பங்கு நாட்கள் மட்டும் களைகள் இல்லாமல் பார்த்துக் கொண்டாலே பயிரின் மகசூல் பாதிக்காது. எனவே களை நிர்வாகத்தில் இந்த உத்தியைக் கையாண்டாலே அதிக மகசூலை அள்ளலாம்'' என்றவர் நிறைவாக,''அறுவடையை கையால செய்தது மட்டுமல்ல அதுல சாதனையும் செய்திருக்கிறோம். திருவண்ணாமலை மாவட்டத்துல அதிக மகசூல் எடுத்து சாதனை செய்திருக்கிறோம். மாநில அளவுல அதிக மகசூல் தெரியறது வரைக்கும் எவ்வளவு மகசூல் கிடைச்சதுனு வெளியே சொல்லக் கூடாது. அதுனால அது சஸ்பென்ஸ். இதற்குத் திருவண்ணாமலை வேளாண்மை இணை இயக்குநர் ஹரகுமார், அதிகாரிகள் மூலமா சொன்ன ஆலோசனைகள் தான் உதவியா இருந்துச்சு'' என்ற வெண்ணிலாவைத் தொடர்ந்து நிறைவாகப் பேசிய ராமமூர்த்தி,''எனக்கு எல்லா செலவும் போக ஒரு போகத்துக்கு குறைந்தது 4 லட்சம் ரூபாய் வரும். ரெண்டு போகத்துக்கு 8 லட்சம் ரூபாய் வரும். விவசாயத்துல நஷ்டம்னு சொல்வாங்க. இந்தத் தடவை உளுந்து பற்றி சொல்லியிருக்கோம். அடுத்த முறை வேர்க்கடலையில அதிக லாபம் சம்பாதிக்குற விவசாய முறையைச் சொல்றேன். எங்களுடைய இந்த வளர்ச்சிக்கு வேளாண்மை அதிகாரிகள் ஒத்துழைப்பு, ஆலோசனை தான் காரணம்'' என்றபடி விடைகொடுத்தார்.தொடர்புக்கு : வெண்ணிலா ராமமூர்த்தி : செல்போன் : 94449 42382.பெட்டிச் செய்திமாவட்டத்தில் அதிக மகசூல்வெண்ணிலா ராமமூர்த்தியின் உளுந்து மகசூல் தொடர்பாக மாவட்ட வேளாண்மை இணை இயக்குநர் ஹரகுமாரிடம் பேசினோம். ''வெண்ணிலா மிகச்சிறந்த விவசாயி. வேளாண்மைத்துறை மூலமாகச் சொல்லும் ஆலோசனைகளை அப்படியே கடைபிடிப்பார். இந்த முறை ஒரு ஏக்கருக்கு 1,000 கிலோவுக்கு மேலே மகசூல் எடுத்திருக்காங்க. திருவண்ணாமலை மாவட்டத்தைப் பொறுத்த வரை இவங்க எடுத்த மகசூல் அதிகமான மகசூல்'' என்றார்..பெட்டிச் செய்திபூச்சி நோய் மேலாண்மைபயிரின் வளர்ச்சி பருவத்தில் சாறு உறிஞ்சும் பூச்சிகள், பூக்கும் மற்றும் காய் பிடிக்கும் பருவத்தில் காய்த்துளைப்பான்களும் அதிக அளவு காணப்படும். வயலில் பூச்சி மருந்து பயன்படுத்துவதற்கு முன்பு, பூச்சித் தாக்குதல் பொருளாதார சேத நிலைக்குக் குறைவாக உள்ளது... அதாவது காய் துளைப்பான் தாக்குதல் 10 சதவிகிதத்திற்கு குறைவாக இருந்தால் ரசாயன பூச்சி கொல்லிக்குப் பதிலாக வேப்பெண்ணெய் 2 சதவிகிதம் பயன்படுத்தலாம். பூச்சியின் தாக்குதல் பொருளாதார சேத நிலை 10 சதவிகிதத்திற்கு மேல் சென்றால் 'இமாமெக்டின் பென்சோயேட்' (Emamectin benzoate) 5 %, SG 220 கிராம்/எக்டர் என்ற அளவில் கலந்து தெளிப்பதால் காய் துளைப்பான் கட்டுப்படுத்தப்பட்டு மகசூல் அதிகமாகக் கிடைக்கும். மேலும் பயிரின் இளம் பருவத்தில் தாக்கும் சாறு உறிஞ்சும் பூச்சிகளைக் கட்டுப்படுத்த இமிடாகுளோபிரிட் (Imidacloprid) என்ற மருந்தை 100-125 மில்லி/எக்டர் என்ற அளவில் கலந்து தெளிக்கலாம். மேலும் வயலில் காய் துளைப்பான் புழுக்களைக் கட்டுப்படுத்த இயற்கையான முறையில் பறவைகள் அமரும் குச்சிகளை 50 எண்கள்/எக்டர் என்ற அளவில், இனக்கவர்ச்சி பொறி 12 எண்கள்/எக்டர் என்ற அளவில், சாறு உறிஞ்சும் பூச்சிகளான வெள்ளை ஈ-ஐ கட்டுப்படுத்த மஞ்சள் வண்ண ஒட்டுப் பொறி எக்டருக்கு 10 எண்கள் என்ற அளவில் அமைத்து பூச்சிகளின் தாக்குதலைப் பொருளாதார சேத நிலைக்குச் செல்லாமல் தடுக்கலாம். இதனால், வயலில் நன்மை செய்யும் பூச்சிகள் பெருக்கமடைந்து காய் புழுக்களின் முட்டைகள், சாறு உறிஞ்சும் பூச்சிகளை அழிக்கும். இதனால் ரசாயன பூச்சிக்கொல்லிகளைப் பயன்படுத்தாமலேயே அதிக மகசூல் கிடைக்க வழிவகை செய்கின்றன..பெட்டிச் செய்திநோய் மேலாண்மைஉளுந்து பயிரில் இலைப்புள்ளி நோய், துரு நோய், வேர் அழுகல் நோய், மஞ்சள் தேமல்நோய் ஆகியவை தோன்றும். உளுந்து பயிரில் தோன்றும் இலைப்புள்ளி நோய் மற்றும் துரு நோயைக் கட்டுப்படுத்த 'மேன்கோசெப்' (Mancozeb) என்ற மருந்தை 2 கிராம் / ஒரு லிட்டர் என்ற அளவில் கலந்து தெளிக்கலாம். உளுந்து பயிரில் தோன்றும் வேர் அழுகல் நோயைக் கட்டுப்படுத்த அடியுரமாக வேப்பம் புண்ணாக்கு 150 கிலோ/ எக்டர் என்ற அளவில் உழவின்போது இடலாம். உளுந்து பயிரில் வேர் அழுகல் நோயைக் கட்டுப்படுத்த 'கார்பன்டசிம்' (Carbandazim) என்ற மருந்தை ஒரு கிராம்/ ஒரு லிட்டர் தண்ணீரில் கலந்து செடியின் வேர் பாகத்தில் ஊற்றலாம். உளுந்து பயிரில் தோன்றும் வெண் சாம்பல் நோயைக் கட்டுப்படுத்த 'புரோபிகானேசோலே' (Propiconazole) 500 மில்லி/ எக்டர் என்ற அளவில் நோய் தோன்றும் போதும், மீண்டும் 10 நாட்கள் கழித்துத் தெளிப்பதன் மூலம் நோய் பரவலைக் கட்டுப்படுத்தலாம். பிறகு 65 நாட்கள் கழித்து அறுவடை தான்.