தென்னைக்குக் கொடுக்க வேண்டிய ஊட்டச்சத்துக்கள் பற்றித் தெரிந்துகொள்ள விரும்புகிறேன்.- ராஜ்குமார், திண்டுக்கல்.தென்னை மரம் மிகவும் வலுவாக இருக்க அனைத்து விதமான சத்துக்களும் முக்கியம் என்றாலும் கால்சியம் மற்றும் சாம்பல் சத்து இன்றியமையாதது. இயற்கையாகவே சுண்ணாம்புத் தன்மை இல்லாத நிலங்களில் மாதம் ஒரு முறை 200 லிட்டர் தண்ணீரில் 3 கிலோ செங்கல் சூளை சுண்ணாம்பு அல்லது கிளிஞ்சல் சுண்ணாம்பு கலந்த நீரை ஒரு மரத்திற்கு 3 லிட்டர் என்ற விகிதத்தில் கொடுக்க வேண்டும். மரத்திற்கு இயற்கை இடுபொருட்கள் கொடுத்திருந்தால் 4 நாட்கள் தள்ளி இதனை ஊற்ற வேண்டும். மரத்தின் தூரில் இருந்து 6 அடி தள்ளி ஊற்றி விடலாம்.மண் பரிசோதனை அடிப்படையில் சாம்பல் சத்து குறைவாக இருந்தால் ஒரு மரத்திற்கு மாதம் அரை கிலோ முதல் ஒரு கிலோ வரை தென்னை கழிவுப் பொருட்களை எரித்த சாம்பலை மரத்தைச் சுற்றித் தூவி விடலாம். மாதம் ஒரு முறை, ஒரு மரத்திற்கு 5 முதல் 10 மில்லி சூடோமோனஸ் கொடுத்து வரலாம். இதனால் மரத்தின் வேர், தண்டு, தலைப்பகுதியில் எவ்வித நோய்த்தாக்குதலும் இருக்காது.நிலம் அதிக சரிவான பகுதியில் இருந்தால் முறையான வரப்பு அமைத்துக் கொள்ள வேண்டும். அப்போதுதான் நம் நிலத்தில் ஏற்கனவே இருக்கும் சாம்பல் மற்றும் சுண்ணாம்பு சத்துக்கள் மழை காரணமாக வெளியே சென்று விடாமல் இருக்கும். 3 அல்லது 4 மாதங்களுக்கு ஒருமுறை ஒரு மரத்திற்கு 10 கிலோ மட்கிய தொழு உரம் அல்லது ஆட்டு சாணத்தை மரத்திலிருந்து 6 அடி தள்ளி பாசனம் செய்யும் வட்டப்பாத்தியில் போட்டு விடலாம். வாய்ப்பிருந்தால் மண் போட்டு மூடி விடுவது நல்லது. .மரக்கரிகாய் அழுகல் நோய்! அப்படின்னா என்ன?-சுதர்சன், யானைமலை,ஒத்தக்கடைநண்பா, இது கோகோவை தாக்கக்கூடிய நோய்களில் முக்கியமான ஒன்னு. ஆண்டு முழுவதும் இந்த நோயின் தாக்குதல் இருந்தாலும் கோடைகாலங்களில் இது அதிகமாக தன் வேலையை காட்டுது. காய்களின் எல்லா வளர்ச்சி நிலைகளிலும் எளிதில் பாதிப்பை ஏற்படுத்தும். அடர் பழுப்பு நிறத்தில் இருந்து கருமை நிற புள்ளிகள் உருவாகும். தாக்குதலுக்கு உள்ளான பழங்கள் கருமை நிறமாக மாறிக் காய்ந்து மரத்திலேயே தொங்கிக்கொண்டிருக்கும். இதன் உள்ளே இருக்கிற திசுக்கள் அழுகி, பாதிக்கப்பட்ட கோகோ விதைகள் கருப்பு நிறத்துல இருக்கும். நோய் தொற்று காய்களில் ஏற்படும் காயங்கள் மூலமா வேகமா பரவும். அப்படி தாக்குதலுக்கு உள்ளான காய்கள் மேல ஒரு சதவிகித போர்டோ கலவையைத் தெளிக்கணும். பாதிக்கப்பட்ட காய்களை மரத்திலிருந்து அகற்றணும்.இந்த நோய் மட்டுமல்லாம இளங்காய் வாடல் நோய், சொறி நோய், கருங்காய் நோய்ன்னு இன்னும் சில முக்கியமான நோய்கள் கோகோவை தாக்கும்..அரசு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் தென்னை சாகுபடியாளர்களுக்கு வழங்கப்படும் ‘தென்னை டானிக்’கின் பயன்கள் என்ன?- மாசிலாமணி, அரக்கோணம்.அவசியமான கேள்விதான். ஆனாலும் நாம ஏற்கனவே இது பற்றி சில தகவல்களை தந்திருக்கோம். அதை இந்த இடத்துல நினைவுபடுத்திக்கிறேன்.அதாவதுங்க மனுஷங்களுக்கு உடல் ஆரோக்கியத்தை மேம்படுத்த எவ்வளவோ ஊட்டச்சத்து மருந்துகள் இருக்கிற தான் இந்த டானிக்கும்.இதை வழங்குறது மூலமா தென்னை மரத்துக்குக் கிடைக்கும் பலன்களை வேளாண்மை பல்கலைக்கழகம் இப்படி பட்டியலிடுது...தென்னையில் குரும்பை கொட்டுதல் குறையும், காய்கள் பெரிதாகி பருப்பின் எடை கூடும். பூச்சி மற்றும் நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும், பாளைகளின் எண்ணிக்கை அதிகரிக்கும், பச்சையம் கூடும். அது மட்டுமில்லாமல் தென்னை ஓலைகளின் எண்ணிக்கையும் அதிகரிக்கும். அதன் மூலம் ஓலைகளை விற்பனை செய்யும் தென்னை விவசாயிகளுக்குக் கூடுதல் வருமானம் கிடைக்கும். அதனால அரசு வேளாண் பல்கலைகழகத்தின் தென்னை டானிக்கை தேவையானங்க வாங்கி பயன்படுத்திக்கலாம்..கால்நடைகளுக்குக் கொடுக்க வீட்டிலேயே தயாரிக்கும் நாட்டு மருந்துகளுக்கான மூலிகைகள் எல்லா சீசனிலும் கிடைப்பதில்லை. இதற்கு என்ன தீர்வு?- நாராயணன், தாராபுரம்உங்களுக்கான பதிலுக்குள் வரும் முன், மண்வாசனை இதழ் சார்பாக ஒரு மலர்செண்டு வழங்குறோம்...பிடிங்க.குழந்தைகளுக்கு உடல் நோவு வந்தாலே கை மருந்து செய்யக் கஷ்டப்பட்டு 'மெடிக்கல் ஸ்டோர்'ல ஆங்கில மருந்தை வாங்கி ஊற்றி, நோய் எதிர்ப்பு சக்தியைக் கெடுக்குற சமுதாயத்தில் வாழ்ந்துட்டு இருக்கிறோம். இந்த நிலையில, கால்நடைகளுக்குக் கை மருந்து செய்து கொடுக்குற உங்க நல்ல மனசு பல்லாண்டு வாழ்க.உண்மைதானுங்க சிலவகை மூலிகைகள் எல்லா காலத்திலும் கிடைக்காது. ஆனால் அதை எல்லா காலத்திலும் பயன்படுத்திக்க ஒரு உபாயத்தைச் சொல்லி தர்றார் நம்ம இயற்கை கால்நடை மருத்துவரான கோவிந்தராஜ். அதன்படி எல்லா காலங்களிலும் கிடைக்காத மூலிகைகளை அது கிடைக்குறப்ப எடுத்து, நிழல்ல உலர்த்தி, அது காய்ந்ததும் மிக்ஸியில போட்டு அரைச்சு பொடி பண்ணி வெச்சுக்குங்க.அப்புறம் எந்த சீசனில் உங்களுக்குத் தேவைப்பட்டாலும் அழகாக எடுத்து பயன்படுத்திக்கலாம். பிரச்னை தீர்ந்ததா நாராயணன்?பார்த்தீனியத்தை இயற்கை உரமாக்கலாம் எனச் சொல்கிறார்கள். அதன் பயன் என்ன?-புருஷோத்தமன், நெய்வேலிமனிதர்கள், கால்நடைகள் அப்படின்னு சகல ஜீவராசிகளுக்கும் எதிரான ஒரு தாவரம் தான் பார்த்தீனியம். ’உண்மை செருப்பை போட்டுகிட்டு கிளம்புறதுக்குள்ள, பொய் உலகத்தைச் சுத்திட்டு வந்துடும்’ அப்படின்னு ஊர்ப்பக்கம் சொல்லுவாங்க. அது மாதிரி, நன்மை தரும் தாவரங்கள் வேர் பிடிச்சு வளர சில காலம் ஆகும். ஆனால் தீமை செய்யும் இந்த பார்த்தீனியமோ காட்டுத் தீ போல் மளமளவென வளர்ந்து பரவும். இந்த பார்த்தீனியத்தை மிக அருமையான இயற்கை உரமாக மாற்றிடலாம்.அந்த இயற்கை உரத்தினை தாவரங்களின் வேர்கள் எடுத்துக் கொள்வதன் மூலம் பயிர் நன்கு செழித்து வளர்வது மட்டுமில்லாமல் காய்ப்புத் திறனும் அதிகரிக்கும்.- எஸ்.ஷக்தி