வீட்டுத்தோட்டம் அமைப்பவர்கள் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே இருக்கிறது. தமிழ்நாடு மட்டுமில்லாமல் உலகெங்கும் தமிழர்கள் வாழும் பகுதிகளிலும் வீட்டுத்தோட்டம் அதிகரித்து வருகிறது. வீட்டுக்குத் தேவையான காய்கறிகளை ரசாயனங்கள் கலக்காமல் இயற்கை முறையில் உற்பத்தி செய்வதால் ஆரோக்கியம் மேம்படுவது மட்டுமல்லாமல் செடி, கொடிகள் பராமரிப்பில் ஈடுபடுவதால் உடற்பயிற்சி மற்றும் மன மகிழ்ச்சி கிடைப்பதால் தனிமையில் இருக்கும் பெரும்பாலானவர்களின் விருப்பத் தேர்வாக இருக்கிறது. அந்த வகையில் பெங்களூரு குப்டவுன் ஏரியாவில் உள்ள பாலாஜி 'லே அவுட்'டில் வசிக்கும் நிர்மலா, பாலசண்முகம் தம்பதி தங்கள் ஓய்வு காலத்தைச் செடி, கொடிகளுடன் மகிழ்ச்சியாகக் கழித்துக்கொண்டிருக்கிறார்கள்..தங்கள் வீட்டுத்தோட்ட அனுபவங்களை மண்வாசனை வாசகர்களுடன் பகிர்ந்து கொள்கிறார் நிர்மலா. "எனக்கு சொந்த ஊர் திருநெல்வேலி பக்கத்துல ஶ்ரீவைகுண்டம். கணவருக்குக் குலசேகரப்பட்டினம். எனக்குச் சின்ன வயசுல இருந்தே செடிகள் வளர்க்குறதுல ஆர்வம் இருந்தது. நான் பிறந்தது முழுக்க முழுக்க விவசாயப் பகுதிகள்னால அதுபத்தின புரிதலும் இருந்தது. கணவர் மத்திய அரசு வேலையில இருந்தார். அதனால டெல்லி, போபால்னு பல மாநிலங்கள் இடம் மாற வேண்டியிருந்தது. நான் போன இடங்கள் எல்லாத்துலயும் செடிகள் வளர்த்தேன். கணவரோட பணி ஓய்வுக்குப் பிறகு பெங்களூர்ல 'செட்டில்' ஆகிட்டோம்..இங்க வந்ததும் முதல்ல 5 தொட்டிகள்ல செடிகளை வளர்த்தேன். அதுக்குப் பிறகு நான் பயணிக்கிற இடங்கள், நர்சரிகள்னு பல இடங்கள்ல செடிகளை வாங்கிட்டு வந்து வளர்த்தேன். இப்போ என்கிட்ட மொத்தமா 100 செடிகள் இருக்கு. அதிகமான செடிகளை நான் வளர்க்கல. என்னால பராமரிக்க முடிஞ்ச அளவுதான் வளர்க்கிறேன். என் செடிகளை நானே பார்த்துக்கிறதுதான் எனக்குத் திருப்தியை தரும்'' என்றவர் தான் வளர்க்கும் செடிகள் பற்றிய தகவலுக்குள் புகுந்தார்..வீட்டுக்குள்ளும் செடிகள்''ஒரு பால்கனியில குரோட்டன்ஸ், ஒரு பால்கனியில மலர்கள், ஒரு பால்கனியில அதிக வெயில் தேவைப்படாத செடிகள்னு வெச்சுருக்கேன். மாடியில காய்கறிகள், மூலிகை செடிகள் இருக்கு. வீட்டுக்குள்ள ஆக்சிஜன் 'சப்ளை'க்காக மணிப்ளான்ட், போன்சாய், ஸ்னேக் ப்ளாண்ட், குரோட்டன்ஸ்களை வச்சிருக்கேன். பொதுவா எனக்குப் போன்சாய்ல ஆர்வம் இல்ல, என் பொண்ணுக்கு 'கிஃப்ட்'டா வந்ததால அதை வச்சிருக்கேன். வீட்டுக்குள்ள இருக்கிற செடிகளை எடுத்து வாரம் ஒரு நாள் வெயில்ல வச்சு, திரும்ப வீட்டுக்குள்ள கொண்டு வந்துடுவேன்..மூலிகை சமையல்குழந்தைகள் வளர்ந்ததுக்கு பின்னால அவங்க 'செட்டில்' ஆகிட்டாங்க. எனக்குச் சும்மா நேரம் செலவழிக்கிறதுல இஷ்டம் இல்ல. அதனால ஒவ்வொரு செடிகளையும் குழந்தை மாதிரி நினைச்சு வளர்க்க ஆரம்பிச்சேன். செடியில இருந்து விழுகிற விதைகள் பக்கத்துல முளைச்சது. அதுனால என்னோட ஆர்வம் இன்னும் அதிகமாச்சு. மூலிகை வகைகள்ல வெற்றிலை, கற்றாழை, முடக்கத்தான், துளசி, தூதுவளை, பச்சிலைனு செடிகள் இருக்கு. இன்னைக்கு மூலிகைகள்னாலே நிறையபேர் முகம் சுழிச்சுக்கிறாங்க. ஆனா, மூலிகைகளைப் பயன்படுத்தி புதுவிதமான 'டிஷ்' பண்ணா நிறைய பேருக்குப் பிடிக்கும். இதை நானே முயற்சி பண்ணி இன்னைக்கு சாத்தியமும் ஆகியிருக்கு. இன்னைக்கும் மூலிகைகள் சாப்பிட்டு ஆரோக்கியமா இருக்கேன். 70 வயசுக்கு மேல ஆகியும் உற்சாகத்தை இந்த மூலிகைகள் தருது..செடிகளுக்கு இடையில் பாட்டுஅதேபோலச் செடிகளுக்கு எப்போ தண்ணீர் தேவையோ அப்ப மட்டும்தான் தண்ணீர் தர்றேன். இதுபோக செடிகளுக்கு மத்தியில தான் தினமும் 'வாக்கிங்' போறோம். அது, செடிகளையும் பார்த்த மாதிரி ஆகுது, மனசுக்கு ஆரோக்கியம் கொடுத்த மாதிரியும் ஆகுது. மாலை நேரத்துல மொட்டைமாடி சூரிய வெளிச்சத்துல மின்னும். வீட்டைச் சுத்தி முழுக்க 'ப்ளாட்'டுகள் இருக்கிறதால என் மொட்டிமாடி பசுமையா காட்சியளிக்கும். அதைப் பார்க்கிற அக்கம் பக்கத்துல இருக்கவங்க என்கிட்ட செடிகள் வாங்கி வளர்க்க ஆரம்பிச்சிட்டாங்க. இதுபோக எனக்கு கர்நாடக சங்கீதமும் வரும். அதனால செடிகளுக்கு இடையில நின்னு பாடல்களைப் பாடுறது பிடிக்கும். இதுல எல்லாம் நமக்கு ஒரு சந்தோஷம் கிடைக்குது. இதுபோக என் கணவர் எல்லோருக்கும் 'வாட்ஸ் ஆப்'ல 'குட்மார்னிங்' அனுப்பும்போது பூக்களைப் புகைப்படங்களா எடுத்து அனுப்புறார். இப்போ பலரும் பூக்கள் பத்தி அவர்கிட்ட விசாரிக்க ஆரம்பிச்சிட்டாங்க. இதுபோக எனக்கு தோட்டத்துல பராமரிக்கிறதுக்கும் அவர் உதவியா இருக்கார்'' என்றவர் வீட்டுத்தோட்டத்தில் உள்ள பயிர்கள் பற்றிப் பேசினார்..அஸ்லிப்பியா''கீரையில பொன்னாங்கண்ணி, கரிசலாங்கண்ணி, வல்லாரை, பாலக்கீரை, புதினா, பசலைக்கீரை, வைட்டமின் கீரை, மணத்தக்காளி, சிலோன் கீரை, முடக்கத்தான்னு பல வகைகள் இருக்கு. காய்கறியில முருங்கை, கத்தரி, வெண்டை, செளசெள, செர்ரி தக்காளி வகைகளும், மலர்கள்ல ரோஜா, மல்லிகை, கனகாம்பரம், ஜெரேனியம், கதம்பம், ரெயின் லில்லி, அஸ்லிப்பியா (பட்டாம்பூச்சிகளை ஈர்க்கும் செடி), சங்குபுஷ்பம்னு பல செடி வகைகள் இருக்கு. இதுல இருந்து மூலிகைகள், கீரைகள், காய்கறிகளைத் தேவைக்கு ஏற்ப அறுவடை பண்ணிப்போம். அதை சமையலுக்கு பயன்படுத்துறப்போ அலாதியான சுகம் கிடைக்குது. அதேபோலச் செடிகள் வாடுற மாதிரியோ, பூச்சித்தாக்குதல் இருந்தாலோ 3ஜி கரைசல், மோர்க்கரைசல், வேப்ப எண்ணெய் கரைசல் தெளிப்பேன். இதுபோக செடிகள் மகசூலை அதிகமாக்க வாழைப்பழ தோல் கரைசல் தெளிப்பேன். அடுத்த சில நாட்கள்லயே செடிகள் மொட்டு வைக்க ஆரம்பிச்சிடும்..செடிகள் பரிமாற்ற குழுபெங்களூர்ல செடிகளை 'எக்ஸ்சேஞ்ச்' பண்ணிக்கிறதுக்காகவே 'வாட்ஸ் ஆப் குரூப்' ஒண்ணு இருக்கு. அதில் எனக்குத் தேவையில்லாத செடிகளைக் கொடுத்துட்டு, தேவையான செடிகளை வாங்குவேன். கடைகள்ல செடிகள் வாங்குறப்போ விலை அதிகமா சொல்றாங்க. இதுபோக செடிகள் தரமானதாவும் இல்லை. அதனாலதான் இந்த 'டிஜிட்டல்' ஏற்பாடு. மாடித்தோட்டத்துக்குத் தேவையான எருவை பக்கத்துல இருக்கிற வெங்கடாசலபதி கோவில்ல வாங்கிக்குவேன். அதனால எனக்கு எரு கிடைக்கிறதுல எந்தக் கஷ்டமும் இல்ல. செடிகளும் நல்லா வளருது. செடிகளை வீட்டுக்குள்ளயும், மாடியிலும் வளர்க்குறதால இன்னைக்கும் ஆரோக்கியமா இருக்கேன்" என்றபடி விடைகொடுத்தார், நிர்மலா பாலசண்முகம். தொடர்புக்கு : பாலசண்முகம் : 96111 05803.பெட்டிச் செய்திவீட்டுக்குள் செடிகள்''வீட்டுக்குள்ள செடிகள் வளர்க்கிறப்போ சுவர்ல இருக்கிற 'பெயிண்ட் டாக்சின்ஸ்'லாம் நம்மைப் பாதிக்காம பாதுகாக்கும். ஆக்சிஜனை அதிகப்படுத்திக் கொடுக்கும். இதுபோக, வீட்டுக்குள்ள முழுக்க 'எலக்ட்ரானிக்' பொருட்களைப் பார்க்கும்போது மனசு அமைதியா இருக்காது. அப்போ செடிகளைப் பார்க்கிறப்போ மனசு கொஞ்சம் 'ரிலாக்ஸ்' ஆகும். அதனால வீட்டுக்குள்ள செடிகள் வளர்க்கிறதையும் ஒரு ஆரோக்கியமான விஷயமா நான் பார்க்கிறேன்'' என்கிறார் நிர்மலா..பெட்டிச் செய்திவேர்களைப் பாதுகாக்கும் கற்றாழை 'ஜெல்'நடவு தொடர்பாக பேசிய நிர்மலா, ''வேறு இடங்கள்ல வாங்கிட்டு வந்து செடிகளை நடுறப்போ அதிகமான செடிகள் வளராம போயிடுது. இதுக்குக் காரணம் செடிகளோட வேர்கள் அந்த மண்ணுக்கு 'செட்' ஆகாம இருக்கும். அதனால கற்றாழையில இருக்கிற 'ஜெல்'லை எடுத்து அதுல வேர்களை முக்கி, தொட்டியில நடவு செய்றேன். அதனால வேர்கள்ல எந்த நோய்கள் இருந்தாலும் பயிர் வளர்ச்சியைப் பாதிக்கிறதில்ல. இதுபோக தேன்ல செடியோட வேர்களை நனைச்சும் நடவு செய்யலாம். அவங்க அவங்களுக்கு ஏத்த மாதிரி நடவு செஞ்சுக்கலாம்'' என்றார்..பெட்டிச் செய்திஎப்படி பராமரிப்பது?மாடித்தோட்டத்தில் முக்கியமானது பராமரிப்பு தான். தண்ணீர் தேவையைப் பொறுத்து ஒரு நாள் விட்டு ஒரு நாள் தண்ணீர் ஊற்ற வேண்டும். தொட்டி நிரம்பி வழியும் அளவுக்குத் தண்ணீர் தரக் கூடாது. மாடித்தோட்டத்துக்குப் பயன்படுத்தும் உரங்கள் உயிர் உரங்களாகவும், இயற்கை உரங்களாகவும் இருப்பது நல்லது. மாடித்தோட்டத்தில் பூச்சித்தாக்குதல் ஏற்பட்டால் 3ஜி கரைசல் தெளிக்கலாம். செடிகளின் வளர்ச்சிக்கு வாழைப்பழ கரைசல் தெளிக்கலாம். வேரின் ஆழத்தில் புழுக்களின் தாக்குதலைத் தவிர்க்க வேப்ப எண்ணெய் கரைசலை நீரில் கலந்து விடலாம். வாரம் ஒரு முறை செடியைச் சுற்றி மண்ணைக் கொத்தி விட வேண்டும். காய்கள் முற்றிவிடாமல் அவ்வப்போது அறுவடை செய்துவிட வேண்டும். விதைகள் தேவைப்பட்டால், காய்களை முற்றவிடலாம்.