Email
Password:
Remember Me  
Forgot Password   New Registration
About us | Register | Plan Details |Font Help| Feedback| Ad Tariff | Faq | Site Map|RSSimageRss  
News Headline
Dotcom Special
17-08-2018     Latest News
ராமேஸ்வரம் மீனவர்களுடன் அதிகாரிகள் நடத்திய பேச்சுவார்த்தை தோல்வி: பரபரப்பு    2010-10-07
Bookmark and Share



ராமேஸ்வரம்: கச்சத்தீவு சென்று போராட்டம் நடத்தப்போவதாக ராமேஸ்வரம் மீனவர்கள் அறிவித்திருந்த நிலையில், அவர்களுடன் அதிகாரிகள் நடத்திய பேச்சுவார்த்தை தோல்வியடைந்ததால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

இலங்கைக் கடற்படையினரின் தொடர் தாக்குதல்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து ராமேஸ்வரம் மீனவர்கள் வரும் 11 ஆம் தேதி கச்சத்தீவு சென்று போராட்டம் நடத்தப்போவதாக அறிவித்திருந்தனர். இதனைத்தொடர்ந்து மீனவர்களிடம் சமாதானப் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டது. இந்தப் பேச்சுவார்த்தையின் முடிவில் மீனவர்களின் கோரிக்கைகள் குறித்து அரசு பரிந்துரை செய்வதாகவும், கடல் எல்லை பிரச்சனை குறித்து மத்திய அரசு, இலங்கை அரசுடன் பேசி முடிவு எடுக்கும் என்றும் உறுதியளிக்கப்பட்டது. இதனால் மீனவர்கள் தங்கள் போராட்டத்தை கைவிட வேண்டும் என்றும் கேட்டுக் கொள்ளப்பட்டது. ஆனால் மீனவர்களின் இந்தப் பிரச்சனை இனி வரும் காலங்களிலும் நிகழாமல் இருக்காதவாறு நடவடிக்கை எடுக்கக்கோரி தங்களது போராட்டத்தை கைவிட மறுத்துவிட்டனர். மேலும் திட்டமிட்டபடி கச்சத்தீவு செல்லும் போராட்டம் நடத்தப்படும் என்றும் மீனவர்கள் தெரிவித்துள்ளனர். இதனால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது
Back

RSS Movies Shop

This website can secure your private information using a SSL Certificate. Information exchanged with any address beginning with https is encrypted using SSL before transmission.


About us | Register | Font Help | Feedback | Ad Tariff | Faq | Site Map
Copyright © 2010 Noble Broadcasting Corporation Private Limited . Allrights reserved.
Best view under 1024x764 Resoultion.