திருத்தணிக்கு அருகில் இருக்கும் மத்தூர் மகிஷாசுரமர்த்தினி கோயில் அருகில் இருக்கிறது கொத்தூர் கிராமம். அந்த ஊரில் 'டிராகன்' வெங்கடபதி என்றால் சின்னக்குழந்தை கூட வழி சொல்கிறது. அந்த அளவுக்கு அந்தப் பகுதியில் வெங்கடபதியை பிரபலப்படுத்தி இருக்கிறது அவர் சாகுபடி செய்யும் 'டிராகன் ஃப்ரூட்'.இயற்கை விவசாயியான வெங்கடபதி பல்வேறு பசுமை விருதுகளைப் பெற்றிருக்கிறார். இவரது இயற்கை விவசாயம் மற்றும் தோட்டத்தைப் பற்றி கேள்விப்பட்டு ஆச்சரியப்பட்ட திருவள்ளூர் மாவட்ட ஆட்சியர் ஆல்பி ஜான் வர்கீஸ், இவரது தோட்டத்திற்கு நேரில் வந்து பார்த்து பரவசப்பட்டிருக்கிறார். அவரையும், அவரது விவசாய முறைகளையும் மண்வாசனை வாசகர்களுக்கு அறிமுகப்படுத்துவதற்காக நேரில் சென்றோம். மகிழ்ச்சியோடு வரவேற்றவர் மடை திறந்த வெள்ளம் போல பேசத் தொடங்கினார்.."நெல், கரும்பு, வேர்க்கடலை இப்படி ஏதாவதொரு பயிரைதான் வழக்கமா விளைவிப்பாங்க. நானும் அப்படிதான். கரும்பு பயிரை விரும்பி சாகுபடி பண்ணேன். ஒரு ஏக்கர்ல கிடைக்குற வழக்கமான மகசூலை விட அதிகளவு கரும்பை அறுவடை பண்ணேன். அதுபோக மஞ்சள், இஞ்சி பயிர்களையும் சாகுபடி செஞ்சேன். அதோட சுலபமா விளையாத சில உயர்ரக செடிகளையும் நடவு பண்ணேன். நான் இயற்கை முறையிலதான் சாகுபடி செய்யுறேன். அதுதான் எனக்கு பேரையும், புகழையும் வாங்கிக் கொடுத்துருக்கு..தற்சார்பு வேளாண்மைமிளகு, ஏலக்காய், புளி, வெள்ளை நாவல், 300 கிராம் நாவல் பழம், 'சீட்லெஸ்' நாவல், ஸ்டார் ஃப்ரூட், அவகோடா, முள் சீத்தா, லிச்சி, செர்ரி பயிர்கள் என் தோட்டத்துல இருக்குது. மா, கொய்யா, சப்போட்டா மாதிரியான பழவகைகளையும், எல்லாவிதமான காய்கறிகளையும் பயிர் செய்றேன். அதுபோக 500 சந்தன மரங்கள் வளர்க்குறோம். வீட்டு உபயோகத்திற்குத் தேவையான 99 சதவிகித உணவுப்பொருட்களை எங்க தோட்டத்துலயே விளைவிக்கிறோம். உப்பு மட்டும் தான் கடையில வாங்குறோம்''என்றவர், நம்மை தோட்டத்திற்குள் அழைத்துச் சென்றார். பழுத்த தேங்காய்கள் தொப்…தொப்…என அவ்வப்போது கீழே விழுந்து கொண்டேயிருந்தன..''தேங்காய், எள்ளு, நிலக்கடலை மாதிரியான எண்ணெய் வித்துக்களையும் இங்கயே சாகுபடி செய்றோம். அவற்றை செக்குல ஆட்டி தேங்காய் எண்ணெய், கடலை எண்ணெய், நல்லெண்ணெய் எடுப்போம். எங்க தேவை போக மீதி எண்ணெய்யை விற்பனை செய்துடுறோம்.இயற்கை இடுபொருட்கள் தயார் செய்றதுக்காக மாடுகள் வளர்க்குறோம். அதுகளோட கழிவு மூலமா மண்புழு உரம், இயற்கை உரம் தயாரிக்குறோம். மாட்டு சாணத்தை அப்படியே மட்க வெச்சும் உரமா பயன்படுத்துறோம். பூச்சி தாக்குதலைச் சமாளிக்க, மூலிகை பூச்சிவிரட்டி தயார் பண்ணி பயன்படுத்துறோம். அதுனால எங்க தோட்டத்தில பெரும்பாலும் பூச்சிகள் அண்டுறதில்லை'' என்றவர் 'டிராகன் ஃப்ருட்' சாகுபடிக்கு மாறிய கதையைப் பகிர்ந்து கொண்டார்.. 'டிராகன் ஃப்ருட்' சாகுபடி''நான் மிகப்பெரும் கரும்பு விவசாயி. கரும்பு உற்பத்தியில பல சாதனைகளை செஞ்சு பல விருதுகள் வாங்கியிருக்கிறேன். உள்ளபடியே இனிப்பான கரும்பு, அதை பயிர் செய்யும் விவசாயிகளோட வாழ்க்கையில கசக்கத்தான் செய்யுது. ஆலைகளின் கொள்முதல் விலை ரொம்ப குறைவு. பயிர் செய்யுற செலவும், வெட்டு கூலியும் எங்கேயோ போயிடுச்சு. கரும்பை எவ்வளவு அதிகமாக பயிர் செய்கிறோமோ, அவ்வளவுக்கு அவ்வளவு நஷ்டம் தான். இத்தனை கஷ்டப்பட்டு ஏன் கரும்பை சாகுபடி செய்யணும்னு யோசிச்சேன். அதோட விளைவுதான் 'டிராகன் ஃப்ருட்' சாகுபடி. முதல்ல ஒரு ஏக்கர்ல வெச்சு பார்த்தேன். இந்த மண்ணில் எப்படி வருமோன்னு நினைச்சேன். நான் எதிர்பார்த்ததை விட அமோக விளைச்சல் கிடைச்சது'' என்றவர் 'டிராகன் ஃப்ரூட்' சாகுபடி பற்றிப் பேசினார்..10 அடி இடைவெளி''நான் முதன் முதல்ல ஆந்திராவில் இருந்து செடிகள் வாங்கிட்டு வந்தேன். டிராகன் செடி வளர்ப்பு முறையில மிக முக்கியம் கல்தூண் நடவு தான். 8 அடி இடைவெளியில் 7 அடி உயரத்தில் வரிசையா கல் நட வேண்டும். 2 அடி பூமியிலும், 5 அடி மேலேயும் இருக்க வேண்டும். அதை கருங்கல் தூண்களாகவோ, கம்பி வைத்துக் கட்டிய சிமெண்ட் தூண்களாகவோ இருக்கலாம். அதற்கடுத்த வரிசை 10 அடி இடைவெளியில் இருக்க வேண்டும். அந்த வழியில் களைகளை எடுக்க 'டிராக்டர்' உள்ளே போய் வர வேண்டும். ஒவ்வொரு தூணிலும் ஒரு பக்கத்திற்கு ஒரு செடி வீதம் நான்கு பக்கத்திலும் நான்கு செடிகளை நடவு செய்ய வேண்டும்..பக்க கிளைகள் கவாத்து அவசியம்இது செங்குத்தாக வளர வேண்டும். அப்படி வளர, வளர பக்கவாட்டில் கிளைகள் வளரும். அதை வளர விடக் கூடாது. பக்க கிளைகளை அங்கேயே வெட்டிவிட வேண்டும். நமக்கு உயரம் தான் முக்கியம். 5 அடி உயரத்திற்குச் செடி வரும்பொழுது கம்பத்தின் உச்சியில் கார் டயர்களுக்கு குறுக்கே சட்டம் வைத்து செஞ்சிலுவை மாதிரி பொறுத்தப்பட்டிருக்க வேண்டும். அதன் ஒவ்வொரு இடைவெளியிலும் ஒரு செடியை விட்டு வளர்க்க வேண்டும். அதாவது விரித்த குடையைப் போல் அந்தச்செடி மேலே அகன்று விரிந்து வளர வேண்டும். நாம் ஆரம்பத்தில் பக்கவாட்டில் வந்த கிளைகளை வெட்டியது போல, செடி உச்சிக்கு வந்தபிறகு கிளைகளை வெட்டக் கூடாது. கிளைகள் எவ்வளவு வருகிறதோ அவ்வளவும் பலன். அதன் பிறகு ஒவ்வொரு கணுவிலும் ஒரு பூ விடும். எத்தனை கணுக்கள் உள்ளதோ அத்தனை பூக்கள் பூக்கும். ஒவ்வொரு பூவும் ஒரு டிராகன் பழமாகும். சராசரியாக 5 பழம், ஒரு கிலோ எடை வரும். நன்கு விளைந்தால் மூன்றே பழம் கூட ஒரு கிலோ எடை வரும்'' என்றவர் வருமானம் பற்றிய தகவலைப் பகிர்ந்து கொண்டார்..ஆண்டுக்காண்டு அதிகரிக்கும் மகசூல்''இதை ஒரு முறை நடவு செஞ்சா போதும். இது செடி வகையைச் சார்ந்ததாக இருந்தாலும் அதிகபட்சம் 30 வருஷம் வரைக்கும் பலன் கொடுத்துகிட்டே இருக்கும். ஒரு செடியோட தற்போதைய விலை 60 ரூபாய். ஒரு ஏக்கருக்கு 2,000 செடிகள் தேவை. 4 செடிகளுக்கு ஒரு கல்தூண் வீதம் 500 கல்தூண்களை நடணும். உச்சியில டயர்களை பொறுத்தணும். அதிக அளவு தண்ணீர் தேவையில்ல. சொட்டுநீர்ப் பாசனம் போதும். நமக்கு செலவுன்னு பார்த்தா முதல் தடவை நடவு செய்யுற செலவு மட்டும் தான். பிறகு, எந்தச் செலவும் இல்ல. குறிப்பிட்ட இடைவெளியில களை மட்டும் எடுக்கணும். இயற்கை உரங்களே போதுமானது..முதல் வருஷம் குறைவாகவும், ரெண்டாவது வருஷம் 2 டன், மூணாவது வருஷம் 3 டன் விளையும். அடுத்தடுத்த வருஷங்கள்ல இன்னும் அதிக மக்சூல் கிடைக்கும். ஒரு ஏக்கர்ல இருந்து 4 முதல் 5 டன் வரைக்கும் கிடைக்கும். மண்ணின் தன்மை, நீர் வளம், தட்பவெப்பத்தைப் பொறுத்து மகசூல்ல கொஞ்சம் வித்தியாசம் வரலாம். மார்ச் மாசம் பூ விடும். மே மாசம் துவங்கி நவம்பர் வரைக்கும் பழம் கொடுக்கும். வருஷத்துக்கு 7 மாதம் பலன் கொடுத்துகிட்டே இருக்கும். ஒரு கிலோ 120 ரூபாயில் இருந்து, 'டிமாண்ட்' பொறுத்து கூடுதல் விலையில விற்கலாம். 4-ம் வருஷத்துல இருந்து வருஷத்துக்கு 4 டன் மகசூல் கிடைக்கும். சராசரி விலை கிலோ 100 ரூபாய்னு வெச்சுகிட்டாலும் 4,00,000 ரூபாய் வருமானம் கிடைக்கும். அதுல செலவு 1,00,000 ரூபாய் போனாலும் 3,00,000 ரூபாய் லாபமாகக் கிடைக்கும்'' என்றபடி விடைகொடுத்தார்.- அன்புவேலாயுதம் தொடர்புக்கு : வெங்கடபதி : 93829 61000