Email
Password:
Remember Me  
Forgot Password   New Registration
About us | Register | Plan Details |Font Help| Feedback| Ad Tariff | Faq | Site Map|RSSimageRss  
News Headline
Dotcom Special
22-10-2018     Latest News
கர்நாடக பாஜகவில் விவகாரம் : அவசரமாகக் கூடியது அமைச்சரவை    2010-10-06
Bookmark and Share



பெங்களூரு : கர்நாடக மாநிலத்தில் எடியூரப்பாவிற்கு எதிராக போர்க்கொடி தூக்கிய 4 அமைச்சர்கள் நீக்கப்பட்டனர். இதனிடையே எடியூரப்பா அரசுக்கு ஆதரவை விலக்கிக் கொள்வதாக 2 எம்எல்ஏக்கள் ஆளுநரைச் சந்தித்து கடிதம் அளித்துள்ளதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

கர்நாடக மாநிலத்தில் தொழில் வளர்ச்சிக்காக ஆயிரக்கணக்கான நிலங்களை அம்மாநில அரசு கையகப்படுத்தியது. இதில் 205 கோடி ரூபாய் அளவிற்கு ஊழல் நடைபெற்றுள்ளதாக எதிர்க்கட்சிகள் குற்றம்சாட்டியுள்ளன. பணம் கைமாறியது தொடர்பான வீடியோ ஆதாரத்தை மதச்சார்பற்ற ஜனதா தளம் வெளியிட்டுள்ளது. இந்நிலையில், எடியூரப்பாவிற்கு எதிராக போர்க்கொடி தூக்கியுள்ள கர்நாடக மாநில அமைச்சர்கள் 7 பேர் மற்றும் எம்எல்ஏக்கள் 14 பேர் சென்னையில் ஹோட்டல் ஒன்றில் தங்கி விவாதித்து வருகின்றனர். அவர்களை எடியூரப்பா ஆதரவு அமைச்சர்கள் சந்தித்து சமரசம் செய்யும் முயற்சியில் ஈடுபட்டனர். ஆனால் முயற்சி தோல்வி அடைந்ததை அடுத்து, அடுத்தகட்ட நடவடிக்கைகள் குறித்து கர்நாடக அமைச்சரவை இன்று அவசரமாகக் கூடி விவாதித்தது. அப்போது ஆட்சி கவிழ்ப்பு நடவடிக்கையில் ஈடுபட்டுள்ள 4 அமைச்சர்களைப் பதவி நீக்கம் செய்ய தீர்மானித்தது. இவர்கள் 4 பேரும் சுயேச்சை உறுப்பினர்கள். இதனிடையே, எடியூரப்பா அமைச்சரவைக்கான ஆதரவை விலக்கிக் கொள்வதாக இரு எம்எல்ஏக்கள் இன்று அம்மாநில ஆளுநர் பரத்வாஜைச் சந்தித்து கடிதம் அளித்துள்ளனர். எனவே எடியூரப்பா அமைச்சரவைக்கு கடும் நெருக்கடி ஏற்பட்டுள்ளது. இந்நிலையில், அடிக்கடி ஆட்சி கவிழ்ப்பு நடவடிக்கைகள் நடைபெற்று வருவதால், சட்டசபைக்கு புதிய தேர்தலை நடத்த எடியூரப்பா முடிவு செய்துள்ளதாக தற்போது தகவல்கள் வெளியாகி உள்ளன. இதனால் அம்மாநிலத்தில் அரசியல் பரபரப்பு உச்சகட்டத்தை எட்டியுள்ளது
Back

RSS Movies Shop

This website can secure your private information using a SSL Certificate. Information exchanged with any address beginning with https is encrypted using SSL before transmission.


About us | Register | Font Help | Feedback | Ad Tariff | Faq | Site Map
Copyright © 2010 Noble Broadcasting Corporation Private Limited . Allrights reserved.
Best view under 1024x764 Resoultion.