- ஆர்.என்.ராஜன்ஒரு சமயம் மகாபெரியவர் கும்பகோணம் அருகே உள்ள திருத்தலங்களுக்கு யாத்திரை செய்துகொண்டிருந்தார்.அப்போது ஒரு நாள், அவர் முகாமிட்டிருந்த இடத்துக்கு வேத பாடசாலை ஒன்றில் இருந்து முப்பதுக்கும் மேற்பட்ட குழந்தைகளை பாடசாலை ஆசிரியர்களான இருவர் அழைத்துவந்திருந்தார்கள்.மகான் முன்னிலையில் வந்து நின்ற குழந்தைகளை, சில மந்திரங்களைச் சொல்லச் சொன்னார்கள் வேதபாடசாலை ஆசிரியர்கள்..சந்தோஷமாக சொல்லத் தொடங்கிய குழந்தைகள், சில வரிகளுக்குப் பிறகு கொஞ்சம் தடுமாறினார்கள். திணறினார்கள். அதைக்கண்டு அதிர்ந்துபோனார்கள் பாடசாலை ஆசிரியர்கள். அதோடு, ‘மகான் முன்னிலையில் இப்படிச் சொதப்புகிறார்களே, நாம் சரியாகக் கற்றுக்கொடுக்கவில்லை என்று பெரியவர் நினைத்துவிடுவாரோ’ என்ற நினைப்பும் சேர்ந்துகொள்ள, அவர்களில் ஒருவருக்கு சட்டென்று கோபம் தலைக்கு ஏறியது.மகான் முன் இருக்கிறோம் என்பதையும் மறந்து, “ ஒழுங்காத்தானே கற்றுக்கொடுக்கறோம்… இப்படித் தப்புத்தப்பா சொல்லி, மானத்தை வாங்கறீங்களே… நீங்க எல்லாம் சாப்பிடத்தான் லாயக்கு!” என்று எரிச்சலாகக் கத்தத்தொடங்க, சட்டென்று கையை உயர்த்தினார் மகான்.அடுத்த நொடி தவறு உணர்ந்து அவர் வாயைப் பொத்திக்கொள்ள, மந்திரம் சொல்லிக் கொண்டிருந்த குழந்தைகளோ, ஆசிரியரின் திட்டலை நினைத்து அழத்தொடங்கினார்கள்.வாத்சல்யத்தோடு அவர்களைப் பார்த்தார், மகான். “யாரும் அழக்கூடாது. நீங்க எல்லாருமே ரொம்ப நல்லாத்தான் மந்திரம் சொல்றேள்.! நான் உங்க வாத்தியார்கிட்டே திட்டவேண்டாம்னு சொல்றேன். நீங்க எல்லாம் போய் யானை, குதிரை, எல்லாத்தையும் சுத்திப் பார்த்துட்டு வாங்க … அதுக்கப்புறம் மந்திரம் சொல்லலாம்” சொன்ன மகான், குழந்தைகளைத் திட்டியவரை அங்கேயே இருக்கச் சொல்லிவிட்டு, மற்றொரு ஆசிரியரை அவர்களைக் கூட்டிக்கொண்டுபோய் சுற்றிக்காட்டச் சொன்னார்..அப்படியே அவர்கள் நகர்ந்ததும், “குழந்தைகளை கண்டிக்கறது தப்பில்லை… ஆனா என்ன சொல்லித் திட்டறோம்கற வார்த்தைகள்ல நிதானம் வேணும். குழந்தைகளுக்கு இடம், இத்தனை கூட்டம் எல்லாம் புதுசு. யாத்திரை ஊர்வலத்துல வரக்கூடிய யானை, குதிரை இதெல்லாம் பார்க்க ஆச்சரியமா இருந்திருக்கு. அதை வேடிக்கை பார்த்துக்கொண்டே சொன்னதால மந்திரத்துல கவனக்குறைவு வந்திருக்கு. அதை குருவான நீங்கதான் புரிஞ்சுக்கணும்!” அவருக்கு மடும் கேட்கும்படி மென்மையாகச் சொன்ன மகான், கொஞ்சம் நிறுத்திவிட்டுத் தொடர்ந்தார்.“குழந்தைகளை சாப்பிடத்தான் லாயக்குன்னு திட்டினீங்களே… இன்னிக்குக் கார்த்தால இருந்து இப்போவரைக்கும் எதுவும் சாப்பிடாம இருந்தும், அவா ஒருத்தரும் பசிக்கறதுன்னு சின்ன முக சுளிப்புகூட காட்டலையே… அப்போ நீங்க திட்டினது சரியா?” மகானின் குரலில் இருந்த கடுமை, பாடசாலை குருவை பதறச் செய்தது.. “பெரியவா மன்னிக்கணும். இனிமே இப்படிச் செய்யமாட்டேன்… குழந்தைகளை அநாவசியமா திட்டமாட்டேன்… அதோட என் கோபத்தையும் கட்டுப்படுத்திக்கிறேன்!” தழுதழுக்க அவர் சொல்லி முடிக்கவும் குழந்தைகள் எல்லாவற்றையும் பார்த்துவிட்டு வரவும் சரியாக இருந்தது.அதன் பிறகு மளமளவென்று மந்திரங்களைச் சொல்லி அசத்திய குழந்தைகளுக்கு, முகாமிலேயே அன்னம் அளிக்கச் சொல்லி சந்தோஷமாக ஆசிர்வதித்து அனுப்பினார், மகான்.