Warning: Cannot modify header information - headers already sent by (output started at D:\WebSpace\kumudam.com\www\conn.php:21) in D:\WebSpace\kumudam.com\www\auth.php on line 37
Kumudam.com, Kumudam Jothidam - ராசி பலன்கள்

Email
Password:
Remember Me  
Forgot Password   New Registration
About us | Register | Plan Details |Font Help| Feedback| Ad Tariff | Faq | Site Map|RSSimageRss  
News Headline
Kumudam Welcomes U
          Magazine
Kumudam Jothidam
தலையங்கம்
சிறப்புக் கட்டுரை
கேள்வி பதில்
ராசி பலன்கள்
அல்லூரில் ஓர் ஆனந்த வைபவம்!
 
 30.12.11    ராசி பலன்கள்

25.12.2011 முதல் 31.12.2011 வரை
(அசுவினி, பரணி, கிருத்திகை முதல் பாதம் வரை)
குடும்பம் : ஷென்ம ராசியில் குரு; குடும்ப ஸ்தானத்தில் கேது; பூர்வ புண்ணிய ஸ்தானத்தில் செவ்வாய்; சப்தம ஸ்தானத்தில்  சனி; அஷ்டம ஸ்தானத்தில் புதன், ராகு; பாக்கிய ஸ்தானத்தில் சூரியன், சந்திரன்; ஜீவன ஸ்தானத்தில் சுக்கிரன்.  குடும்பப்  பொறுப்புகள் அதிகரிக்கும். உத்தியோகம் காரணமாக கணவர் அல்லது மனைவிக்கு இடமாற்றம், அதனால் இருவரும்  பிரிந்திருத்தல் ஏற்படலாம். இந்த ராசி அன்பர்களின் திருமண முயற்சிகளில் தடங்கல்களும், தாமதமும் ஏற்படும். இதற்கு  செலவுகளும் அதிகரிக்கக்கூடும். வம்பு, வழக்குகளை எதிர்கொள்ள நேரிடும்.

உத்தியோகம் : அலுவலகப் பணிகளில் கூடுதல் கவனம் தேவை. பொறுப்பும், உழைப்பும் அதிகரிக்கும். அலுவல
கத்தில் சிரமங்கள் அதிகரிக்கும். இதனால் மனத்தளர்ச்சியும், உடற்சோர்வும் ஏற்படும்.

தொழில் : தொழில் நிமித்தமாக வெளியூர் பயணங்கள் செல்ல வேண்டிவரும். அரசாங்க அதிகாரிகளால் தொழிலுக்குத்  தொல்லை ஏற்படும். எனினும் உற்பத்தியும், வருமானமும் சீராக இருக்கும்.

வியாபாரம் : போட்டியாளர்களின் தொல்லைகள் அதிகரிக்கும். கொடுக்கல்-வாங்கல் பிரச்சினை தரக்கூடும். விற்பனையும், வ ருமானமும் சுமாராக இருக்கும்.

கலைத்துறையினர் : இதுவரை உங்களுக்குக்
கிடைத்துவந்த நல்ல வாய்ப்புகள் இனி குறையக்கூடும்.
புகழ் சரியக்கூடும். எனவே பொருளாதாரப் பிரச்சினையும் ஏற்படக்கூடும்.

அரசியல்துறையினர் : கட்சித் தலைமையின் ஆதரவு குறையும். தொண்டர்கள் மற்றும் தொகுதி மக்கள் ஆகியோரை  அனுசரித்து நடந்துகொள்ளுங்கள். வருமானம் குறையக்கூடும்.

மாணவமணிகள் : நல்ல புத்திசாலி மாணவரான உங்களுக்குப் படிப்பில் கவனக் குறைவு ஏற்படக்கூடும். எனவே படிப்பில்  அதிக கவனம் தேவை.

விவசாயத்துறையினர் : வயல் பணிகளில் உழைப்பு கடுமையாக இருக்கும். என்றாலும் பாடுபட்டதற்கேற்ற பலன் இராது.  வருமானம் சற்று குறையக்கூடும்.

பெண்மணிகள் : வருமானம் சீராக இருக்கும். செலவுகள் அதிகரிக்கும். வேலைக்குச் சென்றுவரும் பெண்மணிகளுக்கு  மற்றவர்களிடமிருந்து விலகியிருத்தலும், பொறுமையும் தேவை.

அறிவுரை : தேவையற்ற செலவுகளைக் குறைத்துக்கொள்ளுங்கள். கணவன்-மனைவி அனுசரித்து நடந்துகொள்ளுங்கள்.

பரிகாரம் : கீழ்க்கண்ட பாடலைத் தினமும் காலை, மாலை இரு வேளைகளும் 16 முறை பாராயணம் செய்து வாருங்கள்.
வைத்தேன் மதியாலென துள்ளத் தகத்தே,
எய்த்தேயொழிவேனல்லேனென்றும் எப்போதும்,
மொய்த்தேய் திரைமோது தண்பாற்கடலுளால்
பைத்தேய் சுடர்ப்பாம் பணை நம் பரனையே.   - திருவாய்மொழி
அனுகூல தினங்கள் : டிச : 25, 26, 27, 31
பிரதிகூல தினங்கள் : டிச : 28, 29, 30
அதிர்ஷ்ட எண்கள் : 1, 4


(கிருத்திகை 2-ம் பாதம் முதல், ரோகிணி,
மிருகசீரிஷம் 2-ம் பாதம் வரை)

குடும்பம் : ஷென்ம ராசியில் கேது; சுக ஸ்தானத்தில் செவ்வாய்; ருண ஸ்தானத்தில் சனி; சப்தம ஸ்தானத்தில் புதன், ராகு;  அஷ்டம ஸ்தானத்தில் சூரியன், சந்திரன்; பாக்கிய ஸ்தானத்தில் சுக்கிரன்; விரய ஸ்தானத்தில் குரு. உங்கள் ராசிக்கு ஆறாம்  இடமாகிய துலாம் ராசிக்கு சனிபகவான் மாறுகிறார். மேஜத்தில் உள்ள குருவின் பார்வையும் சனிக்குக் கிடைக்கிறது.  கணவன்-மனைவியரிடையே நிலவிய பிணக்குகள் நீங்கி, ஒற்றுமை ஓங்கும். சிலருக்குச் சொந்த வீடு அமையும் பாக்கியம்  ஏற்படும். பொருளாதார நிலை உயரும். எனவே பழைய கடன்களை அடைத்து நிம்மதி காணுங்கள். உடன்பிறந் தவர்களுடனான உறவுமுறை சுமுகமாகும். வீட்டில் சுபகாரியங்கள் நடைபெறும்.
உத்தியோகம் : அலுவலகத்தில் இனி சிறந்த முன்னேற்றத்தை எதிர்பார்க்கலாம். சிலருக்குப் பதவி உயர்வும், ஊதிய உயர் வும் கிடைக்கும். உத்தியோக உயர்வுடன் இடமாற்றமும் ஏற்படும்.
தொழில் : தொழிலில் கூட்டாளிகளுடன் ஏற்பட்ட மனவேறுபாடுகள் நீங்கும். இந்தக் காலகட்டத்தில் புதிய முதலீடுகளில்  புதிய தொழில்கள் தொடங்கலாம். உற்பத்தி உயரும். வருமானம் நன்கு உயரும்.
வியாபாரம் : போட்டிகள் குறையும். விற்பனை உயரும். லாபம் பெருகும். கொடுக்கல்-வாங்கல் சீராகும்.
கலைத்துறையினர் : இதுவரை வாய்ப்புகள் கிடைப்பதில் சிக்கல்கள் ஏற்பட்டிருக்கும். ஆனால், அந்த வாய்ப்புகள் உங்களைத்  தேடிவரும். சிலருக்குப் புதிய வாகன யோகம் ஏற்படும். வருமானம் உயரும்.
அரசியல்துறையினர் : கட்சித் தலைமையிடம் செல்வாக்கு ஓங்கும். தொண்டர்கள் மற்றும் மக்களிடையே செல்வாக்கு உய ரும். வருமானம் திருப்திகரமாக இருக்கும்.
மாணவமணிகள் : மாணவ, மாணவியருக்கு நல்ல காலகட்டம். கிரகிப்புத்திறனும், அறிவாற்றலும் அதிகரிக்கும். பாடங்களில்  நல்ல ஆர்வம் ஏற்படும்.
விவசாயத்துறையினர் : விளைச்சல் அதிகரிக்கும். வருமானம் பெருகும். இந்த வாரம் மண், மனை ஆதாயம் தரும்.
பெண்மணிகள் : நன்மைகள் அதிகரிக்கும். பொருளாதார நிலையில் நல்ல முன்னேற்றம் ஏற்படும். வேலைக்குச் சென்றுவ ரும் பெண்மணிகளுக்குப் பதவி உயர்வும், ஊதிய உயர்வும் கிடைக்கும்.
அறிவுரை : வருமானம் நல்லபடி இருந்தாலும் செலவுகள் அதிகரிக்கும். எனவே தேவையற்ற செலவுகளைக் குறைத் துக்கொள்ளுங்கள்.
பரிகாரம் : கீழ்க்கண்ட பாடலைத் தினமும் காலை, மாலை இரு வேளைகளிலும் 16 முறை பாராயணம் செய்து வாருங்கள்.
வாங்கினார் மதில் மேற்கணை வெள்ளந்
தாங்கினார் தலையாய தன்மையர்
நீங்கு நீரநெல் வாயிலார் தொழ
ஓங்கினாரெம துச்சியாரே.      - திருஞானசம்பந்தர்
அனுகூல தினங்கள் : டிச : 27, 28, 29, 31
பிரதிகூல தினங்கள் : டிச : 25, 26, 30
அதிர்ஷ்ட எண்கள் : 5, 6

(மிருகசீரிஷம் 3-ம் பாதம் முதல், திருவாதிரை, புனர்பூசம் 3-ம் பாதம் வரை)

குடும்பம் : தைரிய ஸ்தானத்தில் செவ்வாய்; பூர்வ புண்ணிய ஸ்தானத்தில் சனி; ருண ஸ்தானத்தில் புதன், ராகு; சப்தம  ஸ்தானத்தில் சூரியன், சந்திரன்; அஷ்டம ஸ்தானத்தில் சுக்கிரன்; லாப ஸ்தானத்தில் குரு; விரய ஸ்தானத்தில் கேது. இது வரை ஏற்பட்டு இருந்த பிரச்சினைகள் நல்ல முடிவுக்கு வரும். உற்றார், உறவினர் உறவு சுமுகமாகும். பிள்ளைகள் படிப்பு  மற்றும் ஆரோக்கியத்தில் சிறந்து விளங்குவார்கள். குடும்ப வருமானம் அதிகரிக்கும். எனவே பழைய கடன்கள் அடைப டும். பிள்ளை, பெண் இவர்களின் திருமண முயற்சிகளில் இதுவரை ஏற்பட்ட தடங்கல்கள் விலகி, வரன் நிச்சயமாகும்.  சொத்துப் பிரச்சினைகள் தீரும்.
உத்தியோகம் : பணியிடத்தில் ஏற்பட்ட சிரமங்கள் நீங்கும். அலுவலகத்தில் பதவி உயர்வும், ஊதிய உயர்வும் கிடைக்கும்.  வருமானம் உயரும்.
தொழில் : சிறு பிரச்சினைகள் இருந்துவரும். என்றாலும் தொழில் அபிவிருத்தி தடைபடாது. தொழிலில் பங்குதாரர்களுடன்  சுமுக உறவு ஏற்படும். உற்பத்தியும், வருமானமும் உயரும்.
வியாபாரம் : விற்பனையும், லாபமும் மேம்படும். புதிய முதலீடுகளில் புதிய வியாபாரத் துறைகளைத் தொடங்கலாம்.
கலைத்துறையினர் : கலைஞர்களுக்கு ஆதாயம் தரும் வாரமிது. நடிக, நடிகையர் அதிக ஆதாயம் அடைவார்கள். பெய ரும், புகழும் ஓங்கும். பணவரவு அதிகரிக்கும்.
அரசியல்துறையினர் : கட்சித் தலைமையின் ஆதரவு பெருகும். தொண்டர்களிடம் மதிப்பு உயரும். வருமானம் சீராக இ ருக்கும்.
மாணவமணிகள் : மனதில் நிறைந்திருந்த குழப்பங்கள் நீங்கி மனம் தெளிவடையும். படிப்பில் நாட்டம் அதிகரிக்கும்.
விவசாயத்துறையினர் : விளைச்சல் பெருகும். வருமான மும் அதிகரிக்கும். இந்த வாரம் பூமி, நிலம், வீடு இவற்றால்  ஆதாயங்களை எதிர்பார்க்கலாம்.
பெண்மணிகள் : குடும்பத்தில் நிலவிய சிரமங்கள் தீரும். வருவாய் பெருகும். கடன்கள் அடைபடும். மனம் நிம்மதி பெறும்.  வேலைக்குச் சென்றுவரும் பெண்மணிகளுக்கு வேலைகள் அதிகமாக இருக்கும். என்றாலும் உழைப்பிற்கேற்ப வருமானமும்  உயரும்.
அறிவுரை : ஆரோக்கியத்தில் அக்கறை கொள்ளுங்கள். வேண்டாத செலவுகளைத் தவிர்க்கவும்.
பரிகாரம் : கீழ்க்கண்ட பாடலைத் தினமும் காலை, மாலை இரு வேளைகளிலும் 16 முறை பாராயணம் செய்து வரவும்.
சடைமுடி முனிவர்கள் சமைவொடும் வழிபட
நட நவில் புரிவினன் நறவணி மலரோடு
படல் சடை மதியினன் மயேந்திரப் பள்ளியுள்
அடல்விடை யுடையவ னடி பணிந்துய்ம்மினே
- திருஞானசம்பந்தர்
அனுகூல தினங்கள் : டிச : 25, 29, 30
பிரதிகூல தினங்கள் : டிச : 26, 27, 28, 31
அதிர்ஷ்ட எண்கள் : 2, 9

(புனர்பூசம் 4-ம் பாதம் முதல், பூசம், ஆயில்யம் வரை)

குடும்பம் : குடும்ப ஸ்தானத்தில் செவ்வாய்; சுக ஸ்தானத்தில் சனி; பூர்வ புண்ணிய ஸ்தானத்தில் புதன், ராகு; ருண  ஸ்தானத்தில் சூரியன், சந்திரன்; சப்தம ஸ்தானத்தில் சுக்கிரன்; ஜீவன ஸ்தானத்தில் குரு; லாப ஸ்தானத்தில் கேது. சுக  ஸ்தானத்து சனி நன்மையைத் தராது. உங்கள் ஆரோக்கியத்தில்  கவனம் தேவை. சிறு சிறு உடல் உபாதைகள்  ஏற்படக்கூடும். மருத்துவச் செலவுகளும் ஏற்படலாம். அருகில் உள்ளவர்களுடன் பொறுமை, நிதானத்துடன் பேசி அனுசரி த்து நடந்துகொள்ளுங்கள். செலவுகள் இரட்டிப்பாகலாம். குடும்பத்தில் கணவன்-மனைவியரிடையே மனவேறுபாடுகள் தோன் றும். வேலையில் உள்ளவர்களுக்கு மாற்றங்கள் ஏற்படலாம். வம்பு, வழக்குகளைச் சந்திக்க நேரிடும்.
உத்தியோகம் : அலுவலகப் பணிகளும், பொறுப்புகளும் அதிகமாகவும், கடுமையாகவும் இருக்கும். உடன் உழைப்பவர்கள்  மேலதிகாரிகளுடன் அனுசரித்து நடந்துகொள்ளுங்கள்.
தொழில் : தொழில் சீராக நடக்கும். வருமானமும் நல்லபடி நீடிக்கும். பொருளாதாரப் பிரச்சினை, வங்கிகளால் தொல்லைகள்  போன்ற பிரச்சினைகள் ஏற்படலாம்.
வியாபாரம் : விற்பனையும், லாபமும் நல்லபடி நடந்து
வரும். கொடுக்கல்-வாங்கல் சிரமம் தரும்.
கலைத்துறையினர் : உங்களுக்கு வரவேண்டிய
புதுப்பட வாய்ப்புகள் தள்ளிப்போகலாம். வருமானம் குறையக்கூடும். ஆடம்பரச் செலவுகளால் தடுமாற்றம் ஏற்படலாம்.
அரசியல்துறையினர் : பிரச்சினைகளை எதிர்கொள்ள நேரிடும். நீங்கள் எதிர்பார்க்கும் அரசாங்க உதவிகள் கிடைக்காது.  கட்சியிலும் பிரச்சினைகள் ஏற்படும்.
மாணவமணிகள் : படிப்பில் மனம் செல்லாது. மற்றவர் விஜயங்களில் உங்கள் பொன்னான நேரத்தை வீணடிக்காமல்  பாடங்களில் முழுகவனம் செலுத்தவும்.
விவசாயத்துறையினர் : பயிர்கள் செழிக்கும். வருமானம் உயரும். என்றாலும் பாடுபட்டு உழைக்க வேண்டிவரும்.
பெண்மணிகள் : குடும்பத்தில் ஏற்படும் குழப்பங்கள் உங்களை கவலையில் ஆழ்த்தும். உத்தியோகம் பார்க்கும் பெண் மணிகளுக்குப் பணியில் கூடுதல் கவனம் தேவை.
அறிவுரை : உடல்நலனில் கவனம் தேவை.
பரிகாரம் : கீழ்க்கண்ட பாடலைத் தினமும் காலை, மாலை இரு வேளைகளிலும் 16 முறை பாராயணம் செய்து வாருங்கள்.
அறிந்தன வேத அரும்பொருள் நூல்கள்,
அறிந்தன கொள்க அரும்பொருள் ஆதல்,
அறிந்தனர் எல்லாம் அரியை வணங்கி,
அறிந்தனர் நோய்கள் அறுக்கும் மருந்தே.
        - திருவாய்மொழி
அனுகூல தினங்கள் : டிச : 25, 26, 27, 31
பிரதிகூல தினங்கள் : டிச : 28, 29, 30
அதிர்ஷ்ட எண்கள் : 6, 7

(மகம், பூரம், உத்திரம் முதல் பாதம் வரை)
குடும்பம் : ஷென்ம ராசியில் செவ்வாய்; தைரிய ஸ்தானத்தில் சனி; சுக ஸ்தானத்தில் புதன், ராகு; பூர்வ புண்ணிய ஸ்தான த்தில் சூரியன், சந்திரன்; ருண ஸ்தானத்தில் சுக்கிரன்; பாக்கிய ஸ்தானத்தில் குரு; ஜீவன ஸ்தானத்தில் கேது. சனி ராசி  மாறுதலால் சிறந்த நற்பலன்களை எதிர்பார்க்கலாம். குடும்பத்தில் நிலவிய குழப்பங்கள் தீரும். பிள்ளைகள் கல்வி மற்றும்  ஆரோக்கியத்தில் சிறந்து விளங்குவார்கள். குடும்பத்திற்கு பெருமை சேர்ப்பார்கள். பூமி, நிலம், வீடு வாங்கும் யோகமும்  சிலருக்கு ஏற்படும். வம்பு, வழக்குகள் நல்ல முடிவுக்கு வரும். உற்றார், உறவினருடன் இருந்த கருத்து வேறுபாடுகள் நீங்கி  உறவுமுறை சுமுகமாகும். வேலை மற்றும் தொழிலில் நல்ல முன்னேற்றத்தையும், வருமானப் பெருக்கத்தையும் காணலாம்.  பிள்ளை, பெண் திருமண முயற்சிகளில் ஏற்பட்ட தடைகள் விலகி வரன் நிச்சயமாகும். தெய்வீக காரியங்களில் நாட்டம்  அதிகரிக்கும்.
உத்தியோகம் : வேலையில் உள்ளவர்களுக்கு அலுவலகத்தில் இருந்துவந்த பிரச்சினைகள் நீங்கும். எதிர்பார்க்கும் பதவி  உயர்வும், ஊதிய உயர்வும் கிடைக்கும்.
தொழில் : தொழிலில் கூட்டாளிகளுடனான பிரச்சினைகள் யாவும் தீரும். தொழிலில் கவனம் அதிகரிக்கும். தொழிலுக்குப்  பொருளுதவிகள் கிடைக்கும். உற்பத்தி உயரும். வருமானம் உயரும்.
வியாபாரம் : விற்பனையும், லாபமும் அதிகரிக்கும். வரவேண்டிய பணம் வசூலாகும். கொடுக்கல்-வாங்கல் சீராகும்.
கலைத்துறையினர் : கலைஞர்களுக்குச் சிறந்த வாரம். நடிக, நடிகையர், இயக்குநர்கள் அதிக ஆதாயம் பெறுவார்கள். புது ப்பட வாய்ப்புகள் தேடிவரும். வருமானமும், வசதிகளும் அதிகரிக்கும்.
அரசியல்துறையினர் : கட்சியில் பிரச்சினைகள் நீங்கும். உங்கள் நிலை உயரப் பெறுவீர்கள். முக்கியமான பதவியும்  உங்களைத் தேடிவரும். வருமானம் உயரும்.
மாணவமணிகள் : படிப்பில் நல்ல ஆர்வம் ஏற்படும். தேர்வுகளில் நல்ல மதிப்பெண்களைப் பெறுவீர்கள்.
விவசாயத்துறையினர் : இதுவரை நீங்கள் பட்ட கஷ்டங்கள் யாவும் பனிபோல் நீங்கும். பயிர்கள் செழிக்கும். வருமானம்  உயரும்.
பெண்மணிகள் : குடும்பத்தில் நிலவிய துன்பங்கள் யாவும் நீங்கும். மனம் நிம்மதி பெறும். வேலைக்குச் சென்றுவரும் பெ ண்மணிகளுக்குப் பதவி உயர்வும், ஊதிய உயர்வும் கிடைக்கும்.
அறிவுரை : செலவுகள் தொடர்ந்து அதிகமாக இருக்கும். சிக்கன நடவடிக்கை தேவை.
பரிகாரம் : கீழ்க்கண்ட பாடலைத் தினமும் காலை, மாலை இரு வேளைகளிலும் 16 முறை பாராயணம் செய்து வாருங்கள்.
அவனே அகல் ஞாலம் படைத்திடந்தான்,
அவனே யஃ துண்டுமிழ்ந்தான் அளந்தான்,
அவனே யவனும் அவனும் அவனும்,
அவனே மற்றெல்லாமும் அறிந்தனமே.       - திருவாய்மொழி
அனுகூல தினங்கள் : டிச : 25, 26, 27, 30
பிரதிகூல தினங்கள் : டிச : 28, 29, 31
அதிர்ஷ்ட எண்கள் : 4, 7


(உத்திரம் 2-ம் பாதம் முதல் அஸ்தம், சித்திரை 2-ம் பாதம் வரை)
குடும்பம் : குடும்ப ஸ்தானத்தில் சனி; தைரிய ஸ்தானத்தில் புதன், ராகு; சுக ஸ்தானத்தில் சூரியன், சந்திரன்; பூர்வ புண்ணிய  ஸ்தானத்தில் சுக்கிரன்; அஷ்டம ஸ்தானத்தில் குரு; பாக்கிய ஸ்தானத்தில் கேது; விரய ஸ்தானத்தில் செவ்வாய். குடும்பத்தில்  இதுவரை இருந்துவந்த பிரச்சினைகள் அகலும். பொருளாதார நிலை உயரும். உற்றார், உறவினரோடு இருந்த பிணக்குகள்  நீங்கி உறவுமுறை சுமுகமாகும். வருமானம் அதிகரிக்கும். என்றாலும் செலவுகள் இரட்டிப்பாகவே இருந்துவரும். நீதிமன்ற த்தில் நிலுவையில் உள்ள வழக்குகளில் நல்ல போக்கு தென்படுகிறது. பூமி, நிலம், வீடு, வாகனம் இவற்றால் ஏற்பட்ட  செலவுகள் குறையும்.
உத்தியோகம் : பணியிடத்தில் சிரமங்கள் நீங்கி, நிலைமை மேம்படும். சிலருக்கு வேலை மாற்றம் ஏற்படலாம். இதனால் ந ன்மையே உண்டாகும்.
தொழில் : தொழிலில் அவ்வப்போது பிரச்சினைகள் தோன்றக்கூடும். என்றாலும் தொழிலில் வளர்ச்சி அதிகரிக்கும். உற்பத்தி  மேம்படும். பணவரவு அதிகரிக்கும்.
வியாபாரம் : விற்பனை உயரும். லாபம் அதிகரிக்கும். கொடுக்கல்-வாங்கல் சீராகும்.
கலைத்துறையினர் : சிரமங்கள் விலகும். இதுவரை இருந்த சிக்கல்கள் நீங்கி, புதுப்பட வாய்ப்புகள் உங்களைத் தேடிவரும்.  வருமானமும், வசதிகளும் அதிகரிக்கும்.
அரசியல்துறையினர் : கட்சியில் உங்களது நிலைமை மேம்படும். கட்சித் தலைமையுடன் நெருக்கம் ஏற்படும்.
பெயரும், புகழும் அதிகரிக்கும். வருமானமும் அதிகரிக்கும்.
மாணவமணிகள் : உங்கள் மனதில் நிரம்பியிருந்த சஞ்சலங்கள் யாவும் நல்லபடி தீரும். அறிவாற்றல் அதிகரிக்கும். இனி  படிப்பில் நல்ல ஈடுபாடு ஏற்படும்.
விவசாயத்துறையினர் : உங்களை வருத்திவந்த
சிரமங்கள் படிப்படியாக விலகும். பயிர்கள் செழிக்கும். வருமானம் உயரும். மண், மனை ஆதாயமளிக்கும்.
பெண்மணிகள் : உங்கள் உடலை வருத்திய உபாதைகள் தணியும். இதனால் மனம் நிம்மதி பெறும். வருமானம் சீராக இ ருக்கும். என்றபோதிலும் செலவுகள் குறையாது. வேலைக்குச் சென்றுவரும் பெண்மணிகளுக்குச் சிரமங்கள் குறைந்து நன் மைகள் அதிகரிக்கும்.
அறிவுரை : பொருளாதார விஷயத்தில் எச்சரிக்கை தேவை. ஆடம்பரச் செலவுகள் வேண்டாம். பணம், பொருட்கள் களவு  போகலாம். கூடுதல் கவனம் தேவை.
பரிகாரம் : கீழ்க்கண்ட பாடலைத் தினமும் காலை, மாலை இரு வேளைகளிலும் 16 முறை பாராயணம் செய்து வாருங்கள்.
மறையினானொலி மல்குவினையன்,
நிறையினார் நிமிர் புன்சடையனெம்
பொறையினானுறை யும்புகலியை
நிறையினாற்றொழ நேசமாகுமே.         - திருஞானசம்பந்தர்
அனுகூல தினங்கள் : டிச : 25, 26, 27
பிரதிகூல தினங்கள் : டிச : 28, 29, 30, 31
அதிர்ஷ்ட எண்கள் : 1, 5


(சித்திரை 3-ம் பாதம் முதல் சுவாதி, விசாகம் 3-ம் பாதம் வரை)

குடும்பம் : ஷென்ம ராசியில் சனி; குடும்ப ஸ்தானத்தில் புதன், ராகு; தைரிய ஸ்தானத்தில் சூரியன், சந்திரன்; சுக ஸ்தானத் தில் சுக்கிரன்; சப்தம ஸ்தானத்தில் குரு; அஷ்டம ஸ்தானத்தில் கேது; லாப ஸ்தானத்தில் செவ்வாய். ஷென்ம ராசியில் சனி  சஞ்சரிப்பது நன்மையைத் தராது. என்றாலும் சனிக்கு குருவின் சுபப்பார்வை ஏற்படுவதால் தீய பலன்கள் குறையும். உடல்  உபாதைகளால் சிரமப்பட நேரிடும். மருத்துவச் செலவுகளும் ஏற்படலாம். உங்களது முயற்சிகள் நிறைவேற பாடுபட வேண் டியிருக்கும். குடும்பத்தில் கணவன்-மனைவி ஒற்றுமை குறையக்கூடும். அருகில் உள்ளவர்களுடன் அனுசரித்து நடந்து கொள்ளுங்கள். உற்றார், உறவினர் உங்கள் குடும்ப விஜயங்களில் தலையிடுவதால் தொல்லைகளும், குழப்பங்களும்  ஏற்படக்கூடும்.
உத்தியோகம் : வேலைகளும், பொறுப்புகளும் கூடுதலாகவும், கஷ்டமாகவும் இருக்கும். வேலையில் குளறுபடிகள்  ஏற்படக்கூடும். எனவே எச்சரிக்கை தேவை. நிர்வாகத்தினரின் அதிருப்திக்கு ஆளாகலாம்.
தொழில் : தொழில் கூட்டாளிகளுடன் கருத்து வேறுபாடுகளும், அதனால் பிரிவும் ஏற்படலாம். பொருளாதார விஜயங்களில்  அதிக கவனம் செலுத்துவது அவசியம். உற்பத்தியும், வருமானமும் சீராக இருக்கும்.
வியாபாரம் : வியாபாரமும், லாபமும் நல்லபடி இருக்கும். அரசு அதிகாரிகளால் பிரச்சினை உண்டாகலாம். கொடுக்கல்- வாங்கல் சிரமம் தரும்.
கலைத்துறையினர் : நீங்கள் மிகுந்த ஆவலுடன் எதிர்பார்த்துக் காத்திருந்த வாய்ப்புகள் வராமல் போகலாம். எனவே வரு மானம் சற்றுக் குறையலாம்.
அரசியல்துறையினர் : கட்சியினர், மக்களின் அதிருப்திக்கும் கோபத்திற்கும் ஆளாகக்கூடும். எனவே எச்சரிக்கை தேவை.
மாணவமணிகள் : பாடுபட்டு உழைத்து படிக்க வேண்டிவரும். பொன்னான நேரத்தை வீணடிக்காதீர்கள். படிப்பில் அதிக  கவனம் செலுத்துங்கள்.
விவசாயத்துறையினர் : பயிர்கள் செழிக்கும். வருமானம் சீராக இருக்கும். என்றாலும் பிரச்சினைகள் இருந்துவரும்.
பெண்மணிகள் : குடும்ப வருமானம் சீராகவே இருக்கும். இருந்தபோதிலும் செலவுகள் இரட்டிப்பாகவே இருக்கும்.
எனவே குடும்ப நிர்வாகம் கடினமாகும். வேலைக்குச் செல்லும் பெண்மணிகளுக்குப் பொறுமை தேவை.
அறிவுரை : கணக்கிட்டுச் செலவழியுங்கள். ஆடம்பரப் செலவுகளைத் தவிர்க்கவும். உடல்நலனில் கவனம் தேவை.
பரிகாரம் : கீழ்க்கண்ட பாடலைத் தினமும் காலை, மாலை இரு வேளைகளிலும் 16 முறை பாராயணம் செய்து வாருங்கள்.
இறையுறு வரிவளை யிசைகள் பாடிட
அறையுறு கழலடி யார்க்க ஆடுவர்
சிறையுறு விரிபுனல் சென்னியின் மிசைக்
குறையுறு மதியினர் கொள்ளிக்காடரே.    - திருஞானசம்பந்தர்
அனுகூல தினங்கள் : டிச : 25, 26, 27, 31
பிரதிகூல தினங்கள் : டிச : 28, 29, 30
அதிர்ஷ்ட எண்கள் : 2, 4


(விசாகம் 4-ம் பாதம் முதல் அனுஷம், கேட்டை வரை)
குடும்பம் : ஷென்ம ராசியில் புதன், ராகு; குடும்ப ஸ்தானத்தில் சூரியன், சந்திரன்; தைரிய ஸ்தானத்தில் சுக்கிரன்; ருண  ஸ்தானத்தில் குரு; சப்தம ஸ்தானத்தில் கேது; ஜீவன ஸ்தானத்தில் செவ்வாய்; விரய ஸ்தானத்தில் சனி. செலவுகளை  அதிகரிக்கும். குடும்பப் பொறுப்புகள் அதிகரிக்கும். அருகில் உள்ளவர்களை அனுசரித்து நடந்துகொள்ளுங்கள். பிள்ளை  அல்லது பெண் திருமண முயற்சிகள் கைகூடும். சுபச் செலவுகளும் ஏற்படலாம். உற்றார், உறவுமுறை சுமுகமாக இராது.  உடல்நலனில் கவனம் கொள்ள வேண்டியது அவசியம்.
உத்தியோகம் : பணியிடத்தில் வேலை பளுவும், பொறுப்புகளும் கூடலாம். வேலை மாற்றம் அல்லது நிறுவன மாற்றமும்  சிலருக்கு ஏற்படக்கூடும். சக ஊழியர்களினால் தொல்லைகள் ஏற்படக்கூடும்.
தொழில் : தொழிலில் பிரச்சினைகள் ஏற்படக்கூடும். தொழிலிலும் மந்தநிலை ஏற்படலாம். உற்பத்தியும், வருமானமும் சற்று  பாதிக்கப்பட சாத்தியக்கூறு உள்ளது.
வியாபாரம் : விற்பனை மந்தமாக இருக்கும். லாபம் குறையக்கூடும். புதிய முதலீடுகளில் புதிய தொழில்களைத் தொடங்கு வதைத் தள்ளிப் போடலாம். கொடுக்கல்-வாங்கல் சிரமம் தரும்.
கலைத்துறையினர் : நீங்கள் மிகுந்த ஆவலுடன் எதிர்பார்த்துக் காத்திருந்த புதுப்பட வாய்ப்புகள் தள்ளிப் போகலாம். வரு மானம் சற்று குறையக்கூடும். சிலருக்கு வீண் பழியும் ஏற்படக்கூடும்.
அரசியல்துறையினர் : கட்சித் தலைவருடன் மோதல் போக்கும், அதனால் உங்கள் நிலைமைக்கு பாதிப்பும் ஏற்படும்.
மாணவமணிகள் : மாணவ, மாணவியருக்குச் சிறந்த கல்வி முன்னேற்றமிருக்கும். பாடங்களில் நல்ல ஈடுபாடு ஏற்படும்.
விவசாயத்துறையினர் : செலவுகள் அதிகரிக்கும். வேலைச்சுமையும் கூடுதலாகும். பணம், பொருட்கள் திருடு போகக்கூடும்.  என்றாலும் வருமானம் திருப்தி தரும்.
பெண்மணிகள் : மனதில் நிம்மதியிராது. குடும்பச் செலவுகள் கூடுவதே இதற்குக் காரணம். உடல்நலனும் பாதிக்கப்படும்.  அலுவலகத்தில் பொறுமை தேவை.
அறிவுரை : உடல்நலனில் கவனம் தேவை. வேண்டாத செலவுகளைத் தவிர்க்கவும்.
பரிகாரம் : கீழ்க்கண்ட பாடலைத் தினமும் காலை, மாலை இரு வேளைகளிலும் 16 முறை பாராயணம் செய்து வாருங்கள்.
அத்தகு வானவர்க் காக மால்விடம்
வைத்தவர் மணிபுரை கண்டத் தின்னுளே
மத்தமும் வன்னியுமலிந்த சென்னிமேல்
கொத்தலர் கொன்றையர் கொள்ளிக்காடரே.  - திருஞானசம்பந்தர்
அனுகூல தினங்கள் : டிச : 28, 29, 30, 31
பிரதிகூல தினங்கள் : டிச : 25, 26, 27
அதிர்ஷ்ட எண்கள் : 3, 9


(மூலம், பூராடம், உத்திராடம் 1-ம் பாதம் வரை)

குடும்பம் : ஷென்ம ராசியில் சூரியன், சந்திரன்; குடும்ப ஸ்தானத்தில் சுக்கிரன்; பூர்வ புண்ணிய ஸ்தானத்தில் குரு; ருண  ஸ்தானத்தில் கேது; பாக்கிய ஸ்தானத்தில் செவ்வாய்; லாப ஸ்தானத்தில் சனி; விரய ஸ்தானத்தில் புதன், ராகு. உடல்நலனில்  ஏற்பட்ட உபாதைகள் நீங்கி, உடல்நலம் பெறும். இதனால் மனநிம்மதி பெறுவீர்கள். பிள்ளைகள் கல்வி மற்றும்  ஆரோக்கியத்தில் சிறந்து விளங்குவார்கள். உடன்பிறந்தவர்கள் ஒத்துழைப்பார்கள். உற்றார், உறவினர்களுடனான உறவு முறை சுமுகமாக இருக்கும். பூர்வீகச் சொத்துகள், வம்பு, வழக்குகள் நல்லபடி உங்களுக்குச் சாதகமாக முடிவடையும். வ ருமானம் அதிகரிக்கும். பழைய கடன்கள் அடைபடும்.
உத்தியோகம் : அலுவலகத்தில் உங்களுக்குப் பதவி உயர்வும், ஊதிய உயர்வும் கிடைக்கும். வேலைக்கு முயற்சி  செய்பவர்களுக்கு நல்ல வேலை கிடைக்கும். உடன் உழைப்பவர்களும், மேலதிகாரிகளும் உதவிக்கு வருவார்கள்.
தொழில் : தொழிலில் நல்ல அபிவிருத்தியைக் காணமுடியும். கூட்டாளிகளால் சில தொந்தரவுகள் எழக்கூடும். எனினும்  தொழில் முன்னேறும். வருமானம் அதிகரிக்கும்.
வியாபாரம் : வியாபாரம் விறுவிறுப்பாக நடக்கும். லாபம் உயரும். கொடுக்கல்-வாங்கல் சீராகும்.
கலைத்துறையினர் : முக்கியக் கிரகங்கள் உங்களுக்குச் சாதகமாகச் சஞ்சரிக்கின்றன. புதுப்பட வாய்ப்புகள் உங்களைத்  தேடிவரும். வருவாய் அதிகரிக்கும்.
அரசியல்துறையினர் : கட்சித் தலைவரிடம் செல்வாக்கு ஓங்கும். மக்களிடமும், தொண்டர்கள் மத்தியிலும் மதிப்பும்,  மரியாதையும் உயரும். வருமானம் சீராக இருக்கும்.
மாணவமணிகள் : மாணவ, மாணவியருக்கு நல்ல வாரம். அறிவுத்திறனும், கிரகிப்புச் சக்தியும் பெருகும். படிப்பில் நல்ல  ஆர்வம் ஏற்படும்.
விவசாயத்துறையினர் : பயிர்கள் செழிக்கும். பணவரவு அதிகரிக்கும். இந்த வாரம் பூமி, நிலம், வீடு ஆகியவை ஆதாயம்  தரும்.
பெண்மணிகள் : குடும்ப வருமானம் அதிகரிக்கும். எனவே செலவுகளைப் பற்றிக் கவலைப்படத் தேவையில்லை. உத் தியோகம் பார்க்கும் பெண்மணிகளுக்கு அலுவலகத்தில் பல சலுகைகள் கிடைக்கும்.
அறிவுரை : பொருளாதார நிலைமை நன்கிருப்பதால் பழைய கடன்களை அடைத்து நிம்மதி காணுங்கள்.
பரிகாரம் : தடங்கல்கள் நீங்கி, சகல காரியங்களும் நிறைவேற  கீழ்க்கண்ட பாடலை 16 முறை பாராயணம் செய்து வாரு ங்கள்.
அறிந்தறிந்து வாமனன
டியிணைவ ணங்கினால்,
செறிந்தெழுந்த ஞானமோடு
செல்வமும் சிறந்திடும்,
மறிந்தெழுந்த தெண்டிரையுள்
மன்னுமாலை வாழ்த்தினால்,
பறிந்தெழுந்து தீவினைகள்
பற்றறுதல் பான்மையே.                    - திருச்சந்தவிருத்தம்.
அனுகூல தினங்கள் : டிச : 25, 26, 27, 31
பிரதிகூல தினங்கள் : டிச : 28, 29, 30
அதிர்ஷ்ட எண்கள் : 3, 5


(உத்திராடம் 2-ம் பாதம் முதல், திருவோணம், அவிட்டம் 2-ம் பாதம் வரை)
குடும்பம் : ஷென்ம ராசியில் சுக்கிரன்; சுக ஸ்தானத்தில் குரு; பூர்வ புண்ணிய ஸ்தானத்தில் கேது; அஷ்டம ஸ்தானத்தில்  செவ்வாய்; ஜீவன ஸ்தானத்தில் சனி; லாப ஸ்தானத்தில் புதன், ராகு; விரய ஸ்தானத்தில் சூரியன், சந்திரன். செலவுகள் இந்த  வாரமும் அதிகரித்தே காணப்படும். ஜீவன ஸ்தானத்தில் சனி சஞ்சரிக்கிறார். அவர் உங்கள் ராசிநாதனாக விளங்குவதால்  உங்களைப் பொறுத்தவரை நல்லவரே. வேலை அல்லது தொழிலில் மாற்றங்களை எதிர்கொள்ள வேண்டியிருக்கும். பல  பிரச்சினைகளும் ஏற்படலாம். எனவே பொறுமையும், நிதான
மும் மிகவும் அவசியம். எதிரிகள் தொல்லை தருவர். உடல்நலனில் கவனம் செலுத்த வேண்டியிருக்கும். தாயின் உடல் நலனில் கவனம் தேவை. குடும்பத்தில் சுபச்செலவுகள் ஏற்படலாம். திடீர் செலவுகளும் ஏற்படக்கூடும்.
உத்தியோகம் : வேலையில் உள்ளவர்களுக்குப் பணியிடத்தில் இந்த வாரமும் ஏதாவது சிரமங்கள் தோன்றக்கூடும். நிர்வாக த்தினர், உயரதிகாரிகளின் அதிருப்திக்கும், கோபத்திற்கும் ஆளாகக்கூடும்.
தொழில் : தொழில்துறையினருக்கும் தொல்லைகள் ஏற்படக்கூடும். அவ்வப்போது பிரச்சினைகள் ஏற்படும். ஆயினும்  தொழில் வளர்ச்சி பாதிக்கப்படாது. உற்பத்தியும், வருமானமும் உயரும்.
வியாபாரம் : விற்பனையிலும் மந்தநிலை காணப்படும். லாபம் சற்று குறையலாம். கொடுக்கல்-வாங்கல் சிரமம் தரும்.
கலைத்துறையினர் : உங்களுக்கு வரவேண்டிய வாய்ப்புகள் இப்போது பல சிக்கல்கள் ஏற்பட்டு தள்ளிப்போகலாம். வரு மானம் சற்று குறையலாம்.
அரசியல்துறையினர் : அரசியல்வாதிகளுக்கும் பிரச்சினைகள் எழும். கட்சியில் செல்வாக்கு சரியக்கூடும்.
மாணவமணிகள் : மனதில் இதுவரை நிலவிவந்த சஞ்சலங்கள் நீங்கும். பாடங்களில் மனம் ஆர்வத்துடன் ஈடுபடும்.
விவசாயத்துறையினர் : தொழிலில் பின்னடைவு ஏற்படும். பயிர்கள் பாதிக்கப்படலாம். வருமானம் குறையும்.
பெண்மணிகள் : வருமானம் நல்லபடி நீடிக்கும். என்றாலும் செலவுகள் வரவை மிஞ்சக்கூடும். வேலைக்குச் சென்றுவரும்  பெண்மணிகளுக்கு அலுவலகத்தில் பிரச்சினைகள் எழலாம்.
அறிவுரை : உடல்நலனில் கவனம் தேவை. தேவையற்ற செலவுகளைத் தவிர்த்துவிடுங்கள்.
பரிகாரம் : கீழ்க்கண்ட பாடலைத் தினமும் காலை, மாலை இரு வேளைகளிலும் 16 முறை பாராயணம் செய்து வரவும்.
ஊரிலேன் காணியில்லை
உறவு மற்றொருவரில்லை,
பாரில் நின் பாத மூலம்
பற்றிலேன் பரம மூர்த்தி
காரொளி வண்ணனே!(என்)
கண்ணனே! கதறுகின்றேன்,
ஆருளர் களைகணம்மா!
அரங்கமா நகருளானே!                       - திருமாலை
அனுகூல தினங்கள் : டிச : 25, 26, 27
பிரதிகூல தினங்கள் : டிச : 28, 29, 30, 31
அதிர்ஷ்ட எண்கள் : 6, 9


(அவிட்டம் 3-ம் பாதம் முதல், சதயம், பூரட்டாதி 3-ம் பாதம் வரை)
குடும்பம் : தைரிய ஸ்தானத்தில் குரு; சுக ஸ்தானத்தில் கேது; சப்தம ஸ்தானத்தில் செவ்வாய்; பாக்கிய ஸ்தானத்தில் சனி;  ஜீவன ஸ்தானத்தில் புதன், ராகு; லாப ஸ்தானத்தில் சூரியன், சந்திரன்; விரய ஸ்தானத்தில் சுக்கிரன். துலாம் ராசியில் சனி.  உங்கள் அஷ்டம ஸ்தானத்திலிருந்து சனி விலகுகிறது. அவ்வாறு விலகும்போது நன்மைகளையே செய்வார். இதுவரை  வேலை இல்லாதவர்களுக்கு நல்ல வேலை கிடைக்கும். உங்கள் விருப்பங்களும், தேவைகளும் நிறைவேறும். அரசியல் வாதிகளுக்குப் புதிய பதவிகள் கிடைக்கும். சிலருக்குப் புது வீடு கட்டும் யோகமும் ஏற்படும்.
உத்தியோகம் : இதுவரை பணியிடத்தில் ஏற்பட்டு வந்த பிரச்சினைகள் தீரும். உயரதிகாரிகளும், சக பணியாளர்களும்  உதவிக்கு வருவார்கள்.
தொழில் : தொழில்துறையினருக்குத் தொழிலில் இதுவரை நிலவிவந்த சிரமங்கள் படிப்படியாகக் குறையும். தொழில் மேம்ப டும். பணவரவு அதிகரிக்கும்.
வியாபாரம் : போட்டி வியாபாரிகள் அளித்துவந்த தொல்லைகள் குறையும். விற்பனை அதிகரிக்கும். லாபம் உயரும்.  கொடுக்கல்-வாங்கல் சீராகும்.
கலைத்துறையினர் : நடிக, நடிகையர், இயக்குநர்கள் நன்மை அடைவார்கள். புதுப்பட வாய்ப்புகள் உங்களைத் தேடிவரும்.  வருமானமும், வசதிகளும் அதிகரிக்கும்.
அரசியல்துறையினர் : கிரகநிலைகள் உங்களுக்குச் சாதகமாக உள்ளன. கட்சித் தலைமையிடம் செல்வாக்கு ஓங்கும். பெய ரும், புகழும் ஓங்கும். வருமானம் உயரும்.
மாணவமணிகள் : உங்கள் மனதில் நிலவிய சஞ்சலங்கள் யாவும் தீரும். அறிவுத்திறனும், ஞாபக சக்தியும் அதிகரிக்கும்.  படிப்பில் நாட்டம் அதிகரிக்கும்.
விவசாயத்துறையினர் : தொழிலில் மேம்பாடு காணப்படும். பயிர்கள் செழிக்கும். வருமானம் உயரும்.
பெண்மணிகள் : வருமானம் நல்லபடி நீடிக்கும். என்றாலும் செலவுகள் இந்த வாரமும் அதிகரித்தே காணப்படுகின்றன.  வேலைக்குச் சென்றுவரும் பெண்மணிகளுக்கு முன்னேற்றம் ஏற்படும்.
அறிவுரை : தந்தையின் உடல்நலனில் கவனத்தேவை. செலவுகளைக் குறைத்துக்கொள்ளுங்கள்.
பரிகாரம் : கீழ்க்கண்ட பாடலைத் தினமும் காலை, மாலை இரு வேளைகளிலும் 16 முறை பாராயணம் செய்துவாருங்கள்.
மனத்திலோர் தூய்மை யில்லை
வாயிலோரின் சொலில்லை,
சினத்தினால் செற்றம் நோக்கித்
தீவிளி விளிவன் வாளா,
புனத்துழாய் மாலையானே!
பொன்னி சூழ் திருவரங்கா,
எனக்கினி கதியென் சொல்லாய்
என்னையா ளுடைய கோவே.                - திருமாலை.
அனுகூல தினங்கள் : டிச : 25, 26, 27
பிரதிகூல தினங்கள் : டிச : 28, 29, 30, 31
அதிர்ஷ்ட எண்கள் : 1, 7


(பூரட்டாதி 4-ம் பாதம் முதல், உத்திரட்டாதி, ரேவதி வரை)
குடும்பம் : குடும்ப ஸ்தானத்தில் குரு; தைரிய ஸ்தானத்தில் கேது; ருண ஸ்தானத்தில் செவ்வாய்; அஷ்டம ஸ்தானத்தில்  சனி; பாக்கிய ஸ்தானத்தில் புதன், ராகு; ஜீவன ஸ்தானத்தில் சூரியன், சந்திரன்; லாப ஸ்தானத்தில் சுக்கிரன். உடல்நலன் சிறு  உபாதைகளால் பாதிக்கப்படக்கூடும். எனவே மருத்துவச் செலவுகளும் ஏற்படக்கூடும். பிள்ளைகளின் உடல்நலனும், கல் விக்காகவும் செலவுகள் அதிகரிக்கும். குடும்பத்தில் குழப்
பங்கள் நேராமலிருக்க ஒருவரையொருவர் அனுசரித்து நடந்துகொள்ளுங்கள். வீட்டிற்குத் தேவைப்படும் ஆடம்பரப் பொரு ட்கள், குடும்பத்தினர் தேவையைப் பூர்த்தி செய்யவும் அதிக பணம் விரயமாகலாம். தொழிலில் உங்கள் கூட்டாளிகளுடன்  பிரச்சினைகள் ஏற்படக்கூடும்.
உத்தியோகம் : வேலையில் உள்ளவர்களுக்கு அலுவலகத்தில் சிரமங்கள் ஏற்படும். உங்களது வேலைகளில் குளறுபடிகள்  ஏற்படலாம். எனவே அதிக கவனம் தேவை.
தொழில் : தொழிலில் பிரச்சினைகள் ஏற்படலாம். தொழில் கூட்டாளிகளால் பிரச்சினைகள் ஏற்படும். எனினும் தொழில்  மேம்படும். வருமானம் உயரும்.
வியாபாரம் : போட்டிகளால் தொல்லை அதிகரிக்கும். விற்பனையில் பின்னடைவு ஏற்படும். எனவே லாபம் பாதிக்கப்படும்.
கலைத்துறையினர் : கலைஞர்கள் பொறுமை காக்கவேண்டும். உங்களுக்கு வரவேண்டிய வாய்ப்புகள் கிடைப்பதில்  காலதாமதம் ஏற்படலாம். வருமானம் பாதிக்கப்படும்.
அரசியல்துறையினர் : கட்சியில் நிலவிவரும் பிரச்சினைகள் உங்களையும் பாதிக்கும். எனவே பேச்சில் நிதானம் வேண்டும்.
மாணவமணிகள் : உங்கள் பொன்னான நேரத்தைச் சரியானபடி பயன்படுத்திக் கொள்ளுங்கள். பாடங்களில் அதிக கவனம்  செலுத்துங்கள்.
விவசாயத்துறையினர் : பயிர்கள் செழிக்கும். வருமானம் சிறிது உயரும். மண், மனை ஆதாயம் தரும்.
பெண்மணிகள் : குடும்ப வருமானம் அதிகரிக்கும். வேலைக்குச் சென்றுவரும் பெண்மணிகளுக்குப் பிரச்சினைகள்  ஏற்படக்கூடும்.
அறிவுரை : உடல்நலனில் கவனம் தேவை. தேவையற்ற செலவுகளைக் குறைத்துக்கொள்ளுங்கள்.
பரிகாரம் : கீழ்க்கண்ட பாடலைத் தினமும் காலை, மாலை இரு வேளைகளிலும் பாராயணம் செய்து வாருங்கள்.
தேடுவார் பிரமன் திருமாலவர்
ஆடுபாதம் அவரு மாறிகிலார்
மாடவீதி வலஞ்சுழி யீசனைத்
பாத மேத்தப் பறையும் நம்பாவமே.         - திருநாவுக்கரசர்
அனுகூல தினங்கள் : டிச : 25, 26, 27
பிரதிகூல தினங்கள் : டிச : 28, 29, 30, 31
அதிர்ஷ்ட எண்கள் : 3, 7

Current Issue
29-05-2015
Previous Issue
22-05-2015
   
Previous Issues

RSS Movies Shop

This website can secure your private information using a SSL Certificate. Information exchanged with any address beginning with https is encrypted using SSL before transmission.


About us | Register | Font Help | Feedback | Ad Tariff | Faq | Site Map
Copyright © 2010 Noble Broadcasting Corporation Private Limited . Allrights reserved.
Best view under 1024x764 Resoultion.