Email
Password:
Remember Me  
Forgot Password   New Registration
About us | Register | Plan Details |Font Help| Feedback| Ad Tariff | Faq | Site Map|RSSimageRss  
News Headline
Dotcom Special
24-10-2018     Latest News
கர்நடகாவில் இன்று மீண்டும் நம்பிக்கை வாக்கெடுப்பு: சுயேட்சை எம்எல்ஏவின் திடீர் திருப்பம்: எடியூரப்பாவிற்கு சாதகம்     2010-10-14
Bookmark and Share



பெங்களூரு: கர்நாடக மாநில சட்டப் பேரவையில் மீண்டும் இன்று நம்பிக்கை வாக்கெடுப்பு நடைபெறவுள்ளது. இந்நிலையில், அதிரடித் திருப்பமாக சுயேட்சை எம்எல்ஏ வர்த்தூர் பிரகாஷ் பாஜக அரசுக்கு ஆதரவு அளிப்பதாக அறிவித்துள்ளதால் எடியூரப்பாவிற்கு மொத்தம் 107 பேர் ஆதரவாக வாக்களிக்கவுள்ளனர்.

கர்நாடக மாநிலத்தில் எடியூரப்பா தலைமையிலான பாஜக அரசிற்கு அளித்து வந்த ஆதரவை 16 எம்எல்ஏக்கள் விலக்கிக் கொண்டதையடுத்து, சட்டப்பேரவையில் பெரும்பான்மையை நிரூபிக்குமாறு ஆளுநர் பரத்வாஜ் உத்தரவு பிறப்பித்தார். இதனையடுத்து கடந்த 11ஆம் தேதி சட்டப்பேரவையில் எடியூரப்பா தனது பெரும்பான்மையை நிரூபித்தார். ஆனால் நம்பிக்கை வாக்கெடுப்பின் போது பல்வேறு குளறுபடிகள் நிகழ்ந்ததாக குற்றம்சாட்டிய ஆளுநர் பரத்வாஜ், முதலமைச்சர் எடியூரப்பா மீண்டும் தனது பெரும்பான்மையை நிரூபிக்க வேண்டும் என்று உத்தரவிட்டார். இதனால் கர்நாடக சட்டப்பேரவையில் இன்று மீண்டும் நம்பிக்கை வாக்கெடுப்பு நடைபெறுகிறது. இந்த நம்பிக்கை வாக்கெடுப்பில் எடியூரப்பா சந்தேகம் இன்றி தனது பெரும்பான்மையை நிரூபிப்பார் என்று பாஜக மூத்தத் தலைவர் வெங்கையா நாயுடு நம்பிக்கை தெரிவித்துள்ளார். இதனிடையே, டெல்லியில் பிரதமர் மன்மோகன் சிங்கை பாஜக மூத்தத் தலைவர்கள் நேற்று சந்தித்து ஆளுநர் பரத்வாஜை மத்திய அரசு திரும்பப்பெற வேண்டும் என்று கோரிக்கை மனு அளித்துள்ளனர். இதனிடையே பதவி பறிக்கப்பட்ட ஐந்து சுயேட்சை எம்எல்ஏக்கள் நம்பிக்கை வாக்கெடுப்பில் கலந்து கொள்ள முடியாது என்று அம்மாநில உயர்நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளதால் இன்றைய நம்பிக்கை வாக்கெடுப்பில் எடியூரப்பா வெற்றி பெறுவார் என்று அரசியல் நோக்கர்கள் கருத்து தெரிவித்துள்ளனர். இந்த குழப்பமான சூழ்நிலையின் அதிரடித் திருப்பமாக சுயேட்சை எம்எல்ஏ வர்த்தூர் பிரகாஷ் பாஜக அரசுக்கு ஆதரவு அளிப்பதாக திடீரென அறிவித்துள்ளது இந்த பிரச்சனைக்கு பெரும் திருப்பமாக அமைந்துள்ளது. இதனால் தற்போது எடியூரப்பாவிற்கு தற்போது மொத்தம் 107 பேர் ஆதரவு அளிக்கவுள்ளனர். இதனிடையே, இன்று நடைபெற இருக்கும் நம்பிக்கை வாக்கெடுப்பை குமாரசாமி தலைமையிலான மதச் சார்பற்ற ஜனதாதள எம்எல்ஏக்கள் புறக்கணிக்க முடிவு செய்துள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன
Back

RSS Movies Shop

This website can secure your private information using a SSL Certificate. Information exchanged with any address beginning with https is encrypted using SSL before transmission.


About us | Register | Font Help | Feedback | Ad Tariff | Faq | Site Map
Copyright © 2010 Noble Broadcasting Corporation Private Limited . Allrights reserved.
Best view under 1024x764 Resoultion.