சூரிய ஒளியில அதிகமா வெப்பம் கிடைக்குற மாதிரியும், மழை பெய்தால் குழிகள்ல தண்ணீர் தேங்கி நிக்குற மாதிரியும் ஏற்படுத்துற அமைப்பு தான் உழவு. தமிழ்நாட்டை பொறுத்த அளவுல 'தை பட்டம்', 'புரட்டாசி பட்டம்' முடிந்த பிறகு காடு சும்மா இருக்கும். அப்போது அந்த நிலத்தை அப்படியே போட்டுடாம ஒரு முறையாவது உழுவு செய்யணும். மண்ணை பெயர்த்து எடுத்து, புரட்டிப் போடணும். அடி மண் அதாவது தரைத்தளத்துல இருந்து 10 சென்டி மீட்டர் அளவுள்ள மண் வெளியில தெரியுறமாதிரி புரட்டிவிடணும். பூமிக்குள்ள நீர் போறதுக்கு வாய்ப்புஇந்த உழவு சரியான காலங்கள்ல நடக்கணும். அப்பதான் அந்த நிலங்கள்ல அதிகமான விளைச்சல் கிடைக்கும். அதுல முக்கியமானது கோடை உழவு. இது ரொம்ப முக்கியமானது. கோடை உழவு செஞ்சு பூமிக்குள்ள காற்றோட்டம் இருக்குற மாதிரி மண்ணை பிளந்து விடுறதுனால காற்று உள்ள போறது, மழை தண்ணீர் உள்ள போறது மாதிரியான செயல்பாடுகள் நடக்கும். தமிழ்நாட்டுல இருக்கக்கூடிய பெரும்பாலான நிலப்பரப்பு காரத்தன்மை உள்ளதா இருக்குது. கோடை உழவு செய்றதால மண்ணுல படிஞ்சு இருக்கக்கூடிய உப்புகள் கரையுறதுக்கு ஒரு வாய்ப்பு உருவாகும். நிலத்துல மண் அரிமானத்தைத் தடுக்குற அதே நேரத்துல பூமிக்குள்ள அதிகமான நீர் போறதுக்கு மிகப்பெரிய வாய்ப்பைக் கொடுக்கும். மண்ணுல தேங்கி இருக்கக்கூடிய மட்குப் பொருள்கள் நீரின் வேகத்தால அடிச்சுட்டு போயிடாம அந்தந்த வயலுக்குள்ளேயே தேக்கி நிறுத்துறதுக்கு ஒரு அமைப்பா இருக்கும்..கெட்ட நுண்ணுயிரிகள் அழிந்து போகும்வைரஸ் நோய் அல்லது அழுகல் நோய் பாதித்த நிலங்கள்ல அரை அடி ஆழத்துல இருந்து முக்கால் அடி ஆழத்துல தேங்கி இருக்கக்கூடிய கெட்ட நுண்ணுயிரிகள், பூஞ்சை மற்றும் பாக்டீரியாக்கள் உழவு மூலமா வெளியே வந்திடும். அப்படி நிலத்துக்கு மேலே வர்ற கெட்ட நுண்ணுயிரிகள் அதிக வெயில்ல சூடு தாங்காம இறந்து போறதுக்கு பெரிய வாய்ப்பா இருக்கும்.எறும்பு, வண்டுகள் பயிரோட வேரைப் பாதிக்கும். சில பயிர்கள்ல முழுசா சல்லிவேரை கடிச்சு எடுத்திடும். அதுனால, பயிரோட வேர்கள் முக்கால் அடி ஆழத்தைத் தொடும்போது அதைக் கடிச்சு சாப்பிடுற சூழ்நிலையை உருவாக்காம இருக்க, இந்த வண்டுகள், எறும்புகளை வெளியே எடுத்து விடுறது ரொம்ப முக்கியம். அதைக் கோடை உழவு சிறப்பா செய்யும். கிணறு, ஆழ்துளை கிணறுக்கு நீர் உள்ள புகுத்துற மாதிரி அமைப்புல நிலங்கள்ல தண்ணீரை சேமிச்சு, தேக்கி வைக்கக்கூடிய ஒரு அமைப்பு தான் கோடை உழவு. மண்ணுக்கேற்ற கலப்பைஇத்தனை சிறப்பு வாய்ந்த கோடை உழவை அவசியம் எல்லோரும் செய்யணும். நாமளும் உழவு பண்ணிட்டோம்னு பேருக்கு உழவு செய்யக் கூடாது. அதுக்கு சில விஷயங்களைக் கவனத்துல வெச்சுக்கணும். மலையடிவாரம் அல்லது மேட்டுப்பகுதிகள்ல இருக்க செம்மண், செம்மண் சரளை நிலங்கள்ல ஏற்கனவே விவசாயம் நடந்துட்டு இருக்க பகுதிகள்ல ஒன்பது கொத்துக் கலப்பை அல்லது ஐந்து கொத்துக் கலப்பை மூலமா உழுகலாம். அதிகமா விவசாயம் செய்யாத நிலங்கள்ல ஒன்பது கொத்துக் கலப்பையை தவிர்த்துடணும். ஐந்து கொத்துக் கலப்பையை பயன்படுத்தி, மண்ணு இன்னும் இறுகுறதுக்கு முன்னாடி முடிந்தவரை ஆழத்துல மண்ணை பிரட்டி விடுற மாதிரி உழவு செய்யணும். ஏன்னா நிறைய நிலத்துல உழவு கருவி இறங்காது. அந்த அளவு இறுக்கமா இருக்க நிலங்கள்ல சிறிதளவாவது அதாவது நடுவிரல் ஆழத்துக்கு பள்ளம் ஏற்படுத்துற அளவுக்கு உழவு செய்ய வேண்டியது அவசியம். அந்த மாதிரி அமைப்புல உங்க நிலத்தோட சரிவுக்குக் குறுக்கே இருக்குறமாதிரி உழவுசெய்யணும். ஆக, செம்மண், செம்மண் சரளையில ஐந்து கொத்துக் கலப்பை அல்லது வார்ப்பு இறகுக் கலப்பை கொண்டு அகலப்படுத்தலாம்..வார்ப்பு இறகு கலப்பைமணல் காடுகளா இருந்தா ஐந்து கொத்து கலப்பை, வார்ப்பு இறகு கலப்பையில் உழுகுறது ரொம்ப நல்லது. கோடை உழவு கண்டிப்பா அதுலதான் பண்ணனும். அப்படி பண்றதுனால மணல் நிலங்கள்ல அதிக ஆழத்துல இருக்குற மண்ணை புரட்டிப் போட மிகப்பெரிய வாய்ப்பா இருக்கும். முக்கியமா எங்க எல்லாம் ஏற்கனவே வேர் ஓடாம இருக்கோ, பயிரோட வளர்ச்சி சரி இல்லையோ, வேர்ப்புழு தாக்கம் அல்லது நூற்புழு தாக்கம் அதிகமா இருந்ததோ, அழுகல் கிருமிகள் அதிகமா இருந்துச்சோ, அந்தமாதிரி இடங்கள்ல கண்டிப்பா வார்ப்பு இறகு கலப்பையை போட்டு உழுகுறது நல்லது.சட்டி கலப்பைகளிமண் அல்லது களிமண்ணும் மணலும் கலந்த நிலங்கள்ல சட்டி கலப்பை அல்லது வார்ப்பு இறகு கலப்பை வச்சு உழுகணும். சட்டி கலப்பை கிடைக்காத இடங்கள்ல ஐந்து கொத்து கலப்பையும், வார்ப்பு இறகு கலப்பையும் கொண்டு உழுகணும். நிலம் சரிவா இல்லன்னாலும் இந்த வகை நிலங்கள்ல அடுத்த வெள்ளாமைக்கு முன்பு குறைந்தபட்சம் 15 நாட்கள் மண்ணு சூடாகுற மாதிரி கிழக்கு மேற்காக முதல்ல உழுகணும். அடுத்து மழை வரக்கூடிய ஏப்ரல் 15-ம் தேதியிலிருந்து மே 10-ம் தேதி வரையிலுமான காலத்துல சரிவுக்குக் குறுக்க இருக்குற மாதிரி அமைப்புல மண்ணை தோண்டி வைக்குறது நல்லது. ஆடிப்பட்டத்துலதான் அடுத்த பயிர் செய்வோம்ங்குற நிலைமை இருக்கும்போது, பலதானிய பயிர்களோ, பசுந்தாள் உரங்களோ போடமாட்டோம்ங்குற நிலைமை இருக்கும்போது இந்தமாதிரி நாம உழுகுறது நல்லது.வரப்புஒருமுறை உழவு செய்தபிறகு மிகவும் அதிகமான சரிவுள்ள நிலங்கள்ல கிளறிவிடப்பட்ட மண்ணைப் பயன்படுத்தி உயரமான கரைகள் அமைக்கணும். அதை, தமிழ் எழுத்தான 'ப' வடிவத்தில அமைச்சிக்கணும் இல்லைன்னா சுற்றாக உள்ள வரப்பு உயரத்தை குறைந்தபட்சம் நடப்பதற்காக மண்வெட்டியால் சமப்படுத்திய பிறகு, அதன் உயரம் 75 சென்டி மீட்டர் இருக்குமாறு பார்த்துக்கணும். வரப்பு அமைச்ச பிறகு உள்பகுதியை உழவு ஓட்டி விடலாம். இதனால மண் அரிமானம் காக்கப்படும். விளைச்சல் அதிகரிக்க வாய்ப்பு ஏற்படும்.வளமான மண் வரப்புகள்ல போயிடுச்சேன்னு வருத்தப்பட வேண்டாம். அந்த மண்ணுல இருக்குற வளம் மண்ணுக்கு மறுபடியும் கொஞ்சம் கொஞ்சமா கிடைச்சிடும். புதுசா வரப்பு அமைக்க, வரப்பிலிருந்து 6 அடி நீளமுள்ள மண் மட்டுமே பயன்படும். மீதமுள்ள மண் நிலத்தில் பரவி நிலம் சமமாகும். வரப்புகளால் மண்ணின் வளம் பாதுகாக்கப்படும். நிலத்தைச் சமமாக்க வரப்புகள் மட்டுமே எளிமையான வழி,உழவு கருவிகளால நிலத்தை ஆழப்படுத்த முடியலைங்குற மாதிரி ஏதாவது காரணம் சொல்லிட்டு கோடை உழவு செய்யாம இருந்தோம்னா நிலத்துல ஏற்கனவே தேங்கி இருக்குற, விவசாயத்துல மிச்சமான மட்குப்பொருள்கள் நிலத்துல இருந்து அடிச்சுட்டு போயிடும். அடுத்த பயிர் செய்யுறப்போ பூமிக்குள்ள இருக்குற நூற்புழுக்களுக்கு உணவா எந்த மட்குப்பொருளும் கிடைக்காது. அப்படி கிடைக்கலைன்னா, பயிர்களோட வேர்கள் கண்டிப்பா பாதிக்கப்படும். அது எந்த வகை தோப்புகளா இருந்தாலும் இதுதான் சூழ்நிலை. எந்தவிதமான நிலமா இருந்தாலும் முறையான வரப்புகள் இல்லாம மழைத்தண்ணியில நிலத்து மேல இருக்குற தாவரக்கழிவுகள் அடிச்சுட்டு போயிடுச்சுன்னா, நிச்சயமா அடுத்த பயிர் செய்யுறப்போ நூற்புழு பாதிப்பு ஏற்படும். அதனால முறையான வரப்புகள் அமைச்சு, வரப்புகளுக்குள்ள உழுகணும்ங்குறதுதான் முக்கியம்..அரிமானத்தைத் தடுக்கலாம்மலைப்பகுதிகள்ல மாடுகளை வச்சோ, பவர் டில்லர் வச்சோ உழவு செய்யும்போது, வரப்புகள் பக்கத்துல இருக்குற மண்ணை மண்வெட்டியால புரட்டி, வரப்பு அமைச்சுக்கணும். இதுமூலமா மண் அரிமானம் தடுக்கப்படும். அதோட, மண்ணுல இருக்குற மட்குப்பொருள்கள் நகராம பார்த்துக்க முடியும். முடிந்தவரை தண்ணி பூமிக்குள்ள இறங்க வாய்ப்பா இருக்கும். நீர் வெளியேற வச்சுருக்குற ஓட்டைகள்ல கற்களை வச்சு, குறுக்காகத் தடுப்பு அமைக்கணும். நிலத்தோட தளத்தின் உயரத்துல தண்ணி வெளியேறுறதை விட வரப்போட உயரத்துக்கு பாதி உயரத்துல தடுப்பு அமைச்சுக்கணும். அதுமூலமா மண் அரிமானம் மற்றும் மட்குப்பொருள் அரிமானத்தைத் தடுக்கலாம்.உழவன் செயலிதொடர்ந்து பயிர் செய்யுற இடங்கள், முக்கியமா எங்க எல்லாம் களைச்செடிகள் அதிகமா முளைச்சதோ, அந்தமாதிரி இடங்கள்ல உழவு முக்கியம். ஒருவேளை தனியார் 'டிராக்டரால' அதிக ஆழத்துல உழுக முடியலன்னா, பக்கத்துல இருக்குற வேளாண்மை பொறியியல் துறையை நாடலாம். அவங்ககிட்ட சொல்லி 'உழவன் செயலி' மூலமா 'இ-வாடகை' என்ற செயலி மூலமா பதிவு செஞ்சு, வார்ப்பு இறகு கலப்பை மற்றும் ஐந்து கொத்து கலப்பை மூலமா உழவு செய்யலாம். கிணறுகள், ஆழ்துளைக் கிணறுகள் குறைந்தபட்சம் 15 நிமிசம் வரைதான் தண்ணி தருது அப்படிங்குற நிலங்கள் எல்லாத்துலயும் கண்டிப்பா சரிவுக்குக் குறுக்க கோடைமழையை தேக்கி வைக்குற மாதிரி உழவு செய்ய வேண்டியது முக்கியம்.கண்டிப்பா கோடையில நிலத்தை உழுது வைக்கணும். ஏன்னா அடுத்து வரக்கூடிய எதிர்பாராத கோடைமழை குறைந்த இடத்துலகூட அதிக நேரம் பெய்யும். அப்போ அந்தத் தண்ணீர், மண்ணோட அடிப்பகுதிக்கு போறதுக்கு ஒரு வாய்ப்பா இருக்கும்..பெட்டிச் செய்தி சரிவுக்குக் குறுக்காதான் வரி இருக்கணும்எந்தவகை நிலத்துல உழவு செஞ்சாலும், உழவு முடியுறப்போ உழவு செய்த வரி, சரிவுக்குக் குறுக்காதான் இருக்கணும். அதை நேர்ல பார்த்து ஆய்வு செஞ்சுக்கணும். சரிவுக்குக் குறுக்கா இல்லாம சரிவின் வழியா இருந்தா, மழைநீரில் மண் அரிமானம் ஏற்பட்டு விவசாயத்துக்குத் தேவையான பொடிமண் நிலத்தை விட்டு நகர்ந்து வெளியேறிடும். இதனால விளைச்சல் பாதிக்கும். வருமானம் பாதிக்கும். எந்தக் காரியத்துக்காக உழவு செஞ்சோமோ அதன் நோக்கம் கெட்டுடும். அதுனால உழவு செய்யுறப்போ நிலத்துக்குச் சொந்தகாரங்க உழவு முடியுறப்போ சரிவுக்குக் குறுக்கா வரி இருக்குறமாதிரி பார்த்துக்கணும். பெட்டிச் செய்தி மண்துகள்கள் கிடைக்கும்ஏற்கனவே குழி எடுத்து, வரப்பு அமைத்தல் மாதிரியான செயல்பாடுகளை செஞ்சு வச்சிருக்குற விவசாயிகள், ஏற்கனவே பண்ணைக்குட்டை அமைச்சு வச்சிருக்குற விவசாயிகள், கோடைகாலத்துல ஏற்கனவே சேகரமான அல்லது மண்குட்டைகள் அரிமானத்தால சேகரமான மண்ணை வழித்தெடுத்து நிலங்கள்ல போட்டு, பரப்பி விடலாம். இதனால இந்தக் குழிகளோட கொள்ளளவு அதிகரிக்கும். அதோட, நிலத்துக்குத் தேவையான வளமான மண்துகள்களும் கிடைக்கும். - பிரிட்டோ ராஜ்