நஞ்சில்லா விவசாயம் குறித்து பொதுமக்களிடையே பெரும் சிந்தனைத் தூண்டலை ஏற்படுத்தியவர் மறைந்த இயற்கை வேளாண் விஞ்ஞானி நம்மாழ்வார். ஆரோக்கியமான உணவு அனைத்து உயிர்களுக்கும் கிடைக்க வேண்டும் என்பதை உறுதி செய்ய வேண்டி 40 ஆண்டுகளுக்கும் மேலாக தமிழ்நாடு முழுவதும் குறுக்கும், நெடுக்குமாகப் பயணித்து தன் சொல்லாலும், செயலாலும் மக்களுக்கு இயற்கை விவசாயத்தின் நன்மைகளை உணர்த்தியவர். அவர் விதைத்துச் சென்ற விதை பல்கிப் பெருகி, உணவும், சூழலியலும் மாறி நிற்கிறது..அனைவருக்கும் உணவு உத்திரவாதம் செய்வதில் பெரும்பங்கு வகிக்கும் மானாவாரி உழவர்களை ஒருபடி மேலே உயர்த்துவதை தன் வாழ்நாள் லட்சியமாகக் கொண்டிருந்தார் நம்மாழ்வார். அதன் தொடர்ச்சியாகவே அவர் ஏற்படுத்திய வானகத்தின் அனைத்து செயற்பாடுகளும் இருந்து வருகிறது. இப்படி சூழலியல், கல்வி, மருத்துவம் என எண்ணற்ற மாற்றங்களையும், முன்னோர்கள் உழைப்பின் அறுவடையும் நாம் அனுபவித்துக் கொண்டுதான் இருக்கிறோம், அதை நினைவுகூறும் விதமாக ஆண்டுக்கு இரண்டுமுறை (நம்மாழ்வார் பிறந்தநாள், நினைவுநாள்) நம்மாழ்வாரைப் பின்பற்றும் இயற்கை விவசாயிகள், ஆர்வலர்கள் வானகத்தில் கூடுகின்றனர். அப்படி அவரது 85-வது பிறந்தநாள் விழா, ஏப்ரல் 6-ம் தேதி, கரூர் மாவட்டம், கடவூர், சுருமான்பட்டியில் உள்ள வானகம் நம்மாழ்வார் உயிர்ச்சூழல் நடுவத்தில் நடைபெற்றது. விழாவில் சிறப்பு விருந்தினராகக் காந்திகிராம பல்கலைக் கழக முன்னாள் துணைவேந்தர் மார்கண்டன், முன்னோடி உழவர்கள், விதை சேகரிப்பாளர்கள், சூழலியலாளர்கள், இளைஞர்கள், பொதுமக்கள் கலந்துகொண்டனர்..நம்மாழ்வார் விருதுசூழலியல், மருத்துவம் மற்றும் கல்வித்துறைகளில் இந்தச் சமூகம் பயனுற வாழும் நன்நெஞ்சங்களை அறிமுகம் செய்து, பாராட்டி நம்மாழ்வார் பெயரில் விருது வழங்கப்பட்டது.. உயிர் வேளாண்மையில் சாதனை படைத்துள்ள நவநீதகிருஷ்ணன், ஹோமியோபதி மருத்துவர்களை உருவாக்கிய மருத்துவர் பழ. வெள்ளைச்சாமிக்கு மருத்துவத்துக்கான நம்மாழ்வார் விருது வழங்கப்பட்டது. கல்விக்கான விருது, சுடர் நிறுவனத்தைத் தொடங்கி மலைவாழ் மக்களின் கல்விக்காகப் பாடுபடும் நடராஜனுக்கும், சூழலியல் விருது நித்யானந்த் ஜெயராமனுக்கும் வழங்கப்பட்டது..விழாவில் சிறப்புரை ஆற்றிய காந்திகிராம பல்கலைக் கழக முன்னாள் துணைவேந்தர் மார்கண்டன், "வானகம் அறங்காவலர்களின் சேவை, யுக தர்மம். அதை செய்கின்ற தர்மர்கள் இங்கே கூடி இருக்கிறீர்கள். நான் காந்தி கிராம கிராமிய பல்கலைக்கழக துணைவேந்தராக இருந்தபோது நம்மாழ்வாருக்கு டாக்டர் பட்டம் வழங்கியதைப் பெருமையாக நினைக்கிறேன்" என்றார்..மரபு விதைத் திருவிழாநம்மாழ்வாரின் பிறந்தநாள், மரபு விதைத் திருவிழாவாகவும் கொண்டாடப்பட்டது. மரபு விதை காப்பாளர்களை அடையாளம் கண்டு அவர்களைப் பாராட்டும் பொருட்டு இந்த நிகழ்வு ஆண்டுதோறும் நடந்து வருகிறது. இந்த ஆண்டும் வழக்கம்போல மரபு இசை,மரபு கலைகளோடு அனைவரும் கூடி ஆக்கப்பூர்வமான உரையாடல்களை நிகழ்த்தினர்.மரபு விதைக் கண்காட்சியில் சிறுதானியங்கள் விதை, 1200-க்கும் மேற்பட்ட மரபு நெல் ரகங்கள், காய்கறி ரகங்கள், கிழங்கு வகைகள், மூலிகைகள், பயறு, எண்ணெய் வித்துக்கள் விதை காட்சிப்படுத்தப்பட்டன..விழாவில் புதிய அறங்காவலர்கள் அறிமுகப்படுத்தப்பட்டனர். கோபிசெட்டிபாளையம் குமார், ரமேஷ், இரா. வெற்றிமாறன், சிவகாமி, காரைக்கால் டேவிட், சிவகாசி கருப்புசாமி, கரிகாலன், நம்மாழ்வாரின் மகள் மீனா நம்மாழ்வார், உயிர் ஆற்றல் வேளாண்மை பயிற்சியாளர் மகேஷ், அஜய்ராஜா ஆகியோரை அறங்காவலர் ஏங்கெல்ஸ் ராஜா அறிமுகம் செய்து வைத்தார்..நிகழ்ச்சியின் நிறைவாக, விதைகளைக் காட்சிப்படுத்தியிருந்த விதை சேகரிப்பாளர்கள், விவசாயிகள், தேனீ வளர்ப்பு பயிற்றுநர், வானகம் குழுவின் தன்னார்வலர்கள் கௌரவிக்கப்பட்டனர்.- வாசுகி ராஜா