-ஆர்.என்.ராஜன். அது ஒரு ஆடி மாதம். மகாபெரியவர், கலவை என்கிற திருத்தலத்தில் முகாம் இட்டிருந்தார்.அப்போது ஒருநாள், அவரை தரிசிக்க வந்தவர்களில் ஆஸ்திரேலியாப் பெண்மணி ஒருவரும் இருந்தார். தமிழக கைட் ஒருவர், அவரை அழைத்துவந்திருந்தார்..மகான் முன்பு நீண்டு இருந்த வரிசையில் நின்று தங்கள் முறை வந்ததும் மகான் முன் நின்றார்கள் அவர்கள். எல்லோரும் செய்வதைப் பார்த்து அந்தப் பெண்மணியும் மகானை விழுந்து நமஸ்காரம் செய்தார்.ஒரு சில நிமிடம் அவர்களையே உற்றுப் பார்த்த மகான், “அவங்க மனசுல ஏதோ ஒரு சந்தேகம் இருக்கு போல தெரியுதே…” கைடிடம் கேட்டார்.மகான் சொன்னதை அந்தப் பெண்மணியிடம் மொழிபெயர்த்துச் சொன்னார், கைட்.அதைக் கேட்ட அந்தப் பெண்மணி விழிகள் விரியத் தலையை அசைத்ததிலேயே மகான் சொன்னது நிஜம் என்பது புரிந்துபோயிற்று எல்லோருக்கும். “அவங்களுக்கு என்ன சந்தேகமாம்?” என்றெல்லாம் எதுவும் கேட்காமல், “கொல்லைப் புறம் இருக்கிற கிணற்றங்கரைக்கு அவங்களைக் கூட்டிக்கொண்டு வாங்க!” என்றுவிட்டு தான் முன்னே சென்று அங்கே நின்றார், மகான்.கிணற்றின் மறு பக்கம் நின்று கொண்டிருந்த மகான், அங்கே இருந்தே தன்னைப் பார்க்கும்படி அந்தப் பெண்மணியிடம் சொன்னார்.அதையடுத்து மகானை சில நிமிடம் உற்றுப்பார்த்துக்கொண்டிருந்த அந்தப் பெண்மணி, திடீரென்று ‘‘ ஐ ஸா.! ஐ ஸா..!” என்றுவிழிகள் விரியக் கத்த அவள் முகத்தில் ஏதோ ஒரு அபூர்வக் காட்சியைப் பார்த்துவிட்ட பரவசம் தெரிந்தது.அதைத்தொடர்ந்து, தன் இடத்துக்குத் திரும்பிய மகான், அந்தப் பெண்மணிக்கு ஆப்பிள் ஒன்றைத் தந்து ஆசிர்வதித்தார். பெற்றுக் கொண்டு சந்தோஷமாகப் புறப்பட்டார் அவர்.அதுவரை அமைதியாக இருந்த அந்தப் பெண்மணியின் கைட், ‘‘மேடம், ஒய் யூ ஷௌட்..!” எனத் தொடங்கி, மகானைப் பார்த்தபோது வியப்பாகக் குரல் எழுப்பியதற்கான காரணத்தைக் கேட்டார்.“சின்ன வயசுல இருந்தே எனக்கு ஒரு கனவு அடிக்கடி வந்துகிட்டிருக்கு. அதுல அழகான பெண் தெய்வம் ஒண்ணு நிறைய ஆபரணங்கள் அணிஞ்சுகிட்டு காட்சி தரும். அது என்ன காட்?னு எனக்குத் தெரியலை. இங்கே யார்கிட்டே அதைக் கேட்கலாம்னு நினைச்சுகிட்டு இருந்தேன்.இப்போ இந்த ஹோலி மேனை தரிசனம் செஞ்சப்போ, இவரோட உருவம் அந்த காட் மாதிரியே தெரிஞ்சுச்சு. அதோட யாரோ காமாட்சி, காமாட்சினு கூப்பிடறாப்புல சவுண்ட் எனக்குக் கேட்டுச்சு. அதனாலதான் அப்படி எக்ஸைட் ஆனேன். என் ட்ரீம்ல வர்ற காட் நேம் காமாட்சினு தெரிஞ்சுகிட்டேன். என்னோட ட்ரீம் பத்தி நான் எதுவும் சொல்லாமலே இந்த மகான் என்னோட டவுட்டை கிளியர் பண்ணி வைச்சது ரொம்பவே ஆச்சரியமா இருக்கு!”வெளிநாட்டுப் பெண்மணி சொல்லச் சொல்ல, மற்ற யாரும் அறியா வண்ணம் அவருக்கு விசேஷ தரிசனம் தந்த மகானின் திருவருளை உணர்ந்து சிலிர்த்துப் போனார்கள் எல்லோரும்!