கால்நடை கழிவுகளில் இருந்து வெளியாகும் மீத்தேன் வாயுவை முறையாக உண்டாக்கி அதனைச் சேமித்து எரிபொருளாகப் பயன்படுத்தலாம் என்று கண்டறியப்பட்ட தொழில்நுட்பம்தான் 'சாண எரிவாயு கலன்'. 1970களில் இந்தத் தொழில்நுட்பத்தைக் கையில் எடுத்த கதர் கிராம கைத்தொழில் துறை இந்தியா எங்கும் பரவலாக்கியது. ஒவ்வொரு பஞ்சாயத்து யூனியன் அலுவலகத்திலும் இதற்கென தனியாக ஒரு அதிகாரி இருந்தார். அரசு மானியம், வங்கி கடனுதவி கிடைத்தது. வாய்ப்பு இருந்த இடமெல்லாம் நிறுவப்பட்டது. விறகு அடுப்பிலிருந்து புகையற்ற சாண எரிவாயு அடுப்பு பெரும் வரவேற்பைப் பெற்றது. தமிழகமெங்கும் கால்நடை வளர்த்த விவசாயிகள் அதன் பயனை அடைந்தனர்.தொய்வடைந்த சாண எரிவாயு1990களில் எரிவாயு உருளை நாடெங்கும் பரவலாக, விலை குறைவாகக் கிடைத்தது. இந்த இடைப்பட்ட 20 ஆண்டுகளில் சாண எரிவாயு தயாரிக்கப் பயன்படுத்திய இரும்பு கலன் துருப்பிடித்து ஓட்டையும் ஆகி இருந்தது. தினசரி சாணம் கொண்டு தொட்டியில் இட்டுக் கலக்கிவிட்ட விவசாயியும் சலிப்பு அடைந்திருந்தார். எரிவாயு உருளை விலை மலிவாக வீட்டு வாசலில் கிடைத்ததும் சாண எரிவாயு கலன் பழைய இரும்புக்கடைக்கு போய்விட்டது. சாண எரிவாயு அமைப்பதில் இருந்த அரசின் திட்டங்களும் தொய்வடைந்துவிட்டது.தற்போது எரிவாயு உருளையின் விலை தினசரி உயர்ந்து கொண்டே போகிறது. எரிவாயு சமையலுக்கு அடிமையாகிப்போன மக்கள் என்ன விலையானாலும் எரிவாயு உருளை தேவை என்ற நிலைக்குத் தள்ளப்பட்டுவிட்டனர். மின்சாதனங்களைப் பயன்படுத்தலாம் என நினைத்தால் மின்கட்டணமும் விண்ணைத் தொடுகிறது. என்னதான் செய்வது என்ற இக்கட்டான சூழ்நிலையில், மீண்டும் சமையல் எரிவாயு, மின் உற்பத்தி என இரண்டு வித பயன்பாட்டிற்கும் எரிவாயு கலன் அமைத்துத்தரும் பணியைச் செய்து வருகிறார் கோயம்புத்தூரைச் சேர்ந்த வின்ட்சன்..எரிவாயு தொழில்நுட்பம்இவர் வீட்டுத்தேவைக்கான சிறிய 'பயோ கேஸ்' கலனிலிருந்து பெரிய பண்ணைகள், தொழிற்சாலைகள் என மிகப்பெரிய பயன்பாடுவரை கலன் அமைத்துத்தரும் வேலையைச் செய்வதுடன் முழுமையாக எரிவாயுவில் இயங்கும் மின்சார ஜெனரேட்டர் வரை அமைத்துத் தருகிறார். தற்போதைய சூழலில் எரிவாயு தொழில்நுட்பத்திற்கு வரவேற்பு இருக்கிறதா என்பது தொடர்பாகப் பேசினோம். அவர் பகிர்ந்துகொண்ட தகவல்கள் இங்கே இடம்பிடிக்கிறது. சூரிய வெளிச்சம் அவசியம் ''இப்போது உள்ள கடுமையான விலை உயர்வால் நிரந்தர, தற்சார்பு, மாற்று சக்தி குறித்த விழிப்புணர்வு அதிகமாயிருக்கிறது. தினசரி நமது இல்லங்களில் மீதமாகும் உணவுப்பொருட்கள், காய்கறி கழிவுகள், பழ கழிவுகள், இறைச்சி வகை கழிவுகளைக் கொண்டே 'பயோ கேஸ்' உருவாக்கலாம். இதனால் எரிவாயு உருளை வாங்கும் பணம் சேமிக்கப்படுகிறது. கழிவுகளை வெளியேற்றி குப்பையில் போடும் வேலைப்பளுவும் இல்லை. எரிவாயு எடுத்தபிறகு வெளிவரும் கழிவுகள் வீட்டுத்தோட்டத்திற்கு மிக நல்ல உரமாக அமைகிறது. இந்தக் கலன்களை வீட்டின் பக்கவாட்டில், மொட்டைமாடியில் வைக்கலாம். ஆனால் எரிவாயு உண்டாக போதுமான வெப்பநிலை தேவை என்பதால் நேரடியாக சூரிய வெளிச்சம் படும் இடத்தில் வைப்பது மிகவும் அவசியம்.எரிவாயு உருளை விலையைக் கணக்கிடும்போது இதற்கு நாம் செய்யும் ஆரம்பகட்ட முதலீட்டை குறைந்தபட்சம் 2 ஆண்டுகளில் எளிதில் திரும்பப் பெற முடியும். எந்தவித துர்நாற்றமும் இல்லாதது. பராமரிப்பு எதுவும் தேவையில்லை. எரிவாயு உருளையில் ஏற்படும் வாயுக்கசிவு விபத்துகளை உண்டாக்கும். ஆனால் இது மிகவும் பாதுகாப்பான வாயு. இந்தத் தொட்டிகள் முக்கால் கன மீட்டர், ஒரு கன மீட்டர், 2 கன மீட்டர் என்ற அளவுகளில் இடம் மாற்றும் வகையிலும், 5 கன மீட்டர் அளவில் தரைக்கு அடியில் அமைக்கும் வகையிலும் கிடைக்கிறது. நாளொன்றிற்கு 3 முதல் 4 மணி நேரம் பயன்படுத்தலாம். இட வசதி, தினசரி கழிவுகள் சேரும் அளவு, குடும்ப உறுப்பினர்களின் எண்ணிக்கை போன்றவற்றின் அடிப்படையில் நமக்குத் தேவையான அளவை முடிவு செய்து கொள்ளலாம்..கண்ணாடி நூலிழை கலன்உணவகங்கள், கல்லூரி, தொழிற்சாலை கேன்டீன்களிலும் சேரும் கழிவுகளைக் கணக்கிட்டு அதற்கு ஏற்ற அளவிலான கலனைத் தேர்வு செய்து கொள்ளலாம். இந்தக் கலன், கண்ணாடி நூலிழைகளில் செய்யப்படுவதால் வெயில், மழையினால் எவ்விதமான பாதிப்பையும் அடையாது. மிக நீண்ட காலத்திற்கு உழைக்கும் உத்திரவாதம் உடையது.மிகச்சிறந்த உரம்குளியல், துவைக்கும், வீடு கழுவும் தண்ணீரையும் இந்தக் கலனில் செலுத்தினால் மற்ற வீட்டுக் கழிவுகளுடன் வேதியியல் வினைபுரிந்து எரிவாயு உண்டாகும். வெளியேறும் தண்ணீர் எவ்வித துர்நாற்றமுமின்றி இருக்கும். அதனை நாம் வீட்டுத்தோட்டத்திற்கு பயன்படுத்திக் கொள்ளலாம். மனதளவில் ஒத்துக்கொள்ளும் எண்ணம் இருந்தால் கழிவறை 'செப்டிக் டேங்க்' அமைப்பதற்குப் பதிலாக இதுபோல கலன் அமைத்து எரிவாயு உண்டாக்கலாம். வெளியேறும் கழிவுகள் எவ்வித மணமும் இன்றி மிகச்சிறந்த உரமாக இருக்கும். இதனை சமையலறையில் பயன்படுத்தத் தயங்கினால் குளியல் அறையில் சுடுநீர் காய்ச்ச பயன்படுத்தலாம்.ஆடு, மாடு, கோழிகளைப் பெரிய அளவில் வளர்க்கும் பண்ணையாளர்களுக்கு வரும் மின் கட்டணம் மிகப் பெரிய அதிர்ச்சியையே கொடுக்கும். தீவனம் வெட்டும் கருவி, தீவனம் நறுக்கும் கருவி, தீவனம் அரைக்கும் இயந்திரம், பால் கறக்கும் இயந்திரம், தொழுவம் சுத்தம் செய்யும் கருவி, தானியங்கி தீவனம் நிரப்பும் இயந்திரம், மின் விசிறிகள், குளிர் விசிறிகள், விளக்குகள் என பலவகையில் மின் தேவைகள் பெரிய அளவில் இருக்கும்..அத்துடன் மின் தடையினால் அவ்வப்போது ஜெனரேட்டர் இயக்குவதால் டீசல் செலவும் சேருகிறது. ஆக, மின் கட்டணத்தைத் தவிர்த்தலும், குறைத்தலுமே பண்ணையின் பெரிய வருவாயாக மாறிவிடும். அதற்கு வழிவகை செய்கிறது எரிவாயு தொழில்நுட்பம்.பண்ணையில் கிடைக்கும் கழிவுப்பொருட்களின் அளவு, நமது தேவை இரண்டையும் கணக்கிட்டு 15 கன மீட்டர், 25 கன மீட்டர், 85 கன மீட்டர், 100 கன மீட்டர், 150 கன மீட்டர், 500 கன மீட்டர் என பல்வேறு அளவுகளில் அசையும் பொருட்கள், துருப்பிடிக்கும் பொருட்கள் இல்லாத எரிவாயு கலன்களைத் தரைக்குக் கீழ் அமைக்கலாம்..ஜெனரேட்டர் இயக்கலாம்இதில் உண்டாகும் எரிவாயுவைப் பயன்படுத்தி நேரடியாக ஜெனரேட்டரை இயக்கலாம்.உண்டாகும் எரிவாயுவில் ஜெனரேட்டரின் ஆயுளைக் குறைக்கக்கூடிய 'ஹைட்ரஜன் சல்பேட்', 'கார்பன் டை ஆக்ஸைடு', தண்ணீர், ஈரப்பதம் மேலும் சில வேதிப்பொருட்கள் உள்ளன. ஆகவே இந்த வாயுவை 'ஸ்க்ரப்பர்' எனும் வடிவமைப்பின் வழியே செலுத்தும்போது அதில் உள்ள உறிஞ்சும் பொருட்கள் தேவையற்ற பொருட்களை எடுத்துவிட்டு நல்ல எரிவாயுவை மட்டும் வெளியேற்றுகிறது. இந்த உலர் 'ஸ்க்ரப்பரில்' தேவைப்படும்போது உறிஞ்சும் பொருட்களை மட்டும் மாட்ட வேண்டும். இந்த வாயுவை டீசல் ஜெனரேட்டரில் டீசலுக்கு பதில் உட்செலுத்தினால், குறைந்த சப்தம், குறைந்த புகையில் ஜெனரேட்டர் இயங்கும்.மரபுசாரா எரிசக்தி, மாற்று எரிசக்தி வகைகளில் எப்போதும் முதலிடத்தில் இருந்த எரிவாயு வகைகளின் பயன் இடையில் சற்றே தொய்ந்து காணப்பட்டது. அதன் சிறப்புகளை உணர்ந்து இப்போது அதன் பயன்பாடு அதிகரித்துக் கொண்டே போகிறது. ஒருமுறை முதலீடு... பல ஆண்டுகால பயன்பாடு என்பது மக்களுக்கு நிச்சயம் ஏற்புடையதே. தொடர்புக்கு : வின்ட்சன் : 90427 01701.பெட்டிச் செய்திசெய்ய வேண்டியவைநம்மிடம் உள்ள கால்நடைகளின் எண்ணிக்கை, இதர கழிவுகளின் தினசரி அளவு இதனைக் கணக்கிட்டு அதற்கு ஏற்ப 'கனமீட்டர்' அளவினை தேர்வு செய்ய வேண்டும். கால்நடை தொழுவம், எரிவாயு பயன்படுத்தும் இடம் இரண்டும் எரிவாயு கலனுக்கு அருகாமையில் இருக்க வேண்டும்.தேவையான சூரிய ஒளி வருடம் முழுதும் நேரடியாக படும் இடத்தில் எரிவாயு கலன் அமைக்க வேண்டும்.எரிவாயு கலனை 10-12 நாட்களுக்கு ஒருமுறை தண்ணீர் தெளித்துப் பதப்படுத்துதல் அவசியம்.எரிவாயு கலனின் வெளிப்புற சுவர் மண்ணுடன் இடைவெளி இன்றி இருக்கமாக்கிவிட வேண்டும்.4 பங்கு சாணம், 5 பங்கு தண்ணீர் என்ற விகிதத்தில் இருக்க வேண்டும்.மண், தூசி, மட்காத குப்பைகள், மீதமான தீவனப்புல் போன்றவை இல்லாத கலவையைத்தான் உட்செலுத்த வேண்டும்.வெளியேறும் எரிவாயு பைப்பில் உள்ள 'கேட் வால்வு' மூடிவைக்க வேண்டும். பயன்படுத்தும்போது மட்டும் திறக்கலாம்.டிரம் டைப் எரிவாயு கலனின் மிதக்கும் டிரம்மை ஒரு நாளைக்கு ஒன்றிரண்டு முறை சுழற்றினால் இடைவெளியில் உள்ள சாணக்கலவை காய்ந்து கெட்டி சேராமல் இருக்கும்.தினசரி உற்பத்தியாகும் எரிவாயுவை செலவு செய்தால் மட்டுமே புதிய எரிவாயு உற்பத்தியாகும்.தரமான அடுப்பு, நல்ல வெப்பத்தை உண்டாக்கி சமையலை விரைவாக முடிக்க உதவும்.எரிவாயு வரும் குழாயில் சேகரமாகும் தண்ணீரை 4 முதல் 5 நாட்களுக்கு ஒருமுறை வெளியேற்ற வேண்டும்.மிதக்கும் எரிவாயு கலனைத் துரு ஏறிவிடாமல் தண்ணீரைப் பீய்ச்சி அடித்துக் கழுவ வேண்டும்.சிலரி வெளியேறும் குழாயை முறையாகப் பராமரித்து, வெளியேறும் 'சிலரி'யை அதற்கான குழிகளில் சேகரிக்க வேண்டும்.இரும்பினால் செய்யப்பட்ட கலன் எனில் ஆண்டுக்கு ஒருமுறை கருப்பு நிற பெயிண்ட் அடிக்க வேண்டும். அப்போதுதான் கலன் துரு பிடிக்காது. கருப்பு நிறம் வெப்பத்தைச் சேகரிக்கும் என்பதால் எரிவாயு உற்பத்தி அதிகரிக்கும்..பெட்டிச் செய்திசெய்யக்கூடாதவைசாணம், கழிவு இவைகளின் தினசரி வரத்தைக் கணக்கிடாமல் பெரிய அளவில் அமைத்தால் வாயு உற்பத்தியில் இடர் ஏற்படும்.சிபாரிசு செய்யப்பட்டதைவிட அதிக தொலைவில் அமைத்தால் குழாய் செலவு அதிகரிக்கும், அழுத்தமும் குறையும்.குறிப்பிட்ட காலம் சிமெண்ட் கட்டுமானத்திற்குத் தண்ணீர் ஊற்றாமல் பயன்படுத்தினால் கட்டுமானத்தில் வெடிப்பு, கீறல் உண்டாகி எரிவாயு உற்பத்தியாகிறது.வெளிப்புற மண் இறுக்கப்படாமல் விட்டாலும் கட்டுமானம் வெடிக்க வாய்ப்புள்ளது.சாணம், தண்ணீர் விகிதத்தை மாற்றினால் எரிவாயு உற்பத்தி பாதிக்கும்.எரிவாயு கலனில் இடைச்சுவருக்கு இருபுறமும் ஒரே அளவில் இருக்க வேண்டும். இல்லையெனில் இடைச்சுவர் உடையலாம்.மணல், மண், மட்காத கழிவுகளை உட்செலுத்தினால் குழாயில் நிறைந்து பிரச்சனை உண்டாக்கும்.கலனில் உள்ள குழாய்களில் நேரடியாக, பரிசோதனை செய்வதற்குக் கூட நெருப்பு வைக்கக் கூடாது.திறந்த வெளியில் அடுப்பை வைத்து சமைத்தால் தேவையான வெப்ப சுவாலை கிடைக்காது.அடுப்பு எரியாதபோது வால்வை இறுக்கமாக மூட வேண்டும்.மஞ்சள் நிற சுவாலையில் சமைக்கக் கூடாது. நீலநிற சுவாலை வருமாறு எரிவாயு உட்செல்லும் அளவை அதிகரிக்க வேண்டும்.சிலரி குழி 3 அடிக்கு மேல் ஆழமாக வைக்க வேண்டாம்.வெளியேறும் பைப்பில் சிலரி காய்ந்து இருக்கக் கூடாது.கலன் துருப்பிடித்து ஓட்டையானால் எரிவாயு கசியும். ஆதலால் முறையான பராமரிப்பு அவசியம்.- ஊரோடி வீரக்குமார்