கத்திரிக்காய் ஊறுகாய்தேவையானவை:பிஞ்சுக் கத்திரிக்காய் - அரை கிலோ, மஞ்சள் தூள் - அரை டீஸ்பூன், புளி - எலுமிச்சை அளவு, மிளகாய்த்தூள் - 2 டேபிள் ஸ்பூன், வெந்தயத்தூள் - 2 ஸ்பூன், மல்லித்தூள் - 2 ஸ்பூன், கடுகு - 1 ஸ்பூன், பெருங்காயத்தூள் - சிறிதளவு, காய்ந்த மிளகாய் - 4, உப்பு, எண்ணெய் &- தேவையான அளவு.செய்முறை:கத்திரிக்காயை நன்றாகக் கழுவி, துடைத்து, நீளநீளமாக நறுக்கிக்கொள்ளவும்.புளியை ஊறவைத்து, கெட்டியாகக் கரைக்கவும். இதனுடன் உப்பு, மல்லித்தூள், மிளகாய்த்தூள், மஞ்சள்தூள், வெந்தயத்தூள் ஆகியவற்றைச் சேர்த்து, கத்திரிக்காயில் ஊற்றி, கரண்டியால் நன்றாகக் கிளறவும். ஒரு நாள் முழுவதும் அப்படியே ஊற விடவும்.மறுநாள் இந்தக் கரைசலை வடிகட்டி, காயை வெயிலில் காயவிட்டு எடுக்கவும்.வாணலியில் சிறிதளவு எண்ணெய் ஊற்றிக் காய்ச்சி, அதில் ஊற்றிக் கலக்கவும்.மற்றொரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் தேவையான அளவு எண்ணெய் ஊற்றி, சூடானதும், அதில் கடுகு, பெருங்காயத்தூள், காய்ந்த மிளகாய் ஆகியவற்றை போட்டு தாளித்து, எண்ணெய் கலந்து வைத்துள்ள கத்திரிக்காய் கலவையில் சேர்த்தால், மிகவும் சுவையான கத்திரிக்காய் ஊறுகாய் ரெடி!குறிப்பு:தயிர் சாதம், சாம்பார் சாதம் உள்ளிட்ட சாத வகைகளுடனோ சப்பாத்தி அல்லது பிரெட்டுடனோ சாப்பிடுவதற்கு மிகவும் ஏற்ற ஊறுகாய் இது!.தேங்காய்ப்பால் முறுக்கு தேவையானவை:தேங்காய் & 2, அரிசி மாவு - 2 கப், கடலை மாவு - 2 கப், சீரகம் - 8 ஸ்பூன், வெண்ணெய் - 4 ஸ்பூன், எண்ணெய் - பொரிக்க, உப்பு - தேவையான அளவு..செய்முறை:தேங்காயைத் துருவி, சிறிது தண்ணீர் சேர்த்து அரைத்து, வடிகட்டி, கெட்டியான தேங்காய்ப்பால் எடுத்துக்கொள்ளவும்.அகலமான பாத்திரத்தில் அரிசி மாவு, கடலை மாவு, தேங்காய்ப்பால், உப்பு, வெண்ணெய் ஆகியவற்றைச் சேர்த்து நன்றாகப் பிசைந்துக்கொள்ளவும்.வாணலியில் எண்ணெய் ஊற்றி சூடேற்றவும். பிசைந்த மாவை, முள்ளு முறுக்கு அச்சுள்ள நாழியில் நிரப்பவும். சூடான எண்ணெயில் முறுக்காக பிழிந்து விடவும்.இரண்டு பக்கமும் திருப்பி விட்டு, பொன்னிறமாக வெந்ததும் எடுத்து, எண்ணெயை வடிய விட்டுப் பரிமாறவும்.- ஏ.எஸ்.கோவிந்தராஜன், சென்னை-24.