- எம். இராமசாமி.ஒரு காய் என்றால் இப்படித்தான் இருக்க வேண்டும் என்ற எந்த விதிகளுக்கும் உட்படாத வித்தியாசமான ஒரு காய் அதலைக்காய். மானாவாரி நிலங்களில் தானாக வளரும் தன்மையுடையது. பாகல் குடும்பத்தைச் சேர்ந்த பயிர் என்றாலும் இதற்குப் பந்தல் தேவையில்லை. அதிக மழை காலத்தில் பெரும்பாலான காய்கறிகள் அழுகிப்போகும். ஆனால், மழைக்காலத்தில் தான் அதலைக்காய் சிறப்பாக வளரும். இன்றைக்கு பெரும்பாலானவர்களைப் பாதிக்கும் சர்க்கரை நோய்க்கும், மஞ்சள் காமாலைக்கும் மிகச் சிறந்த மருந்து அதலைக்காய். கொடுமையான காலங்களில் கொடி காய்ந்து விட்டாலும், மண்ணுக்குள் இருக்கும் கிழங்கு உயிருடன் இருக்கும். பல ஆண்டுகள் கழித்து மழை கிடைத்தாலும் முளைத்து விடும் அற்புத தாவரம் அதலைக்காய்..தென் மாவட்டங்களில், குறிப்பாகக் கரிசல் பூமியான விருதுநகர் பகுதியில் வேலியோரங்களில் விளையும் அதலைக்காயை தற்போது தனிப்பயிராக சில விவசாயிகள் சாகுபடி செய்து வருகிறார்கள். அந்த வகையில், விருதுநகர் மாவட்டம், காரியாபட்டி தாலுகா, பாம்பாட்டி கிராமத்தைச் சேர்ந்த சரவணக்குமார், தனது மானாவாரி நிலத்தில் ஒரு ஏக்கரில் அதலைக்காய் சாகுபடி செய்து வருகிறார்.அவரை சந்திப்பதற்காக ஒரு காலை நேரத்தில் அவரது வயலுக்குச் சென்றோம். மற்ற நிலங்கள் அறுவடை முடிந்து ஆடிப்பட்டத்திற்காகக் காத்திருந்தன. ஒரு பகுதியில் அதலைக்காய் ஜோராகக் காய்த்துக் கிடந்தது. அதலைக்காயைப் பறித்துக்கொண்டிருந்த சரவணக்குமார், உடல் முழுவதும் உழைத்து வியர்வையால் நனைந்திருந்த உடைகளோடு நம்மை வரவேற்றார்..அதலைக்காய் சாகுபடி"நான் டிப்ளமோ மெக்கானிக்கல் படிச்சிருக்கேன். ஒரு தனியார் கம்பெனியில 8 வருஷம் வேலை பார்த்தேன். ஒரு கட்டத்துல வேலையில திருப்தியில்ல. பேசாம நம்ம குடும்ப தொழிலான விவசாயத்தையே பார்க்கலாம்னு முடிவு பண்ணி வேலையை விட்டுட்டேன். எங்களுக்கு 12 ஏக்கர் நிலம் இருக்குது. மானாவாரி நிலம். ஆடிப்பட்டத்துல மக்காச்சோளம், சோளம், கம்பு, குதிரைவாலி, சாமை, இருங்குச்சோளம் மாதிரியான பயிர்களை விதைப்போம். அந்த 'சீசன்' முடிஞ்சதும், அடுத்த ஆடி வரைக்கும் நிலம் சும்மா தான் இருக்கும். இந்த இடைப்பட்ட காலத்துல ஏதாவது விவசாயம் செய்யலாம்னு யோசிச்சேன். அதோட விளைவுதான் அதலைக்காய் சாகுபடி. இது வருஷம் முழுக்க வருமானம் கொடுக்கும். அதனால ஒரு ஏக்கர்ல இதைச் சாகுபடி பண்ணி, இப்ப அறுவடை பண்ணிட்டு இருக்கேன்" என்றவர் அதலைக்காய் பற்றிய தகவல்களைப் பகிர்ந்துகொண்டார்."வேலியோரங்கள்ல, நாம விளைவிக்குற பயிர்கள்ல ஊடுபயிரா தானா முளைச்சு வரும் அதலைக்காய். முதல்ல இதை ஒரு சிலர் மட்டும் பறிச்சுட்டுப் போய் சமைப்பாங்க. இப்ப கொஞ்ச நாளா இதை ரொம்ப பேர் சமைக்க ஆரம்பிச்சுட்டாங்க. இப்ப வருஷம் முழுக்க அதலைக்காய்க்கு சந்தையில வரவேற்பு இருக்கு. மானாவாரி பயிர்களோட விளைச்சல் முடிஞ்சு அறுவடையானதும் அதலைக்காய் விதைக்கிழங்குகளை நடவு பண்ணுனேன். கிழங்கு நட்ட நிலத்துல மழை பெஞ்சாலோ, தண்ணி பாய்ச்சினாலோ உடனே செடி முளைக்க ஆரம்பிச்சிடும்" என்றவர் அதலைக்காய் சாகுபடி தொழில்நுட்பங்களைப் பகிர்ந்துகொண்டார். அவை இங்கே பாடமாக....இப்படித்தான் செய்யணும் சாகுபடி"கரிசல் மண் பூமியில் நன்றாக விளையும். இதனைச் சாகுபடி செய்யும்போது, முதல் முறை மட்டும் ஆடிப்பட்டத்தில் விதைக்க வேண்டும். அதற்கு முன்பாக நிலத்தயாரிப்புப் பணிகளை மேற்கொள்ள வேண்டும். ஒரு மாதம் முன்பாக அதாவது ஆனி மாதம் சட்டிக்கலப்பை கொண்டு ஒருமுறை உழுது 20 நாட்கள் ஆற விட வேண்டும். பிறகு, மட்கிய எரு போட்டு மீண்டும் ஒரு உழவு செய்தால் போதுமானது. ஆடியில் மழை பெய்தவுடன் 5 அடி இடைவெளியில் 3 இன்ச் ஆழத்தில் விதைக்கிழங்குகளை வைத்து, மேல் மண் போட்டு மூடிவிட வேண்டும். முழுக்கிழங்குகளைத்தான் விளைவிக்க வேண்டும் என்பதில்லை. வெட்டி வைத்தால் கூட போதுமானது. ஆனால் வெட்டிய கிழங்குகளை அரை மணிநேரம் நிழலில் உலர வைத்த பிறகே விதைக்க வேண்டும்.ஒரு சென்ட் நிலத்தில் விளைவிக்க ஏறத்தாழ 100 கிழங்குகள் வீதம் ஒரு ஏக்கருக்கு 10,000 கிழங்குகள்வரை தேவைப்படும். எடையாகக் கணக்கிட்டால் ஒரு ஏக்கர் பரப்பில் விதைக்க 25 கிலோ வரை தேவைப்படும். விதைத்தபிறகு அடுத்த மழை பெய்தவுடன், முளைத்து வளரத் துவங்கும். அதிலிருந்து 25 நாள்களில் வெளிர் மஞ்சள் நிறத்தில் பூக்கள் பூக்கும். 35-ம் நாளுக்கு மேல் காய்கள் கிடைக்கத் துவங்கும். மார்கழி வரை காய்கள் காய்க்கும். ஆவணி மாதம் முதல் மார்கழி வரைக்குமான பருவத்தில் காய்கள் வரத்து நன்றாக இருக்கும். அது சீசன் காலம் என்பதால் முழுமையாகக் காய்கள் பறிக்கலாம். நீர் பாய்ச்சுதல், புழு, பூச்சித்தாக்குதலுக்கு மருந்து, உரம் அளிப்பது உள்ளிட்ட எந்த விதமான பராமரிப்போ, செலவோ கிடையாது. பறிப்பதற்குக் கூட பெரிய அளவில் மெனக்கெடத் தேவையில்லை. இருவர் இருந்தால் போதும் சுலபமாக அறுவடை செய்து விடலாம்'' என்றவர் வருமானம் பற்றிப் பேசினார்..ஒரு நாள் விட்டு ஒரு நாள் 15 கிலோ"காய்வரத்து முடிஞ்ச பிறகு, செடி அப்படியே சுருங்கி காய்ஞ்சிடும். ஆனா, கிழங்கு மட்டும் மண்ணுக்குள்ள அப்படியே இருக்கும். திரும்ப ஒரு மழை பெஞ்சா உடனே முளைப்பு எடுத்துடும். அதலைக்காயோட சிறப்பு என்னான்னா, மழை பெய்யாத காலங்கள்ல நமக்குக் காய்கள் வேணும்னா கொஞ்சம் தண்ணி பாய்ச்சுனா போதும். 35 நாள்ல மறுபடியும் காய் பறிக்கலாம். மண்ணுக்குள்ளே நாம் பதிச்ச விதைக்கிழங்கு எப்பவும் பத்திரமாகவே இருக்கும். தண்ணி கிடைக்கிறதைப் பொறுத்து தேவையான அளவு பாய்ச்சி வருஷம் முழுக்க நிரந்தர வருமானம் பெறலாம். நான் கிணறு வெட்டியிருக்கிறேன். அதுல எப்பவும் தண்ணி இருக்கும். அதனால 25 சென்ட் நிலத்துல இப்பவும் அதலைக்காய் விளைச்சல்ல இருக்குது. ஒரு நாள் விட்டு ஒரு நாள் 15 கிலோ வரைக்கும் மகசூல் கெடைக்கும். ஆடிப்பட்டம் வரைக்கும் அதுதான் வருமானம். கிலோ 50 ரூபாய் விலையில விற்பனை செய்றேன். அதுமூலமா மாசம் சராசரியா 10,000 ரூபாய் வருமானம் கிடைக்குது'' என்றவர் நிறைவாக,.விதைக்கிழங்கு கிலோ 10 ரூபாய்"என்னோட அனுபவத்துல நான் கத்துக்கிட்ட விவசாய அனுபவத்தை மற்றவங்களுக்கு சொல்லித் தர்றேன். நண்பர்களோட சேர்ந்து இயற்கை முறை தோட்டங்கள், மாடித்தோட்டங்கள், வீடுகளில் தோட்டங்களை அமைச்சுக் கொடுக்குறேன். விதைகள் தேவைப்படுறவங்களுக்கு நாட்டு விதைகளை இலவசமா கொடுத்துட்டு இருக்கேன். நான் கொடுக்குற விதை மாதிரி, ரெண்டு மடங்கு விதையை எனக்குத் திருப்பிக் கொடுக்கணும். அதுதான் நான் போடுற ஒரே 'கண்டிஷன்'. அதலைக்காய் சாப்பிறவங்க எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகமாகுது. அதனால அதை விளைவிக்குற விவசாயிகள் எண்ணிக்கையும் அதிகமாகிட்டு வருது. இது மகிழ்ச்சியைக் கொடுக்குது. விதைக்கிழங்கு தேவைப்படுறவங்களுக்கு நானே விதைக்கிழங்கு கொடுக்குறேன். கிழங்கோட அளவைப் பொறுத்து ஒரு கிழங்கு 10 ரூபாய் வரைக்கும் கொடுத்துட்டு இருக்கேன். தேவைபடுறவங்க வாங்கிக்கலாம்" என்றபடி விடைகொடுத்தார்.தொடர்புக்கு : சரவணக்குமார் : 99949 64714.பெட்டிச் செய்திகவனிக்க வேண்டியவைகாய்களை அறுவடை செய்யும்போது, படத்தில் உள்ளபடி கொடியைத் தூக்கிப்பிடித்து அறுந்துவிடாமல் கவனமாகப் பறிக்க வேண்டும். பறித்தவுடனே சந்தைக்கு அனுப்பிவிட வேண்டும். காய்கள் வெடித்தால் சுவை, சத்துகள் இருக்காது. விலையும் கிடைக்காது. பறித்த காய்களை உள்ளூர் மற்றும் சந்தையிலேயே எளிதாக விற்பனை செய்துவிடலாம். இக்காய்களை இருப்பு வைக்காமல் உடனடியாகப் பயன்படுத்திவிட வேண்டும்..பெட்டிச் செய்திஅதலைக்காயின் சிறப்புதற்போது பிறக்கும் குழந்தைக்கே சர்க்கரை நோய், மாரடைப்பு போன்ற நோய்கள் பாதிக்கின்றன. ஆனால், நமது முன்னோர்கள் ஆயுட்காலம் முழுவதும் ஆரோக்கியமாக வாழ்ந்தார்கள். அதற்குக் காரணம் உணவு முறை. சிறுதானியங்கள், கீரை மற்றும் பழவகைகள், பாரம்பரிய அரிசி வகைகள், இயற்கை முறை விவசாயம் போன்றவற்றால் மட்டுமே அது சாத்தியமானது. அதில் அதலைக்காயின் பங்கு முக்கியமானது. உலகின் வேறு எங்கும் கிடைக்காத, இந்தியாவில் குறிப்பாக ஆந்திரா, கர்நாடகம், மஹாராஷ்டிரா, தமிழகத்தில் மதுரை, விருதுநகர் மற்றும் அதனைச் சுற்றியுள்ள பகுதிகளில் மட்டுமே கிடைக்கிறது. வெறும் 2 முதல் 2.5 செ.மீ. நீளமுள்ள அதலைக்காய், எண்ணற்ற நோய்களைத் தீர்க்கும் வல்லமை உடையது. அதனால்தான் அதலைக்காயை அற்புத சஞ்சீவினி என்கிறார்கள்..பெட்டிச் செய்திசத்துகள் மற்றும் பலன்கள்நீர்ச்சத்து, நார்ச்சத்து, புரதம், கால்சியம், பொட்டாசியம், பைடோநியூட்ரின், வைட்டமின் ஏ, வைட்டமின் சி, வைட்டமின் டி மற்றும் அமினோ அமிலங்கள், இன்சுலின் போன்று செயல்பட்டு சர்க்கரையின் அளவை கட்டுப்பாட்டுக்குள் வைத்துக்கொள்ள உதவும். புற்றுநோய் செல்கள் ரத்தத்தில் வளர்வதைத் தடுத்து, புற்றுநோயைக் கட்டுப்படுத்தும். 'லெய்ச்சின்' நோய் எதிர்ப்புச் சக்தியை அதிகரிக்கும். பைடோநியூட்ரின் சிறுநீரகத்தின் ரத்தத்தைச் சுத்திகரித்து, சீராகச் செயல்பட உதவுவதோடு சிறுநீரகத்தில் உள்ள கற்களையும் கரைக்கும். வைட்டமின் 'டி', ஆல்பமின் மஞ்சள்காமாலையை விரைவில் குணப்படுத்த உதவுகிறது. ரத்த சிவப்பணுக்களின் உற்பத்தியை அதிகரித்து, 'ஹெச்.ஐ.வி' கிருமிகளின் தாக்கத்தைக் குறைக்கும். வைட்டமின் 'ஏ', வைட்டமின் 'சி' மற்றும் அமினோ அமிலங்கள் முகப்பருக்களை சரி செய்வதோடு, முகப்பருக்கள் வராமலும் தடுக்கிறது. அதிக அளவிலான நார்ச்சத்துக்கள் ரத்த ஓட்டத்தை ஊக்குவிப்பதோடு செரிமான மண்டலத்தையும் பாதுகாக்கிறது. மேலும் பொட்டாசியம், மோமோர்டியல் அமிலம், கரோட்டின் போன்ற ஊட்டச்சத்துக்களும் உள்ளன. குறைந்த அளவிலான கலோரிகள் எடை குறைக்க உதவும். வயிற்றில் இருக்கும் கிருமிகளை அழிப்பதோடு குடற்புழு பிரச்சனைகளையும் சரி செய்கிறது. உடற்சூடு குறைக்கும்.