- இரா.முருகவேள்சிறை கைதிகளுக்கு ராணுவ பயிற்சி அளித்து அவர்களை தீவிரவாத குழுக்களுக்கு எதிராகவோ, அல்லது ஒரு நாட்டுக்கு எதிராகவோ போர்க்களத்தில் இறக்குவதை சினிமாவில் பார்த்திருப்போம்; அதை நிஜத்தில் செய்து காட்டியுள்ளது ரஷ்யா. அதாவது, குற்றவாளிகளை வைத்து தனியார் ஒருவரது தலைமையின் கீழ் செயல்படும் கூலிப்படை… அவர்கள் நாட்டுக்காக போரிட்டாலும் லட்சியம் காசு தான். புதின் உருவாக்கிய அந்தக் கூலிப்படையின் பெயர் தான் வாக்னர் படை. அதன் உரிமையாளர் பிரிகோஷின். .சொந்தக் காசில் சூன்யம் வைத்தது போல் ரஷ்ய அதிபர் புதினால் உருவாக்கப்பட்ட இந்தக் கூலிப்படை அவரது ஆட்சிக்கும், ராணுவத்துக்கும் எதிராக திரும்பி, உள்நாட்டு யுத்தமாக மாறியது தனிக் கதை... அந்தக் கதைக்குள் செல்வதற்கு முன் இந்தக் கூலிப்படையின் கதையை பார்ப்போம்... இது எப்படி உருவாக்கப்பட்டது? ஏன் உருவாக்கப்பட்டது? என்பது தான் வாக்னர் ஸ்டோரி... “நான் பிரிகோஷின். வாக்னர் தனியார் ராணுவ கம்பெனியின் சார்பில் உங்களுடன் பேசுகிறேன். இந்தச் சிறையின் உயர்ந்த சுவர்களுக்கு வெளியே உங்களால் உயிருள்ள வரை போக முடியாது. நான் ஒரு வாய்ப்புத் தருகிறேன். வாக்னர் படையில் சேர்ந்து ஆறு மாதங்கள் உக்ரேனில் போரிடுங்கள். உயிருடன் பிழைத்து வந்தால் விடுதலை செய்யப்படுவீர்கள். உங்கள் அனைத்து குற்றங்களும் மன்னிக்கப்படும். உங்களுக்கு ரஷ்ய ராணுவ வீரர்களை விட நல்ல ஊதியம் வழங்கப்படும். ஒருவேளை இறந்து போனால் ஐம்பது லட்சம் ரூபிள் உங்கள் குடும்பத்துக்குக் கிடைக்கும்.” - ரஷ்யச் சிறை ஒன்றில் வாக்னர் நிறுவனத்தின் உரிமையாளர் பிரிகோஷின் நிகழ்த்திய இந்த உரை பல டெலிகிராம் சேனல்களிலும், சமூக வலைத் தளங்களிலும் வெளியானது..2014 ஆம் ஆண்டிலிருந்து உக்ரேன் ரஷ்ய எல்லையில் வலிமை வாய்ந்தகாப்பரண்களை எழுப்பியிருந்தது. மூன்று வரிசைகளில் நூற்றுக்கணக்கான மைல் நீளத்துக்கு பதுங்குகுழிகள் வெட்டப்பட்டிருந்தன. அவற்றில் கனரக மெஷின்கன்கள், மார்டர் பீரங்கிகள், டாங்கி எதிர்ப்பு பீரங்கிகள் ஆகியவற்றை மறைத்து வைத்து, தாக்க வரும் ரஷ்ய படைகள் மீது பதில் தாக்குதல் நடத்த ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன. மேற்கு ஐரோப்பிய நாடுகளும், அமெரிக்காவும் இந்த அரண்களை உருவாக்குவதிலும், உக்ரேனிய வீரர்களுக்குப் பயிற்சியளிப்பதிலும் தீவிரமாக ஈடுபட்டிருந்தன. 2022 ஆம் ஆண்டு உக்ரேனுக்கு எதிராக போரில் இறங்கிய ரஷ்யப் படைகள் இவ்வளவு விரிவான, வலிமையான காப்பரண்களை எதிர்பார்க்கவில்லை. அவை முன்னேற முடியாமல் மாதக்கணக்கில் தேங்கி நின்று விட்டன. இந்தச் சூழ்நிலையில் தான் வாக்னர் படைகள் போரில் நேரடியாகத் தலையிட்டன. போபாஸ்னா, சலேடார் போன்ற பகுதிகளை கடும் போருக்குப் பிறகு கைப்பற்றியது வாக்னர். .பக்மூத் என்ற நகரையும், அதைச் சுற்றியுள்ள பகுதியையும் எட்டு ஆண்டுகளாக எஃகுக் கோட்டையாக மாற்றியிருந்தது உக்ரேன். உக்ரேன் முழுவதிலுமிருந்து ஒருலட்சம் வீரர்கள் கொண்டுவரப்பட்டு பக்மூத்தில் குவிக்கப்பட்டிருந்தனர்.அமெரிக்காவின் அதி நவீன கருவிகளும் அவர்களிடம் இருந்தன. அப்படிப்பட்ட பக்மூத் நகரைத் தாக்கும் பொறுப்பை வாக்னர் ஏற்றுக் கொண்டது. இந்தத் தாக்குதலுக்காக வாக்னர் தன் படைபலத்தைப் பெருக்க ரஷ்ய சிறைகளில் கைதிகளை அணிதிரட்ட அரசு அனுமதியளித்தது. ரஷ்ய ராணுவமே எதிர்பார்க்காத விதத்தில் வாக்னர் நாற்பதாயிரம் பேரை திரட்டி விட்டது. வாக்னரின் மொத்த எண்ணிக்கை ஐம்பதாயிரமாக உயர்ந்தது. வாக்னர் படைகள் ஏழு மாதங்கள் கடும் போர் புரிந்து ஒவ்வொரு தடையரணாகத் தகர்த்து, ஒவ்வொரு கட்டடமாகக் கைப்பற்றி பக்மூத் நகரை முழுவதுமாக உக்ரேனியப் படைகளிடமிருந்து மீட்டன. ரஷ்ய ராணுவம் செய்யமுடியாததை செய்து காட்டியது வாக்னர். சரி; யார் இந்த வாக்னர், தனியார் ராணுவம் என்றால் என்ன? 2006 வாக்கில் தனது இழந்த வலிமையை ஓரளவு மீட்டுக் கொண்ட ரஷ்யா தனது ஆயுத வணிகத்தை விரிவுபடுத்த விரும்பியது. அதற்காக பல தனியார் ராணுவக் கம்பெனிகளை உருவாக்கியது. லெப்டினெண்ட் கர்னல் உட்கின் என்பவர் ரஷ்யாவின் வலிமையை மீட்க புடின் நடத்திய இரண்டு செச்சின்ய போர்கள், சிரியா போர், உக்ரேனுடனான முதல் போர் ஆகிவற்றில் கலந்து கொண்டு நான்கு முறை விருது பெற்றவர். இவரது மறுபெயர் தான் வாக்னர். இவர்தான் வாக்னர் படைப்பிரிவை உருவாக்கினார். பிரிகோஷின் இதன் உரிமையாளர் என்று சொல்லப்பட்டாலும் ரஷ்ய அதிகம் வெளியே தலைகாட்டாத உட்கின் தான் இந்த நிறுவனத்தின் உண்மையான தலைவர் என்று சொல்லப்படுகிறது..வாக்னர் சிரியாவில் அல்கைதா, ஐ எஸ் ஐ எஸ் ஆகியவற்றை எதிர்த்துப் போரிட்டது. ஏமன், சூடான், மாலி, கார் குடியரசு, மொஸாம்பிக் போன்ற பல ஆப்பிரிக்க நாட்டு அரசுகள் வாக்னருடன் ராணுவப் பயிற்சி மற்றும்பாதுகாப்பு நடவடிக்கைகளுக்கான ஒப்பந்தங்கள் செய்து கொண்டுள்ளன. வாக்னர் இந்த நாடுகளில் பல்லாயிரம் கோடி டாலர் லாபம் தரக்கூடிய தங்க வைரச் சுரங்கங்களையும், மற்ற வணிக வாய்ப்புகளையும் பெற்றது.வாக்னர், டெர்ரா டெக் என்ற ஒரு நிறுவனத்துடன் தொடர்பு கொண்டுள்ளது. இந்த நிறுவனமானது செயற்கைக்கோள்கள் மூலம் உக்ரேன் போன்ற நாடுகளை உளவு பார்த்து வாக்னருக்கு தகவல் கொடுக்கிறது. இது போல63 நிறுவனங்களுடன் வாக்னருக்கு தொடர்பு உள்ளதாக அமெரிக்கா குற்றம் சாட்டுகிறது. வாக்னர் இவ்வளவு வலிமை வாய்ந்ததாக மாறியதுதான் ரஷ்ய ராணுவத்தின் பிரச்சினையும் கூட. . ஐம்பதாயிரம் பேர், ஹெலிக்காப்டர்களை சுட்டுத் தள்ளும் திறமை, பல்லாயிரம் கோடி சொத்துக்கள் கொண்ட ஒரு படை நாட்டில் இருப்பது நல்லதற்கு அல்ல என்று ரஷ்ய ராணுவ அமைச்சகம் கருதுகிறது. அதனால் வாக்னர் படைகள் பல சிறு துண்டுகளாக உடைக்கப்பட்டு அதிகார பூர்வமான ரஷ்ய ராணுவத்துடன் ஜூலை 1க்கு முன் இணைக்கப்பட வேண்டும் என்று ராணுவ அமைச்சகம் உத்திரவிட்டது. இதை எதிர்த்துத் தான் வாக்னர் படை டாங்கிகள், பீரங்கிகள், இயந்திரத் துப்பாக்கிகள், இன்னும் ஏராளமான ஆயுதங்களுடன் போர் முனையிலிருந்து ரஷ்யா நோக்கிக் கிளம்பியது. ராஸ்டோவ் என்ற நகரைக் கைப்பற்றி மாஸ்கோ நோக்கி முன்னேறத் தொடங்கியது. .புடின் நேரலையில் தோன்றி வாக்னருக்கு எச்சரிக்கை விடுத்தார். ரஷ்ய ஹெலிக்காப்டர்கள் வாக்னர் படைகளைத் தாக்கின. பிரிகோஷினே எதிர்பாராத விதத்தில் மாஸ்கோ நோக்கி முன்னேறிக் கொண்டிருந்த வாக்னர் படைப்பிரிவு ஏழு ஹெலிக்காப்டர்களைக் குருவிகள் போலச் சுட்டு வீழ்த்தியது. அதே நேரம் ரஷ்யா செச்சின்ய படைகளைக் கொண்டு வந்து ராஸ்டோவ் நகரைச் சுற்றி வளைத்தது. பிரிகோஷின் பயந்து போனார். சண்டை வருவதற்கான சூழல் தோன்றியதும் மூட்டைப்பூச்சியைப் போல தாங்கள் நசுக்கபட்டுவிடக் கூடும் என்பதால் பிரிகோஷின் தனது படைகளை நிறுத்தி,முகாம்களுக்குத் திரும்பும்படி உத்திரவிட்டார். புடின் வாக்னர் படைகளை எச்சரித்த அதே நேரம் அவர்களின் வீரத்தையும் சாதனைகளையும் புகழ்ந்து அவர்களுக்கு பொதுமன்னிப்பு அளிக்கப்படும், அவர்கள் ராணுவத்தில் சேரலாம் அல்லது பிரிகோஷினுடன் அவருக்கு புகலிடம் அளிக்க ஒப்புக் கொண்டுள்ள பைலோ ரஷ்யாவுக்குப் போகலாம், அல்லது வீட்டுக்கும் போகலாம் என்று உறுதியளித்தார். வாக்னரை ரஷ்யா எதிர்த்தாலும் முழுவதும் விட்டுக் கொடுத்துவிட முடியாது. சிக்கல்கள் முரண்பாடுகள் இருந்தாலும் ராணுவ கம்பெனிகளும் அரசும் ஒருவரையொருவர் விட்டுக் கொடுத்துவிடவும் மாட்டார்கள். தனியார்மயமாக்கல் என்பது ஏதோ தனியார் மருத்துவமனை, பள்ளி, குடிநீர் விநியோகம் என்று நினைத்திருந்த நமக்கு ஒரு புதிய பரிமாணத்தைக் காட்டிக் கொண்டிருக்கிறது வாக்னர்..பாக்ஸ்மேட்டர்: கார்பரேட்டுகளின் ராணுவம்!வாக்னருக்கு முன்னோடியான நவீன தனியார் ராணுவ கம்பெனிகளை உருவாக்கியது அமெரிக்கா தான். சோவியத் யூனியன் தகர்ந்ததும் அமெரிக்க தனது ராணுவத்தைப் பெருமளவு குறைத்தது. ஆனால் பன்னாட்டு நிறுவனங்களுக்கு எதிரான மக்கள் போராட்டங்கள் உலகின் பல இடங்களில் வெடித்ததும், அல் கைதா போன்ற அமைப்புகள் தோன்றியதும் வேலையிழ்ந்த ராணுவ வீரர்களைக் கொண்டு ஹாலிபர்ட்டன், டைன்கார்ப், பிளாக் வாட்டர் என்ற ராணுவக் கம்பெனிகளை பன்னாட்டு கார்ப்பரேட் நிறுவனங்கள் உருவாக்கின. இந்தத் தனியார் படைகள் கம்பெனிகளாக பதிவு செய்யப்பட்டவை. தங்கள் நட்பு அரசுக்கு உதவவும், அமெரிக்க நலன்களைப் பாதுகாக்கவும் இந்தப் படைகளை உலகம் முழுவதும் அமெரிக்க பன்னாட்டு நிறுவங்கள் அனுப்பின..இந்த நிறுவங்கள் ஆப்பிரிக்காவில் வைரச் சுரங்கங்களை சூறையாடியும், ஈராக் ஆப்கானிஸ்தான் சிரியாவில் அரிய கலைப் பொருட்களைக் கொள்ளையடித்தும், பெட்ரோல் கடத்தலில் ஈடுபட்டும், யூகோஸ்லாவியாபோன்ற நாடுகளில் பாலியல் விடுதிகள் நடத்தியும் மாபெரும் லாபம் அடைந்தன. அமெரிக்க அரசிலும் பெரிய செல்வாக்குப் பெற்றன. அதே நேரம் இவை மிகப் பெரிய அளவுக்கு மனித உரிமை மீறல்கள் செய்தும்படுகொலைகளில் ஈடுபட்டும் பெயரைக் கெடுத்துக் கொண்டன. இந்தப்படைகள்எல்லாநாட்டுவீரர்களையும்சேர்த்துக்கொண்டன. சித்திரவதை செய்வதில் வல்லமை பெற்றவர்களுக்கு சிறப்பு ஊதியங்கள் வழங்கப்பட்டன. தி விசில் புளோவர் என்ற திரைப்படம், டைன்கார்ப் நிறுவனம் பெண்களைக் கடத்தி பாலியல் தொழிலில் ஈடுபடுத்துவதை உலகறியச் செய்தது