Email
Password:
Remember Me  
Forgot Password   New Registration
About us | Register | Plan Details |Font Help| Feedback| Ad Tariff | Faq | Site Map|RSSimageRss  
News Headline
Dotcom Special
17-08-2018     Latest News
கர்நாடக குதிரை பேர விவகாரம் : மத்திய அரசு நடவடிக்கை எடுக்கும் என்று உறுதி    2010-10-25
Bookmark and Share



பெங்களூரு: கர்நாடகத்தில் பாஜக நடத்தும் குதிரை பேர விவகாரத்தில் அரசியல் சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்டும் என்று மத்திய அரசு தெரிவித்துள்ளது.

கர்நாடக மாநிலத்தில் நம்பிக்கை வாக்கெடுப்பு நடைபெற்ற நிலையில், பதவிபறிப்பை எதிர்த்து அதிருப்தி எம்எல்ஏக்கள் தொடர்ந்த வழக்கின் தீர்ப்பை உயர்நீதிமன்றம் ஒத்திவைத்துள்ளது. தீர்ப்பு வெளியானதும் ஆட்சியைக் கலைக்க நடைபெற்ற சதி குறித்து நீதிவிசாரணை நடைபெறும் என்று நேற்று முன்தினம் முதலமைச்சர் எடியூரப்பா அறிவித்தார். இதனிடையே காங்கிரஸிலிருந்து மூன்றாவதாக மல்லிகையா இன்று பதவி விலகவுள்ளார். கட்சியில் தான் புறக்கணிக்கப்படுவதாக அவர் குற்றம்சாட்டியுள்ளார். இந்நிலையில், பெங்களூருவில் நேற்று ஆந்திர முதலமைச்சர் ரோசையாவிற்கு நடைபெற்ற விழாவில் கலந்து கொண்டு பேசிய மத்திய சட்டத்துறை அமைச்சர் வீரப்ப மொய்லி, எதிர்கட்சி உறுப்பினர்களை இழுக்க பாஜக முயற்சிப்பதை மத்திய அரசு கண்டுகொள்ளாமல் இருப்பதாக முன்னாள் பிரதமர் தேவகவுடா கூறிய குற்றச்சாட்டை மறுத்தார். கர்நாடக அரசியலில் குழப்பம் நிலவுவதற்கு பாஜக தான் பொறுப்பேற்க வேண்டும் என்றும் அவர் கூறினார். மேலும், கர்நாடகத்தில் பாஜக நடத்தும் குதிரை பேர விவகாரத்தில் மத்திய அரசு விரைவில் நடவடிக்கை எடுக்கும் என்றும் அவர் நம்பிக்கை தெரிவித்தார்
Back

RSS Movies Shop

This website can secure your private information using a SSL Certificate. Information exchanged with any address beginning with https is encrypted using SSL before transmission.


About us | Register | Font Help | Feedback | Ad Tariff | Faq | Site Map
Copyright © 2010 Noble Broadcasting Corporation Private Limited . Allrights reserved.
Best view under 1024x764 Resoultion.