மிக மோசமான விபத்து என்று சொல்வதைவிட மிக மிக அலட்சியத்தாலும் பொறுப்பற்ற போக்காலும் ஏற்பட்ட விபத்து என்றே இதை சொல்ல வேண்டும். ஆகஸ்ட் 17 அன்று லக்னோவில் இருந்து ராமேஸ்வரத்துக்குக் கிளம்பிய பாரத் கௌரவ் ஆன்மிக சுற்றுலா ரயில், கடந்த ஆகஸ்ட் 26 அன்று மதுரை ரயில் நிலையத்துக்கு மிக அருகில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்தபோது, அதிகாலையில் திடீரென்று இரு பெட்டிகளில் தீப்பிடித்து, ஒன்பது பேர் பலியாகியிருக்கிறார்கள்.80-க்கும் மேற்பட்ட பயணிகள் அலறியடித்துக்கொண்டு, ரயில் பெட்டிகளில் இருந்து குதித்து தப்பித்துள்ளனர்.‘சட்டவிரோதமாக ரயிலில் கொண்டுச் செல்லப்பட்ட கேஸ் சிலிண்டரில் பயணிகள் சிலர் சமையல் செய்ய முயன்றதே தீ விபத்துக்குக் காரணம்’ என்று அறிவித்துள்ளது தெற்கு ரயில்வே. இரண்டு கேஸ் சிலிண்டர்கள் கைப்பற்றப்பட்டுள்ளன.ரயிலில் சிகரெட், தீப்பெட்டி எடுத்துச்செல்லவே தடை உள்ள நிலையில், எவ்வாறு கேஸ் சிலிண்டர்கள், அடுப்பு, மண்ணெண்ணெய், விறகு, காய்கறி, அரிசி மூட்டைகளை ஏற்றுவதற்கு அதிகாரிகள் அனுமதித்தனர்? அவ்வளவு பெரிய சிலிண்டர்களை, விறகு மூட்டைகளை ஏற்றுவதுகூட அதிகாரிகளுக்கோ, டிக்கெட் செக்கர்களுக்கோ தெரியவில்லையா? எவ்வளவு பெரிய அலட்சியம், பொறுப்பின்மை இது!சாதாரண பிச்சைக்காரர்களை விரட்டுவதில் மும்முரம் காட்டும் ரயில்வே போலீஸார் என்ன செய்துகொண்டிருந்தனர்? ‘எளிதில் தீப்பற்றக்கூடிய பொருட்களை எடுத்துச் செல்லக்கூடாது. இத்தகையை பொருட்களைக் கொண்டு செல்லும் நபர்கள் மீது ரயில்வே பாதுகாப்புச் சட்டம் 67ன் கீழ் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும்’ என்பது எல்லாம் ரயில்வே நிர்வாகத்தின் கண்துடைப்பு அறிவிப்பா? இனியேனும் விழித்துக்கொள்ள வேண்டும் ரயில்வே நிர்வாகம்!