-ஆர்.என்.ராஜன் ஒரு சமயம் ஆந்திராவில் உள்ள சித்தூருக்கு விஜயம் செய்திருந்தார், மகாபெரியவர். அந்த சமயத்தில் ஒருநாள் மகானை தரிசிக்க வந்த பாமர பக்தர் ஒருவர், வித்தியாசமான கோரிக்கை ஒன்றை வைத்தார்..“சுவாமி, உங்க பாதம் எங்க ஊர்ல படணும்னு, ஊர்க்காரங்க எல்லாம் ஆசைப்படுறோம்... தயவு செஞ்சு நீங்க வரணும்!” வேண்டுதலாகவே அவர் கேட்க, அமைதியாகப் புன்னகைத்த மகான், “உங்க ஊர் எது? அது எங்கே இருக்கு?” எனக் கேட்டார்.ஊரின் பெயரைச் சொன்ன பக்தர். அப்போது மகான் தங்கியிருந்த இடத்தில் இருந்து சுமார் மூன்று மைல் தொலைவில் இருப்பதாகச் சொன்னார்..அதைக் கேட்டதும் புன்னகைத்த மகான், “நீ கேட்டபடியே உங்க ஊருக்கு வரேன். இன்னிக்கு இங்கேயே தூங்கு, நாளைக்கு விடியங்காத்தால புறப்படலாம்!” சொல்ல, பெரும் மகிழ்வில் ஆழ்ந்தார் அந்த பக்தர். சொன்னதுபோலவே மறுநாள் காலையில் எழுந்து நித்யகர்மாக்களை முடித்துவிட்டுப் புறப்பட்டார், மகான். தங்கள் வேண்டுகோளை ஏற்று மகாபெரியவர் வந்ததில் ஊர் மக்கள், ஆனந்தித்தார்கள். பெரும் திரளாக வந்து தரிசித்தார்கள். பாமர மக்களான அவர்கள் பேரன்புடன் கொண்டுவந்தவற்றை ஏற்றுக்கொண்ட மகான், “உங்க அன்பைப் பார்த்ததும் இன்றைக்கு இங்கேயே தங்கலாம்னு தோணுது. அதுக்கு இடம் பார்த்து சொல்றிங்களா?” எனக் கேட்டார். கொஞ்சம் யோசித்த பின், எல்லோருமாகச் சேர்ந்து ஓர் இடத்தைச் சொன்னார்கள். ஆனால் மகான், “உங்க ஊர்ல தெற்குப் பக்கத்துல ரொம்ப வயசான ஒருத்தர் சின்னதா வீடு கட்டிக்கொண்டு இருக்கிறாரே... பூச்சுவேலைகூட முடியாத அந்த வீட்டில் நான் தங்கிக்கறேன். அவர்கிட்டே சம்மதமான்னு கேட்டுட்டு வாங்க!” என்று சொல்ல, அப்படி ஒரு வீடு தங்கள் ஊரில் கட்டப்படுவதை மகான் எப்படித் தெரிந்துகொண்டார் என்று ஆச்சரியப்பட்ட ஊர் மக்கள், வேகமாகச் சென்று அந்த வீட்டின் உரிமையாளரிடம் சொல்ல, “மகான் என் வீட்டுல தங்கறதுக்கு நான் கொடுத்து வைச்சிருக்கணும்!” என்று சம்மதித்தார் அவர்..பக்தர்கள் தரிசனத்துக்குப் பின் அந்த வீட்டுக்குச் சென்ற மகான், கர்மானுஷ்டானங்களை முடித்துவிட்டு உறங்கச் சென்றார். அடுத்த நாள் அதிகாலை, எல்லோரும் நித்திரையில் இருக்க, கிணற்றில் யாரோ தண்ணீர் இறைக்கும் சத்தம் கேட்டு எழுந்தார், வீட்டின் உரிமையாளரான பக்தர். இந்த நேரத்தில் நீர் இறைப்பது யாராக இருக்கும்? என நினைத்தபடியே வந்தவர், மகான், கிணற்றடியில் நின்றபடி மரச்செம்பால் நீர் இறைத்து நீராடிக்கொண்டிருப்பதைப் பார்த்தார். “சுவாமி, அந்தத் தண்ணி உப்பா இருக்...” என சொல்லத் தொடங்கியவரைத் தடுத்தார், மகான். “அதெல்லாம் என்னை ஒண்ணும் செய்யாது. ஏன் நானே ஜலம் இறைச்சுக் குளிக்கிறேன் தெரியுமா? இதோ இந்த மரச்செம்பைப் பார், விளிம்பு உடைஞ்சு கையில குத்துது. அதான், நானே பக்குவமா இறைச்சுக்கறேன்! வேற ஒரு செம்பு நீ வாங்கிக் குடுக்கறியா?” கேட்க, திக்குமுக்காடிப்போனார் பக்தர்...அன்று மாலையே மகானுடைய அணுக்கத்தொண்டர்களைஅனுப்பி புதிய மரச்செம்பு வாங்கிவரச் செய்தார், அந்த பக்தர். அதனை ஏற்றுக்கொண்டு பக்தரை ஆசிர்வதித்துவிட்டுப் புறப்பட்டார், மகான். அதன் பிறகுதான் அங்கே மகான் நடத்திய அற்புதம் அனைவருக்கும் தெரியவந்தது. ஆமாம். அது நாள் வரை உப்பு நீராக இருந்த அந்த வீட்டின் கிணற்று நீர், இப்போது இளநீராக இனித்தது.!