ஒரு நடிகன் தன் உருவத்தையும் குரலையும் தனித் தகுதியாக மாற்றிக் கொள்வது எப்படி என்பதை முனீஸ்காந்த்திடம் தான் தெரிந்து கொள்ள வேண்டும். .முண்டாசுப்பட்டியில் தொடங்கி நகைச்சுவைக் கதாபாத்திரங்களிலும், குணச்சித்திர வேடங்களிலும்தனக்கென் தனி முத்திரையைப் பதித்து வருபவர். அண்மையில்வெளியான கழுவேத்தி மூர்க்கன் படத்தில் ‘உண்மை‘ என்ற வழக்கறிஞர் கதாபாத்திரத்தில் கலக்கியிருந்தவர், தற்போது காடப்புறா கலைக்குழு படத்தில் கரகாட்டக்காரராக புது அவதாரம் எடுத்திருக்கிறார். படப்பிடிப்பு இடைவேளையில் அவரிடம் பேசினோம். மாநகரம் படத்தில்பார்த்த அதே கதாபாத்திரம் போல வெள்ளந்தியாகப் பேசினார்….ரஜினிகாந்த், வியகாந்த் மாதிரி முனீஸ்காந்த்னு நீங்களே` பேர் வச்சுக்கிட்டீங்களா? “ஐயய்யோ இல்லைங்க, என் சொந்தப் பேர் ராமதாஸ் தான். ஆனா முண்டாசுப்பட்டி படத்துல நான் முனீஸ்காந்த்ங்கிற கேரக்டர்ல, சினிமா நடிகன் ஆகணும்கிற கனவோட இருக்குறஇளைஞனா நடிச்சதால அந்தப் பேரு ரீச் ஆயிடுச்சு. எல்லாரும் முனீஸ்காந்த்துன்னே கூப்பிட ஆரம்பிச்சாங்க. முண்டாசுப்பட்டி படத்துலயும் அதுக்கப்புறமா வந்த பசங்க 2 போலசில படங்கள்லயும்கூட என் பேர் ராமதாஸ்னு தான் இருக்கும். ஆனா அந்தப் பேர் எடுபடவேயில்ல. அதனால முனீஸ்காந்த்ங்கிறப் பேரையே போட்டுக்க ஆரம்பிச்சுட்டேன்.”நீங்க எந்த ஊர், என்ன படிச்சீங்க? எப்படி நடிகரானீங்க? “திண்டுக்கல் மாவட்டம் நிலக்கோட்டைதான் எனக்கு சொந்த ஊர். எட்டாவது வரைக்கும் தான் படிச்சேன். படங்கள் நிறையா பாப்பேன், இடையில கோயம்பத்தூர்ல கொஞ்ச நாளும் மலேஷியாவுல கொஞ்ச நாளும் வேலை பார்த்தேன். அதுக்கப்புறம் எனக்கு சரியான இடம் இதுவாதான் இருக்கும்னு 2002-ல சினிமாத்துறைக்கு வந்தேன். நடிகர் சங்கத்துல கார்டு எடுக்காம நான் மெம்பராவே ஜூனியர் ஆர்டிஸ்டா நாலு வருஷம் சின்னச்சின்ன ரோல்ஸ் பண்ணேன். அதுக்கப்புறம் கம்பெனி கம்பெனியா சுத்திகிட்டிருந்தேன். அப்போ ’நாளைய இயக்குநர்’னு ஒரு நிகழ்ச்சி டி.வி.யில ஃபேமஸாச்சு. அதுல முண்டாசுப்பட்டி படத்தை ஷார்ட்ஃபிலிமா பண்ணாங்க. அதுல காளி வெங்கட்தான் ஹீரோவா நடிச்சார். முனீஸ்காந்த் கேரக்டர்ல திருப்பூர் நாடகக் கலைஞர் தண்டபானி டப்பிங் பேச வர முடியாத சூழல்ல என்னை டப்பிங் பேச வைக்கலாம்னு காளி வெங்கட் ரெஃபர் பண்ணார். அதுக்கப்புறம் அதையே படமா எடுத்தப்போ, அந்த முனீஸ்காந்த் கேரக்டரை எனக்கே கொடுத்தாங்க. வில்லனாகனும்னு ஆசைப்பட்டு நடிக்கவந்தவன் நான், அது முழுக்க முழுக்க காமெடியான கேரக்டர், என்னால பண்ண முடியுமா?ன்னு பயந்தேன். இயக்குநர் ராம்குமார் நீங்க வாங்க பார்த்துக்கலாம்னு அதே கேரக்டரைப் பண்ண வச்சிட்டார். முண்டாசுப்பட்டி படத்துக்கு அப்புறமாதான் மாநகரம், மரகத நாணயம், பசங்க 2, ப்ரூஸ் லீ, மாப்பிள்ளை சிங்கம் போல நல்ல வாய்ப்புகள் எல்லாம் வந்தது.”.காடப்புறா கலைக்குழு படத்துல கரகாட்டம்லாம் ஆடியிருக்கீங்க? வரவேற்பு எப்படி இருக்கு? “இயக்குநர் ராஜா குருசாமி பார்த்தீங்கன்னா கிராமிய அகாதமியில வொர்க் பண்ணியிருப்பார் போலிருக்கு. அதுக்கப்புறம் பெரிய பெரிய படத்துல கோ டைரக்டரா வொர்க் பண்ணியிருக்கார். அவர் ஒரு நாள் கரகாட்டக்காரன் பற்றிய கதை சொன்னாரு... அவர் சொல்லும்போது, ‘ கரகாட்டக்காரங்கன்னா ஒல்லியா இருப்பாங்களே நான் தொப்பையும் தொந்தியுமா இருந்துகிட்டு அந்த ரோல் எப்படி பண்ண முடியும்?’னு கேட்டேன். அதுக்கு அவர் ரெண்டு மூணு ரெஃபரன்ஸஸை எடுத்துப் போட்டு, ‘ குண்டா இருக்கறவங்களும் ஆடறாங்கண்ணே உங்களுக்குத் தெரியலைன்னு சொன்னார்.’ அதெல்லாம் சரி, கரகாட்டம்கிறதே எனக்குத்தெரியாதே சார் நான் வேணும்னா பத்து நாள் ப்ராக்டீஸ் எடுத்துகிட்டு வர்றேன்னு சொன்னேன். அதெல்லாம் வேணாம்ணே நீங்க வாங்க நான் பார்த்துக்கறேன்னு கூட்டிகிட்டுப் போனாரு. அங்கப் போனா குரு வணக்கம் வைக்கறதே பரதநாட்டியம் போல சாதாரணமா இல்லை, மூணு நாலு தடவை சுத்தி வந்து டப்புன்னு நின்னு வணக்கம் சொல்றதுக்குள்ள தலையே சுத்திடும். அவ்ளோ கஷ்டமா இருந்தது. காடப்புறா கலைக்குழு பட வாய்ப்பைக் கொடுத்ததுக்காக இயக்குநருக்கு பெரிய நன்றி. இந்தப் படத்துல நடிச்சதுக்கு ரொம்ப நல்ல வரவேற்புக் கிடைச்சிருக்கு.”.எட்டாவதுதான் படிச்சிருக்கேன்னு சொன்னீங்க, கழுவேத்தி மூர்க்கன் படத்துல வக்கீல் கேரக்டர்ல வந்து எஸ்.பியையே தெறிக்கவிடற மாதிரி இங்லீஷ் டயலாக்ஸ் பேசினீங்களே எப்படி?(பெரிதாகச் சிரிக்கிறார்) “அந்த இங்லீஷை சொல்லிக் கொடுக்கறதுக்குள்ள டைரக்டர் பட்டபாடு அவருக்குதான் தெரியும். (மீண்டும் சிரிக்கிறார்) அதுக்கு ஒரு முக்கா மணி நேரம் ஒதுக்கி ஒவ்வொன்னா மனப்பாடம் பண்ணி பேசினேன். உத்துப் பார்த்தா நான் நிறுத்தி நிறுத்திதான்பேசியிருக்கேன்கிறது தெரியும்.”.பேட்டை படத்தில் ரஜினியுடன் நடித்த அனுபவங்களை சொல்லுங்க..?(சிரிக்கிறார்) “தலைவர்கூட நடிச்சதா? நானெல்லாம் ரஜினி சாரோட பெரிய ரசிகன். அவரைப் பார்க்கறதே பெரிய விஷயமா நினைச்சவனுக்கு அவர் கூட நடிக்கவே வாப்புக் கிடைச்சது நம்பவே முடியாம இருந்தது. அந்தப் பிரம்மிப்போடவே நடிச்சதால செட்டுல ஒரு நாள்கூட ஒரேடேக்ல என்னால ஓ.கே. பண்ணவே முடியல, ஏழெட்டு டேக் எடுத்தேன். அவ்ளோ பெரிய ஸ்டார், முதல் படத்துல நடிக்கற மாதிரி அவ்ளோ தன்மையாவும் சின்சியராவும், மத்த ஆர்டிஸ்டுங்கரெடி ஆகற வரைக்கும் பக்கத்துலயே நிப்பார். கேரவன்ல போய்கூட உட்கார மாட்டார், அவருக்கான சீன் வர்ற வரைக்கும் அங்கயே சேர்ல உட்கார்த்திருப்பார். அவர்கிட்டேயிருந்து நிறைய கத்துக்கிட்டேன்.”.நீங்க நடிக்கணும்னு ஆசைப்பட்ட வில்லன் ரோல் எப்ப பண்ணப்போறீங்க? “ஏனோதானோன்னு பண்ணிடக்கூடாதுங்கிறதுக்காக, அதுக்காக என்னை தயார் படுத்திகிட்டு இருக்கேன். ரெண்டு மூணு வாய்ப்புகள் வந்தது, அது சரியா இல்லாததுனால விட்டுட்டேன். ஒருபடம் பண்ணாலும் நல்லதா இருக்கணும்னு பார்க்கறேன்..வேற என்னென்ன படங்கள்ல நடிக்கறீங்க? “ஆலம்பனா படம் வெளிவரவிருக்கு. முண்டாசுப்பட்டியில வொர்க் பண்ண பாரி விஜயகுமார்னு ஒருத்தர்தான் டைரக்ஷன் பண்றாரு. அதுல ஒரு நல்ல மெயினான பூதம் கேரக்டர் பண்ணியிருக்கேன். அந்தப் படத்தை ரொம்ப எதிர்பார்க்கிறேன். அப்புறம் கே.எஸ். ரவிகுமார் சார் புரொடக்ஷன்ல டைரக்டர் விக்ரமனோட மகன் ஹீரோவா பண்றாரு. சரத்குமார் சாரும்அதுல ஒரு லீடு கேரக்டர் பண்றாரு, அவரோட சேர்ந்து நானும் நடிக்கறேன். அதுக்கப்புறம் முண்டாசுப்பட்டி இயக்குநரே விஷ்ணுவிஷால் சாரை வச்சு இன்னொரு படம் ஆரம்பிக்கறாரு, அதுல நடிக்கப்போறேன்..உங்க குடும்பம் பத்தி சொல்ல முடியுமா? “என் மனைவி பேர் தேன்மொழி, அவங்க வேலூர் பொண்ணு. கல்யாணம் ஆகி நாலஞ்சு வருஷம் ஆகுது. நாங்க ரெண்டு பேர் மட்டுமே உள்ள சின்னக் குடும்பம் எங்களோடது. அப்பா முன்னாடியே இறந்து போயிட்டார், அம்மா மூணு வருஷத்துக்கு முன்னாடி இறந்தாங்க. எனக்கு ஒரு அண்ணன், ஒரு தம்பி இருக்காங்க. அவங்க நிலக்கோட்டையில இருக்காங்க.” -வாசுகி லட்சுமணன்