மத்தளத்துக்கு இரண்டு பக்கம்தான் அடி. ஆனால், தமிழக மக்களுக்குத் தற்போது மூன்று பக்கம் அடி.முதலாவது, மின் கட்டணத்தை ‘பீக் ஹவர்ஸில்’ 20 சதவிகிதம் மத்திய அரசு அதிகப்படுத்த இருப்பது. இரண்டாவது, வணிக மற்றும் தொழில் அமைப்புகளுக்குரிய மின் கட்டணத்தை யூனிட்டுக்கு 13 முதல் 27 பைசா வரை தமிழக மின்வாரியம் உயர்த்தியிருப்பது. மூன்றாவது, வீடுகளுக்குரிய மின் நுகர்வு கணக்கெடுப்புக் குளறுபடிகள்.பெட்ரோல், டீசல், கேஸ், காய்கறிகள் எல்லாவற்றின் விலையும் எகிறி நின்று மக்களை வதைத்துக்கொண்டிருக்கிறது. இந்நிலையில், மின் கட்டணமும் அதன் கணக்கெடுப்புக் குளறுபடிகளும் சேர்த்து மக்களை வதைக்கிறது.‘பீக் ஹவர்ஸ்’ எனப்படும் மின் தேவை அதிகம் உள்ள நேரங்களில் பயன்படுத்தும் மின்சாரத்திற்கு 10 முதல் 20 சதவிகிதம்வரை அதிக கட்டணம் வசூலிக்கலாம் என்கிற முடிவை மத்திய அரசு மறுபரிசீலனை செய்யவேண்டும்.அதேபோல கடந்த 1ம் தேதி முதல் தமிழகத்தில் தொழிற்சாலைகள், வணிக நிறுவனங்களுக்கான மின் கட்டணம் உயர்த்தப்பட்டுள்ளது. இதனால் மக்களின் செலவுச் சுமை உடனடியாக அதிகரிக்கும். மக்களின் நன்மையைக் கருதி மின் கட்டண உயர்வைத் தமிழக அரசு திரும்பப் பெறவேண்டும்.அடுத்து, மின் வாரிய ஊழியர்கள் வீடுதோறும் காலம் கடந்து வந்து மின் நுகர்வைக் கணக்கெடுப்பதால், மக்கள் அதிக மின் கட்டணம் செலுத்தவேண்டியுள்ளது. இந்தப் பிரச்னையால் அதிருப்தி அடையும் மக்கள் பல இடங்களில் மின் ஊழியர்களுடன் தகராறு செய்வதும் அதிகரித்து வருகிறது. மின் நுகர்வு கணக்கெடுப்பைக் காலம்தவறாமல் எடுக்கும் வகையில் தமிழக அரசு நடவடிக்கை எடுப்பது அவசியமாகும்.மேலும், இரண்டு மாதங்களுக்கு ஒருமுறை என்பதற்கு மாற்றாக, மாதந்தோறும் கணக்கெடுக்கும் முறையை அமல்படுத்தவேண்டும். இதனால் மக்கள் பெரிதும் பயன் பெறுவர். அரசுக்கும் ‘மக்கள் நலம் சார் அரசு’ என்கிற பெயரும் வந்து சேரும்!