நம்ம பாரம்பரியமான உணவுல எப்பவுமே ஆரோக்கியம் நிறைஞ்சு இருக்கும். அந்த உணவுல முக்கியமானது சாம்பார். அந்த சாம்பார் தயாரிக்க முக்கியமானது புரதம் நிறைந்த துவரம் பருப்பு. பல ஊர்கள்ல மண் சார்ந்த துவரம் பருப்பு இருக்கு. அந்த பருப்பு, அங்க இருக்குற தண்ணிக்கு ஏத்தமாதிரி அவங்க வைக்குற சாம்பார் சுவையும் மாறுபடும்.அந்தகாலத்துல வீட்டுக்குத் தேவையான துவரையை விவசாய நிலங்கள்ல பயிர் பண்ணிட்டு இருந்தாங்க. அப்ப பல ரக துவரை இருந்துச்சு. ஆனா இன்னைக்கு ஏதாவது ஒரு ரக துவரை மட்டும் கிடைக்குற சூழ்நிலை உருகிடுச்சு. இந்த நிலையில, பாரம்பரிய துவரை ரகங்களை மீட்டுக் கொண்டு வரணும். வழக்கொழிஞ்சு போன துவரை ரகங்கள் மறுபடியும் புழக்கத்துக்கு வரணும்னு நினைச்சு தேடல்ல இறங்குனேன். அதோட விளைவு, செஞ்சி மரத்துவரை, வெண்துவரை, வேலி துவரை, காட்டு துவரை, பெரிய மரத்துவரை, கொடி துவரை, கெங்கம்மா பல்லாண்டு துவரைன்னு 7 வகையான துவரை இப்ப புழக்கத்துல இருக்குது. இதுல கெங்கம்மா பல்லாண்டு துவரை தான் முக்கியமானது. இந்த இதழ்ல அதைப் பற்றித்தான் பார்க்கப்போறோம். .ஆண்டுக்கு 4 மகசூல்இந்த ரக துவரையோட பருப்பு கொஞ்சம் பெருசா இருக்கும். மற்ற துவரை ரகங்களை நேரடியாவே நடவு பண்ணிக்கலாம். இந்தத் துவரையை நேரடியா நடவு பண்றதவிட, நாற்றாங்கால் போட்டு, பையில வளர்த்து, மரக்கன்று நடுற மாதிரி நடுறது தான் சிறப்பு. ஏன்னா இது பல்லாண்டு காய்க்கக்கூடிய ரகம்.நடவு செய்யும்போது, வேருக்கு பாதிப்பில்லாம நடணும். அப்பதான் பல்லாண்டு காலம் காய்க்கும். பூக்கள் மஞ்சள், சிவப்பு கலந்த நிறத்துல இருக்கும். இது ஒரு வருஷத்துக்கு 3 முதல் 4 தடவை மகசூல் கொடுக்கும். நாலு பேரு இருக்குற குடும்பத்தோட துவரை தேவையைப் பூர்த்தி செய்யுறதுக்கு 2 துவரை செடி இருந்தா போதும். இது, எலுமிச்சை மரம் மாதிரி குறுமரமா இருக்கும்..விதையின் கதை2015-ம் வருஷ ஆரம்பத்துல நான் விருதுநகருக்கு பஸ்ல போகும்போது என் பக்கத்துல ஒரு பாட்டியம்மா உட்காந்திருந்தாங்க. நான் எங்க பயணம் பண்ணாலுமே பையில விதைகள் வச்சிட்டு போறது வழக்கம். அப்படி போகும்போது பக்கத்துல இருந்த பாட்டியம்மா கூட பேசிகிட்டே வந்தேன். அவங்களை பார்க்குறதுக்கு வேற மாநிலத்தவர் மாதிரி தெரிஞ்சது. தெலுங்கு பேசுனாங்க. எனக்கும் கொஞ்சம் அந்த மொழி புரியும். அதனால பேசிட்டு வந்தோம். என்னைப் பற்றி சொன்னதை ஆர்வமா கேட்டவங்க, 'உன்கிட்ட எதாவது விதை இருந்தா கொடும்மா'ன்னு கேட்டாங்க. என்கிட்ட சுரைக்காய், பூசணி விதைகள் இருந்துச்சு. நான் அந்த விதைகளை எடுத்துக் கொடுத்தேன். அவங்க ரொம்ப சந்தோசமா வாங்கிக்கிட்டாங்க.பிறகு, அவங்க சுருக்கு பையில இருந்து எண்ணி நாலு விதை கொடுத்தாங்க. கொடுக்கும்போதே, 'இது துவரை விதை. பெருசா மரம் மாதிரி வரும். இந்தத் துவரையை நீ வளர்த்து எடு. பூ பூத்ததுன்னா பார்க்குறதுக்கு ரொம்ப அழகா இருக்கும். இது பல வருஷமா நான் வச்சுட்டு இருக்குற ரகம்'னு சொன்னாங்க. பொதுவா, துவரையை ஒரு வருஷம் பட்டம் போட்டுதான் எடுப்பாங்க. அதிகபட்சம் 3 வருஷம் பட்டம் போடுற துவரையும் இருக்குது. ஆனா, அந்த பாட்டியமா என்கிட்ட கொடுத்த விதை 10 வருஷம் ஆன மரத்துல இருந்து எடுத்ததுன்னு சொன்னாங்க. அந்தத் தகவல் ஆச்சரியமா இருந்தது..இந்தத் துவரையை எங்க கையில ஒப்படைச்சவங்க கெங்கம்மா. இப்போ அவங்க உயிரோட இல்லை. அவங்க ஆந்திரா மாநிலம் விஜயவடாவை சேர்ந்தவங்க. அது மட்டும்தான் அவங்களைப் பத்தி எனக்குத் தெரிஞ்ச தகவல். அவங்களோட தொடர்பு எண் எதுவும் கிடைக்கல.அப்போ நான் வெறும் வீட்டுத்தோட்டம் மட்டும்தான் பண்ணிக்கிட்டு இருந்தேன். இப்போ தோட்டம் அளவுக்குப் பண்றோம். விதை பண்ணையை உருவாக்கிட்டு இருக்கோம். அன்னைக்கு நிலங்கள் இல்லாத சூழல்ல அந்தத் துவரையை எடுத்துகிட்டு வரும்போது 'இந்தத் துவரையை வச்சு என்ன பண்ண போறோம். வீட்டுத்தோட்டத்துல வச்சு எவ்வளோ எடுத்துற முடியும்'னு தோணுச்சு. இருந்தாலும் துவரை சிவப்பு நிறத்துல இருக்கும்னு சொன்னாங்களே. அதையும் பார்த்துடலாம்னு ஆர்வமாகிடுச்சு.வீட்டுத்தோட்டத்துல 20 லிட்டர் 'கன்டெய்னர்'ல அந்த விதையை நடவு பண்ணுனேன். அவங்க கொடுத்த 4 விதையில, ஒரு விதையைப் போட்டுட்டு, ஒரு விதையை நண்பர்கிட்ட கொடுத்துட்டேன். மிச்சம் 2 விதையைத் தாய் வித்துக்களாக சேமிச்சு வச்சுக்கிட்டேன். அவங்க பல்லாண்டு துவரைன்னு சொல்லிதான் கொடுத்தாங்க. நாங்க அவங்க பெயரையும் சேர்த்து கெங்கம்மா பல்லாண்டு துவரைன்னு எழுதி சேமிச்சு வச்சோம். இப்போ வரைக்குமே அந்த 2 தாய் வித்துக்களும் என்கிட்ட இருக்குது..மரத்துவரைஇந்தத் துவரை நல்லாவே வந்துச்சு. பூக்களைப் பார்க்கும்போது ரொம்ப ஆச்சரியமா இருந்துச்சு. ஆனா, அவங்க சொன்ன மாதிரி ரொம்ப பெருசா வரலை. ஏன்னா நிலத்துல வைக்குற அளவுக்கு 'கன்டெய்னர்'ல வராது. இது குறுமரம் மாதிரி வரும். இருந்தாலும் மட்குக்குப்பை நிறைந்த மண்ணுல வச்சு ரொம்ப சிறப்பாவே வந்தது. அதுல இருந்து காய்ச்ச விதைகளை எடுத்து, பரவலாக்கம் பண்ணுனேன். 2 தடவைதான் விதை எடுத்துருப்போம். வேர்ல ஏதோ பிரச்சனையாகி செடி போயிடுச்சு. என்ன பண்றதுன்னு யோசிச்சு, நான் எடுத்த விதையையே பக்கத்துல இருக்கவங்களோட நிலத்துல வச்சேன். 'பிளாஸ்டிக் கப்'ல நாற்றா போட்டு நட்டேன். நல்லா வந்தது..12 அடி உயரம்அதுல எடுத்த விதையை, சென்னையைச் சேர்ந்த அகிலாங்குற தோழிகிட்ட கொடுத்தேன். அவங்க நிலத்துல போட்டாங்க. அவங்களுக்கும் சிறப்பா வந்தது. 2 வருஷத்துக்கு மேலயே காய்ச்சது. அதுல இருந்து ஒரு கிலோ விதையை எனக்கு திருப்பிக் கொடுத்தாங்க. அவங்களோட நிலம் அதிகமா தண்ணி தேங்கக்கூடியது. அதுனால மழைக்காலத்துல அதிக தண்ணி தேங்கி அவங்களோட 2 வருஷ மரம் பட்டுபோயிடுச்சு. இருந்தாலும் அவங்க மறுபடியும் போட்டாங்க. நானும் நிலத்துல போட்டேன், 4 வருஷத்துக்கு மேலயே அந்த மரம் தொடர்ந்து காய்ப்பு கொடுத்துக்கிட்டே இருந்துச்சு. கெங்கம்மா துவரை 12 அடி உயரம் வரைக்கும் வளர்ந்தது. பக்கக்கிளைகளும் அதிகம். அவங்க கொடுத்த விதைகளை நிறைய விவசாயிகள்கிட்ட பரவலாக்கம் பண்ணேன். இதுவரைக்கும் இந்த கெங்கம்மா துவரையை 10,000 பேருக்காவது கொடுத்துருப்போம். ஒருத்தருக்கு 5 விதைதான் கொடுத்துட்டு இருந்தோம். இப்போ 10 விதைகள் வரைக்கும் கொடுக்க முடியுது.இந்த விதையை கெங்கம்மா பல்லாண்டு துவரைன்னு சொல்லியே பரவலாக்கம் பண்றேன். இதை கெங்கம்மா பாட்டிக்கு நான் செய்யுற நன்றிக்கடனா நினைக்குறேன். கெங்கம்மாங்குற பேர்ல அவங்க கொடுத்த விதைகள் பரவலாகி, அந்தத் துவரை ரூபத்துல வாழ்ந்துட்டு இருக்கறதாத்தான் நான் நினைக்குறேன்..இந்தத் துவரையில பூச்சித்தாக்குதல் இல்ல. வெயில்காலத்துல மட்டும் வெள்ளைப்பூச்சி தாக்குதல் இருக்கு. அதைத் தடுக்க மைதா மாவு கரைசலைத் தெளிச்சு விட்டா போதும். மைதா மாவை தண்ணியா காய்ச்சி, ஆறுன பிறகு 'ஸ்ப்ரேயர்'ல நிரப்பி தெளிக்கணும். வேற எந்த பூச்சித்தாக்குதலும் வராது..பராமரிப்புதண்ணி அளவா கொடுக்கணும். அதிகமா கொடுத்தா பல்லாண்டு காய்க்காது. ஒவ்வொரு தடவை காய்க்கும்போதும் கொத்துக்களை கத்திரிச்சு எடுத்து, காயப்போட்டு உடைச்சு பருப்புகளை எடுக்கணும். அப்படி வெட்டி எடுக்குறப்போ கவாத்து பண்ண மாதிரியும் ஆகிடுது. மறுபடியும் தழைஞ்சு உடனே பூ எடுத்து காய்க்குது. வருஷத்துக்கு 3 முதல் 4 முறை காய்ப்பு இருக்குது..இந்தத் துவரை பெருசா இருக்குறதால 5 முதல் 6 பருப்பு இருக்கு. காய்ச்சு முதிர்ச்சிநிலை வரும்போது பழுத்த மாதிரி இருக்கும். அப்போ அதை எடுத்து அவிச்சு, உரிச்சு சாப்பிடலாம். சுவையா இருக்கும். புரதம் நிறைந்தது. காயவச்சு பருப்புகளை முழுசா எடுத்து ஊற வச்சு, அவிச்சும் சாப்பிடலாம். சாம்பாருக்கு பயன்படுத்தும்போது மண் கட்டுன துவரம் பருப்பா உடைக்க முடியும். பருப்பை ஊற வச்சு, புத்து மண்ணோ, செம்மண்ணோ சலிச்சு எடுத்து, அந்த மண்ணை துவரையில நல்லா தடவி வெயில்ல காயப்போட்டுடணும். காய்ஞ்ச பிறகு மண் உதிர்ந்திடும். தோல் பகுதியில லேசான மண் துகள்கள் இருக்கும். இந்தத் துவரையை 'மெஷின்'ல கொடுத்து உடைக்கும்போது பாதி தோல் போயும் போகாமலும் தான் இருக்கும். மண் கட்டுன துவரையை இப்படித்தான் எடுக்குறோம். அப்படி எடுக்குற துவரையை நாம சேமிச்சு வச்சுக்கலாம். இந்த மண் கட்டுன துவரை அவ்வளவு சீக்கிரமா பூச்சி பிடிக்குறதில்லை..பெட்டிச் செய்திசெஞ்சி மரத்துவரைவிதை வெள்ளை நிறத்துல இருக்கும். பூக்கள் மஞ்சள் நிறத்துல இருக்கும். செடி 5 முதல் 6 அடி உயரம். வெள்ளை நிறத்துல இருக்கக்கூடிய துவரம் பருப்பின் மேல் பகுதியில அடர் சிவப்பு நிறத்துல புள்ளிகள் ரொம்ப நெருக்கமாவே வரும்..வெண் துவரைஇந்தத் துவரை தஞ்சாவூர் மாதிரி இடங்கள்ல பரவலாகவும், வட மாநிலங்கள்ல அதிகமாகவும் பயிர் பண்ணக்கூடியது. வெண் துவரை முழுவதுமே வெள்ளை நிறத்துல தான் இருக்கும்.வேலி துவரைசெடி அதிக உயரம் வளராது. 3 முதல் 4 அடிதான் இருக்கும். நெருக்கமாக வளரக்கூடியது. வேலிகளுக்கு இதை அதிகமா பயன்படுத்துவாங்க. துவரை பழுப்பு நிறத்துல இருக்கும். துவரையோட மூக்குப்பகுதி கொஞ்சம் வித்தியாசமா இரண்டு கோடு வந்த மாதிரி இருக்கும். அளவுல சின்னதா இருக்கும். பூக்கள் மஞ்சள் நிறத்துல இருக்கும்..காட்டு துவரைசெடி மரம் மாதிரியே வரும். அதோட பருப்புகள் சின்ன சின்னதா இருக்கும்.பெரிய மரத்துவரைஇந்த ரகம் 3 வருஷம் காய்க்கக்கூடியது. துவரை பழுப்பு நிறத்துல இருக்கும். பருப்பு பெருசா இருக்கும் .மூக்குப்பகுதி முளைப்பு இருக்குற இடத்துல ஒரே ஒரு கோடு போட்ட மாதிரிதான் இருக்கும்.கொடி துவரைஇந்த ரகம் 2023-ம் வருஷம் தான் கிடைச்சது. பொதுவா செடிகள்ல தான் துவரை வரும்னு சொல்லுவாங்க. இது கொஞ்சம் வித்தியாசமா இருந்தது. கொடி மாதிரி தான் போகுது. பூக்கள் மஞ்சள்ல சிகப்பு கலந்த நிறத்துல இருக்கும். சந்தன நிறத்துல பருப்பு இருக்குது. ஒரு கொத்துக்கு 3 பருப்புக்கு மேல இருக்காது. மற்ற ரகங்கள்ல 4 முதல் 5 பருப்பு இருக்கும்..பெட்டிச் செய்திசமையல் முறைஅவிச்சு சாப்பிடலாம். சாம்பாருக்கு பயன்படுத்திக்கலாம். காய்ஞ்ச பயிறுகளை ஊற வச்சு சமைச்சுக்கலாம். இப்படி பலவிதமா பயன்படுத்திக்க முடியுது. பருப்பு பெருசா இருக்குறதால பயன்படுத்துறதுக்கும் எளிமையா இருக்கு..பெட்டிச் செய்திசிவப்பு நிறப் பூதமிழ்நாடு மட்டுமில்லாம, மற்ற மாநிலங்கள், வெளிநாடுகளுக்கும் விதைகள் கொடுத்துருக்கோம். 2018-ம் வருஷம் இதேமாதிரி சிவப்பு நிறத்துல பூ பூக்கும்னு விவசாய நண்பர் ஒரு ரகத்தை அனுப்பி இருந்தாரு. அந்த விதையிலயே கொஞ்சம் வித்தியாசம் இருந்தது. அந்த விதையை போடலாம்னு யோசிச்சேன். ஆனா இனக்கலப்பு ஆகிடும்னு நினைச்சு அதை மத்த விவசாயிகள்கிட்ட கொடுத்து போடச் சொன்னேன். 25 விதைக்கு மேலயே கொடுத்தாரு. அதைக் கொஞ்சம் சேமிச்சு வச்சு, என்னுடைய தோட்டத்துல போட்டேன். கெங்கம்மா துவரையில 6 பருப்பு வரும். ஆனா, அவரு கொடுத்ததுல 4 பருப்பு வந்தது. இது வேற ரகம்னு புரிஞ்சது. பல ஆண்டுகள் காய்க்குமான்னு தெரியல. (வளரும்)- ப்ரியா ராஜ்நாராயணன்